Saturday, October 30, 2010

கடத்தப்பட்ட சி.ரீ.எப் நிறுவனத்தின் ஆரம்ப கர்த்தாக்களின் ஒருவரான பி.ராசிக் அவர்களை மீட்பது சார்பான கூட்டம். ( திருத்தம்)

கடத்தப்பட்டுள்ள சமூகநல ஆர்வலரும், சி. ரீ.எப் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும் ,கிராம சேவையாளருமான பி. றாசிக் அவர்களைமீட்டெடுப்பது சார்பான கூட்டம் புத்தளம் பெரியபள்ளி வாசலில் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் தலைமையில் கடந்த 2010.10.29ம் திகதி நடைபெற்றது.இககூட்டத்தில் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையினரும்,புத்தளம் பள்ளிவாசல் நம்பிக்கையாளரும்,சமூகசேவை அமைப்புக்களின் பிரதி நிதிகளும்,கடத்தப்பட்டவரின குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
டத்தப்பட்ட P.றாஸிக் அவர்களின் மகன் றிப்கான் என்பவர் குறித்த சம்பவம் சார்பாக விபரங் களை கூறினார். பள்ளிவாசலின் நிருவாகச்செயலாளர் அவர்கள் றாஸிக் G.S அவர்களை மீட்பது சார்பாக இதுவரை தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதனை விபரமாகக் கூறினார்.இதன் பின்னர் இக்கடத்தல் சார்பாக கடந்த காலங்களில் வெளியிடப்பட்டட துண்டுப் பிரசுரங்களில் இடம் பெயர்ந்தவர்களின் மனம் புண்படும்படியான சொற்பிரயோகங்கள் பாவித் திருப்பது பற்றி இடம்பெயர்ந்தவர்கள் தமது அதிர்ப்தியைத் தெரிவித்தனர்.கூட்டநேரத்தில் அதிக நேரம் இது சார்பாகவே பிரதிவாதங்கள் இடம் பெற்றது. வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான புத்தளம் மாவட்ட உபஅலுவலகத்தின் உதவி ஆணையாளர் மதீன் அவர்கள் கருத்துரைக்கையில் வடமாகாண அகதிகள் மீழ்குடியேற்றத்திற்காக வடமாகாணத்திற்கு போகாமல் புத்தளத்திலிருந்து புத்தளத்து மக்களுடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெறவேண்டுமென தீர்மானித் திருந்தனர்.இத்துண்டுப்பிரசுரம் அவர்களின் மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இப்போது அதிகமானவர்கள் தமது பிரதேசத்தில் குடியமரவென தமது ரேஸனை வெட்டித் தரும்படி அலுவலகம் வருவதாகக்கூறியது,கவனத்தில் கொள்ளவேண்டியது. இறுதியில்இனிவரும்காலங்களில் இப்படியான செயற்பாடுகள் நடக்காமல் இருசாராரும் கவனமாக செயலாற்ற வேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. குறிப்பாக இக்கடத்தலுடன்இடம் பெயர்தவர்களில் ஒருசிலர் அல்லது ஒரு குழு மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால் எல்லா இடம்பெயர்ந்தவர்களையும் மனம்நோகச் செய்வது தவறெனவும் அகதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்தும் அன்ஸாரிகள்,முஹாஜிரீன்கள் மத்தியில் நல்லுறவு பேணப்படுதல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
அதனைத்தொர்ந்து கடத்தலுடன் தொடர்புடையவரென கடத்தப்பட்டவரின குடும்பத்தினரால் பெயர் குறித்துரைக்கப்படும் எருக்கலம்பிட்டி நவ்ஸாத் சார்பாக கலந்துரையாடப்பட்டது. இவர்சார்பாக நாகவில்லு(எருக்கலம்பிட்டி)பள்ளிவாசல் நிருவாகத்தினருடன் தொடர்பு கொளவதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன். தொடர்ந்து் இப்படியான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டுமெனவும், கடத்தப்பட்ட வரை மீட்க அனைவரும் ஒற்றுழைப்பு வழங்குவதாகவும் கூறினார்கள்.றுதியில் தவைர் சகல கேள்விகளுககம் விடைகளும் விளக்கங்குளும் வழங்கிய பின்னர் கூட்டம நிறைவடைந்தது.

Thursday, October 28, 2010

கடத்தப்பட்டுள்ளசமூகநல ஆர்வலர் பி.றாசீக் அவர்களை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்.



