Wednesday, March 30, 2011

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன?...!

பரங்கிப்பேட்டை -ஜி .நிஜாமுத்தீன்

தொடர் - 1             

அறிமுகம்.
உலக அளவில் 200 கோடி மக்களால் - அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.

இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது.

Tuesday, March 29, 2011

இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு


நெல்லை, இப்னு கலாம் ரசூல்
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை.

Monday, March 28, 2011

சின்னச்சின்ன செயற்பாடுகள் நமக்கு பெரிய நன்மைகளை தரவல்லது.

சி
முஸ்லிம்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

Saturday, March 26, 2011

முஸ்லிம் சமூகத்துக்கும் அரசியல் தீர்வு அவசியம்: மாவை சேனாதிராசா


[ வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011, 10:10.24 PM GMT ]
தமிழ் சமூகத்தைப் போன்றே முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Wednesday, March 23, 2011

சுனாமி அல்லாஹ்வின் வல்லமை

Print E-mail

ஃபாத்திமா ஷஹானா, கொழும்பு
''(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.'' (அல்குர்ஆன் 13:39) 
சுனாமி (tsunami) ... ஆறு வருடங்களிற்கு முன் இந்தப் பெயர் உலக மக்களைப் பொருத்த வரை பிரபல்யம் இல்லாத அந்நியமான ஒரு பெயராகவே இருந்தது. ஆனால் இன்று இப் பெயரை கேட்ட மாத்திரத்தில் எல்லோர் மனதிலும் பேரலைகள் அடிக்கத் தொடங்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பெயர் பிரபல்யம் வாய்ந்துள்ளது.

Saturday, March 19, 2011

(ஆ) சாமிகள் யார்?       மனித சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் இணைவது என்பது ஒரு நியதி. அதை விடுத்து, ஆணோ, பெண்ணோ, தனித்துத் துறவறம் என்ற நிலையில் வாழ்வது என்பது மனித நீதிக்கும் மனித நேயத்துக்கும் மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்துக்கும் எதிரான செயலாகும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் தாய், தந்தையர் துறவறம் பூண்டிருந்தால் இந்த மனிதன் உருவாயிருக்கவே முடியாது. தான் வந்த பாதையை மறந்த உணராதவர்களின் தத்துவமே துறவறம்.

Thursday, March 17, 2011

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (1)


Print E-mail

டாக்டர் ஷேக் சையது M.D அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
''இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்'' என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.

Tuesday, March 15, 2011

றஹ்மத்புர கிராம வீதிக்கு இளம் அரசியல்வாதி கமால்தீன் இர்ஸாத் அவர்களினால் தெருவிளக்கு மின் குமிழ் பொருத்தப்பட்டது.

பத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 1995ம் ஆண்டு அன்றைய புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் கப்பல்துறை அமைச்சரும்  முஸ்லிம்  காங்கிறஸின் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஸரப் அவர்களின் முயற்சியினால் வடமாகாண அகதிகளுக்கான முதலாவது இடைக்கால மீள் குடியேற்ற கிராம கொததாநதீவு கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீற்ரர் தொலைவில் உருவாக்கப்பட்டது.

Saturday, March 5, 2011

ஒற்றுமையென்னும் கயிற்றைப்பற்றிப் பிடித்துக கொள்ளுங்கள்.

       ண்மையில்.நான்  இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவொன்றின் இறுவெட்டைப் பார்க்கும்  வாய்பபுக் கிடைத்தது. அதில் “ஒற்றுமை என்னும் கயிற்றைப்பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்“என்று மனித சமூகத்தைப்பார்த்து கூறிய அழைப்பாளர் டாக்டர் சாஹிர்நாயக் அவர்கள் அந்த ஒற்றுமையென்னும் கயிறு அல்-குர்ஆன்னென அதனை உயர்த்தி காண்பித்தது என்னை மட்டுமல்ல சுவர்க்கத்தை விரும்பும்