Saturday, December 5, 2009

1994 ம் ஆண்டு பொதுத்தேர்தல்[வன்னி]மோசடி நிறைந்தது இணைப்பு:- 3இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்............................................

Tuesday, December 1, 2009

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் அகதிகளும்,முஸ்லிம் சமாதானச் செயலகமும்- இணைப்பு:-2

இத் தலைப்பிலான முதலாவது இடுகையின் போது எமது நாட்டின் மூன்று சமாதானச் செயலகங்களின் பெயர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவற்றில்முஸ்லிம் சமாதானச் செயலகம் தொடர்பகவும், முல்லத்தீவு முஸ்லிம் அகதிகள் தொடர்பாகவும் எழுத விளைகின்றேன். முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகள் பற்றி அவர்கள் வாழும் அல்லது தொழில் செய்யும் பிரதேசத்தை சார்ந்தவகள் தவிர மற்ற எவருக்கும் முல்லைத்தீவில் முஸ்லிம்கள் இருந்தார்களா? என்பது தெரியாத விடயமாக இருந்துள்ளது.மேலும் முல்லைத்தீவு மாவடத்திலிருந்தும் முஸ்லிம்கள் அகதிகளாக 1990 ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியேறினார்களா?அல்லது 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களும் இருக்கிறார்களா? என்ற விடயங்கள் இலங்கையின் பிற பிரதேசங்களுக்கும், சர்வதேச மட்டத்திலும் தெரியாத விடயமாக உள்ளது. இது சார்பான பொறுப்புக்களை அடுத்தவர்களிடம் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் விட்டதனால் இந்த இழப்பு இவர்களுக்கு ஏற்பட்டதெனலாம். இவர்களிடம் இது சார்பான வல்லமை 1987 மற்றும் 1990 களில் இன்மையே இதற்கான காரணமெனலாம்.வட மாகாண முஸ்லிகளைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் சானத்தொகையில் யாழ்ப்பணம்,வவுனியா,மன்னர் ஆகிய மாவட்ட முஸ்லிம்களை விட குறைந்தவர்கள் பொருளாதாரத்தில் குறைபாடுள்ளவர்கள், மேன்னிலை ஆங்கில,சிங்கள மொழியறிவு உள்ள அரச அதிகாரிகளை கொண்டிராதவர்கள், பொருத்தமானவர்கள் அரசியலில் ஈடுபடாமை என்பனகுறிப்பிடத் தக்கதெனலாம்.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களைப் போலில்லாது யாழ்ப்பாணம்,மன்னார் ஆகிய மாவட்டங்களை சார்ந்த முஸ்லிம் உயர் அரச அதிகாரிகளும், பெரும் வர்த்தகர்களும் வடமாகாணத்தி்ற்கு வெளியே நீண்ட காலமாக வாழ்ந்துவந்ததினால் அச்செல்வாக்கு அவர்கள் சார்பான விடயங்ககை வெளிக்கொண்டுசெல்ல வசதியாக அமைந்தது எனலாம். முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்அகதிகளைப் போலவே,வவுனியா மாவட்ட முஸ்லிம் அகதிகளும் மறைகடிக்கப்பட்டார்கள்.
அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சமாதான மேம்பாடுகள் சார்பான நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்ட பின்னர்தான் சமாதானச் செயலகங்களின் இந்த முஸ்லிம் சமாதான செயலகமும் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பில் அதிகமாக பாதிக்கப்பட்ட முல்லைதீவு மாவட்ட அகதிகள் இந்த செயலகத்தின் நிர்வாகத்தினுள் உள்வாங்கப்படவில்லை. கறிவேப்பிலை போன்று முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளைப்பயன்படுத்துவதுண்டு. அச் செயலகம் என்ன வேலைத் திட்டங்களைச் செய்கிறதென்று முல்லைத்தீவுமுஸ்லிம் அகதிகளுக்குத் தெரிவதில்லை.
