Tuesday, March 15, 2011

றஹ்மத்புர கிராம வீதிக்கு இளம் அரசியல்வாதி கமால்தீன் இர்ஸாத் அவர்களினால் தெருவிளக்கு மின் குமிழ் பொருத்தப்பட்டது.

பத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 1995ம் ஆண்டு அன்றைய புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் கப்பல்துறை அமைச்சரும்  முஸ்லிம்  காங்கிறஸின் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஸரப் அவர்களின் முயற்சியினால் வடமாகாண அகதிகளுக்கான முதலாவது இடைக்கால மீள் குடியேற்ற கிராம கொததாநதீவு கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீற்ரர் தொலைவில் உருவாக்கப்பட்டது.

  இக்கிராமத்தின் பொதுத்தேவைகள் அனைத்தும் வன்னி மாவட்ட அரசியல் வாதிகளினால் செய்யப்பட்டு வந்துள்ளது. தெருவிளக்குகளுக்கு புதிய மின் குமிழ்கள் பொருத்துவது, திருத்துவது போன்ற வேலைகளைக்கூட வன்னி மாவட்ட அரசியல்வாதிகளினாலதான  செய்யப்பட்டு வந்தது.
 ஆயினும் கடந்த சில வருடங்களாக  ஒன்பது தெரு விளக்குகளில் இரண்டு விளக்குகள் மட்டுமே எரியும் நிலையிலுள்ளது.இதன் காரணமாக கிராம வீதிகள் அதிகமான இருள் நிறைந்து காணப்பட்டது.கடந்த சில வருடங்களாக இது சார்பாக வன்னி மாவட்ட அரசியல் வாதிகளுக்கு  எழுத்து மூலமாக அறிவித்தும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை.கடந்த பொதுத் தேர்தலின் போது அமைச்சர் றிசாத பதுறுத்தீன் அவர்கள் தமது பணியாட்களுக்கு இக்கிராமத்தின் அனைத்ததுவீதிவிளக்குகளையும் திருத்தம் செய்யும்படி பணித்திருந்தும்  பணியாட்கள் பலமுறை வருவதாகக் கூறி ஏமாற்றி விட்டிருந்தனர்.அதாவது சாமி வரம் கொடுத்தாலும்  ........... என்ற கதையாகவே காணப்பட்டது. இதற்கான காரணத்தை இக்கிராவாசிகள் பலவாறாக பேசும் நிலை காணப்பட்டது.
    2011 ம்ஆணடு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல நடக்கவிருக்கும் இக்கால கட்டத்தில்  கற்பிட்டி பிரதேசசபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் அரசியலில் பிரவேசித்திருக்கும் இளைஞரான கொத்தாந்தீவு  கமால்தீன் இர்ஸாத் அவர்கள் தனது சொந்தப் பணத்தைக் கொண்டு றஹ்மத்புர கிராமத்தில் பிரதான இடத்தில் தெரு விளக்கொன்றை  சீர்செய்து கொடுத்திருக்கின்றார்.இச்செயற்பாடானது இக்கிராம வீதிககு மடடுமல்ல அகதிமக்களின் மனதிலும் ஒளியுட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதற்காக குறித்த கமால்தீன் இர்ஸாத் அவர்களுக்கு முஸ்லிம் அகதியும் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.அல்லாஹ்வின் றஹ்மத்தும் அவருக்கு கிடைக்கப்பிரார்த்திக்கின்றான் “முஸ்லிம் அகதி”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.