புத்தளம் பெரிய பள்ளி வாசல் CTFராசிக் கடத்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை. இதன் அச்சுப் பிரதிகளை புத்தளம் பிரதேசத்தில் உள்ள எல்லா ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்டுள்ள சமூகநல ஆர்வலர் P.ராசிக் அவர்களை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்!
அன்புள்ள பொதுமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
நாங்கள் முஸ்லிம்கள். சர்வ சக்தனான அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், மறுமை நாளையும் ஆழமாக விசுவாசித்திருப்பவர்கள். இஸ்லாம் கற்றுத் தந்த விழுமியங்களை, பண்பாடுகளை, கலாச்சாரப் பாரம்பரியங்களை, மனிதநேய மாண்புகளை முடிந்த அளவு ஏற்று, பின்பற்றி, வாழும் பிரதேசத்தில் வாழ்பவர்கள் நாம். 1990ம் ஆண்டுக்குப் பின் இப்பிரதேசம் இங்கு வந்த முஸ்லிம் சகோதரர்களால் வளம் பெற்று வலுப் பெற்று நமக்குள் நல்லெண்ணமும், நல்லுறவும் அன்னியோன்னியமும் வளர்ந்துள்ளதை நாம் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.
இப்படி ஒன்றிணைந்து வாழும் இச்சமூகத்தில் யாரும் விரும்பாத ஒரு அநியாயம் சுமார் 8 மாதங்களுக்கு முன் நடந்துள்ளது. CTF நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான P.ராசிக் கடத்தப்பட்டு இன்றுவரை அவரது நிலைமை என்னவென்று அறிய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை நீடிக்கின்றது. இது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் கூறப்பட்டன. அவரது குடும்பத்தாரும், அனுதாபிகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் இன்றுவரை விடிவில்லை.
கடத்தப்பட்ட P.ராசிக் என்பவர் குற்றம் இழைத்தவராய் இருந்தால் நாட்டின் சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தடை ஏதுமில்லை. இருபது வருட சகோதர ஒன்றிப்பு, சமாதான சகவாழ்வு ஆகியவற்றின் பின்பும் இத்தகையதோர் மனிதநேய அனர்த்தம் இடம்பெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது மட்டுமன்றி, பெரும் வியப்பையும், ஆழ்ந்த விசனத்தையும் இப்பிரதேசத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்கடத்தல், கப்பம் கோருதல், கொலை செய்தல் போன்ற மனிதநேய விரோத செயல்கள் இப்பிரதேசத்தின் இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களைப் பாதிப்பதுடன், குறித்த சம்பவம் பற்றிய அலட்சிப் போக்குடன் நாம் இருப்பது சமூகத்தில் மேலும் இப்படியான சம்பவங்கள் நிகழ வழிசமைப்பதாக அமையும். இச்சம்பவம் நவீன ஜாஹிலிய்ய செயற்பாடாகவும் சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்கும் நாசகார செயலாகவுமே நோக்கப்படுகின்றது.
மேற்படி கடத்தல் நிகழ்வு தொடர்பான போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்ற நிலையிலும் கடத்தப்பட்ட ராசிக் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே உள்ளன என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. இக்கொடூரச் செயலை இப்பிரதேசத்தில் வாழும் சகல முஸ்லிம்களும் தனது சகோதரனுக்கு நிகழ்ந்துவிட்ட அநியாயமாகக் கருதி ஒன்றிணைந்து குரல் கொடுப்பது சன்மார்க்கம் வேண்டி நிற்கின்ற சமூகக் கடமையாகும்.
ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நீ உன் சகோதரனுக்கு உதவிடு. அவன் அநியாயக்காரனாக இருப்பினும் சரி. அநியாயம் இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி" அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் இழைக்கப்பட்டவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், அநியாயம் இழைப்பவனுக்கு எவ்வாறு உதவுவது?" என்றார். இந்த வினாவுக்கு ரசூல் (ஸல்) அவர்கள் "அநியாயம் புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்" என்று கூறினார்கள். (புஹாரி-முஸ்லிம்) மேலும், "அநியாயம் இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். அவனது பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை கிடையாது. அநியாயம் இழைக்கப்பட்டவன் பாவியாக இருந்தாலும் சரியே!" என்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
அன்புள்ள சகோதரர்களே! இக்கொடுமையை அறிந்தும் முஸ்லிம்களாகிய நாம் வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது. அநியாயம் இழைத்தவனைப் பற்றி தெரிந்துள்ளவர்கள் அவன் மீது தங்கள் அழுத்தத்தை, செல்வாக்கைப் பிரயோகித்து, கடத்தப்பட்டவரை விடுவிக்க ஆவன செய்யவேண்டும். சுயநலம், குரோதம், நிறுவன உள்வீட்டு முறுகல் இதற்குக் காரணமாய் இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. எனவே, சமூகத்திலுள்ள உலமாப் பெருமக்கள், புத்திஜீவிகள், சமூகநல ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவான அழுத்தத்தை கொடுப்பது அவசியமும், அவசரமுமாகும். இந்த முன்னெடுப்பானது சமூக நல்லிணக்கத்துக்கும், ஒற்றுமையை கட்டிக் காப்பதற்கும் இன்றியமையாதது. அநியாயக்காரனை அறிந்திருந்தும் அவனையும் அவனது செயலையும் மூடிமறைப்பதற்கு முயற்சிப்பவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களே! அவர்களுக்கும் இக்கொடுமையில் பங்குண்டு என்பதை நினைவிற் கொள்வார்களாக.
ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு - அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான்"
(மிஷ்காத்)
கடத்தலுக்கான சதி முயற்சியில் ஈடுபட்டவர்கள், அதற்காக இன்று வரை உதவி வருபவர்கள், விடயமறிந்தும், தடுக்க முடிந்தும், மௌனியாக இருப்பவர்கள் நிச்சயமாக இச்சமுதாயத்தின் துரோகிகள். அவர்கள் அல்லாத பொதுமக்கள் யாரும் இதற்குப் பொறுப்பல்ல என்பதை நாம் புரிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு பங்கம் ஏற்படாது அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இத்தால் வினயமாக வேண்டிக் கொள்கிறோம். இது தொடர்பாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் கடந்த 22.10.2010ல் வெளியிட்ட கண்டன அறிக்கையும் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். இப்பிரதேசத்திலுள்ள சகல ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகங்களும் இது தொடர்பாக ஏனைய விடயங்களில் போன்றே ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்று வினயமாக வேண்டுகின்றோம்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட சமூக அமைப்புக்கள்
நன்றி www.puttalam.net16.net