2005 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த செயலகத்திற்கு நோர்வே அரசுஇரண்டு கோடியே முப்பத்தொன்பது இலச்சம் ரூபாய் வழங்கியதாக பத்திரிகை செய்தி மூலம் அறிந்தமுல்லைத்தீவு அகதி முஸ்லிம்கள் சிலர் தாம் தொடர்ந்தும் விற்கப்படுவதாகஉணர்ந்தனர்.எனவே முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தி்ற்கென ஒரு தனியான முஸ்லிம் சமாதானச் செயலகம் அமைக்க முயன்றனர். முல்லைத்தீவைச் சேர்ந்த எம்.எஸ்.பரீத் அவர்களை அமைப்பாளராக கொண்டு செயலகத்தின் நோக்கம்,குறிக்கோள் போன்றதகவல்களுடன் துண்டுப் பிரசுரம்,பத்திரிகை அறிவிப்பு மற்றும் விழிப்பு [T.N.L.T.V]நிகழ்ச்சி மூலமும் முல்லைத்தீவு மக்களுக்கும் , புத்தளம் மாவட்ட அரச சார்பற்றநிறுவனத்தின் மாதாந்தக் கூட்டத்திலும் விளப்பரம் செய்யப்பட்டது. முல்லைதீவு மாவட்டத்துக்கென உருவாக்கப்பட்டால் சர்வதேச மட்டத்தில்அதிக செல்வாக்குடையதாக விளங்கும் என்பதனை உணர்ந்த சமாதானச்செயலமும், புத்தளத்தில் இயங்கும் சில பெரிய அரச சார்பற்ற நிறுவனங்களும்திட்டமிட்டு முல்லைத்தீவு முஸ்லிம் சமாதானச் செயலகம் உருவாக்கப்படுவதை விருப்பவில்லை மறைமுகமாகத் தடுத்தனர். இதுவரை காலமும் கொழும்பில் வைத்திருந்த முஸ்லிம் சமாதானச் செயலகம் புத்தளத்திலும் குட்டி போட்டது.
இவ்வலுவலகத்தில் முல்லைதீவின் பூரண வரலாறு தெரியாத[இளையோர்] ஒரு ஆசிரியரும், ஒரு மௌலவி ஆசிரியரும்,ஒரு முகாம் அதிகாரியுமாக மூவர் பெயரவில் முல்லைத்தீவு மாவட்டமுஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பத்தொன்பதாவது வருட நிறைவு நாளையொட்டி புத்தளம் முஸ்லிம் சமாதானசெயலக கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்திய செய்திவெளியிடப்பட்டது . அம்மாநாட்டு மேடையில் அமர்ந்திருப்பது மன்னார் மாவட்டத்தை பிரதி நிதிப்படுத்தும் ஒருவரும்,புத்தளம் மாவட்டத்தை பிரதி நிதிப்படுத்தும் இருவருமாகும் .
இச செய்தியாளர் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாணமுஸ்லிம்கள் பற்றியும், இவர்களின் வருகையினால் பாதிக்கப்பட்ட புத்தளம்மக்கள் பற்றியுமாகும். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ம் ஆண்டு ஜூலை மாதம் இடம் பெயந்து புத்தளத்துக்கு வந்தவர்கள் ற்றி இங்கு எதுவும் பேசப்படவில்லை . இது முலைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மனதை புண் படுத்தும் செயலாகும்.
பொதுவாக புத்தளத்தில் உள்ள முஸ்லிம்கள் இடம் பெயர்ந்த என்றவிடயத்தை மறைத்து, வடமாகாண முஸ்லிகள் அனைவரும் பலவந்தமாகபுலிகளால் வெளியேற்றப்பட்டவர்கள். என விவாதிப்பது ஏன்? [பொய்பேசுவது] இஸ்லாத்தின் நோக்கத்தை மறந்து இவ்வுலகத்தின் நன்மைக்காகவா? அல்லது வரலாறு ஒன்றை ஒரே மாதிரி எழுதவா? இனியாவது சிந்தித்துசெயற்படுங்கள்.
குறிப்பு:- இது சார்பான ஆதாரங்கள் www.muslimrefugee.blogspot.com வெப்தளத்தின் முன்னைய செய்திகளை பார்க்கவும்.