குறிப்பு- www.puttalam.net16.net இணையத்தள முகவரியில் இது பெறப்பட்டடது.
இதற்கு முதல் இடுகையும்,அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பிற் கருத்துக்களும் மிகவும் சிறப்பாகவுள்ளது. முஸ்லிம் அகதி அதை தனது இணையத்தளத்தில்
பிரதி போட விரும்பவில்லை.நீங்கள் அதைப்பார்த்தால் உண்மைபுரியும்
.

Friday, October 15, 2010

இவர் கடத்திச்செல்லப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றது

சமூகநம்பிக்கை நிதியத்தின் [ C.T.F.] ஸ்தாபகர்களில் ஒருவரும்,கிராமசேவையாளரும் புத்தளம் மாவட்டததிலுள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின்கீழுள்ள சமீரகம மாதிரி வீட்டுத்திட்டக்கிராமத்தில் வசித்துவந்தவருமாக பி.றாசிக் அவர்கள்
இத்துண்டுப்பிரசுரம் புத்தளம் மாவட்டத்திலுள்ள கொத்தாந்தீவு ஜூம்ஆப்பள்ளி வாசலில் ஜூம்ஆத்தொழுகையின் பின்னர் பொதுமகன் ஒருவரால் வினியோகம் செய்யப்பட்டது.

இக்கடத்தலுடன் வடமாகாண இடம் பெயர்ந்தவர்களையும் சம்பந்தப்படுத்தி யிருப்பதால் இபபிரசுரத்தை வெளியிடுவதற்குமுஸ்லிம் அகதிமுன்னுரிமை வழங்குகின்றது.

இப்படியான அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றிமுஸ்லிம் அகதிபலவிடயங்களை முன்பே தந்துள்ளது. கவனத்தில் கொள்ளத்தக்கது.



Monday, October 11, 2010

ஜம்இய்யதுல் உலமாவின் பதில் கடிதம்

2010.06 01ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்ட கிளையினருக்கு எம்.எஸ்.பரீத் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது.திகதியிடப்படாதமேற்காட்டிய கடிதம்.2010.09.13 ம் திகதி முகவரியாளருக்கு கிடைத்தது. பரீத் எழுதிய கடிதத்தின் பிரதிகள் சுமார் நாற்பத்தைந்து பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தும் அப்பிரமுகர்கள் ஒருவருடனும் இவர்கள் தொடர்பு கொண்டதாகவும் தெரியப்படுத்தவில்லை.
குறிப்பு்- குறித்த கடிதத்தின் பிரதி இத்தளத்தில் 2010.06.05ம் திகதி
இடுகையிடப்பட்டள்ளது. மேலும் உரிய நேரத்தில் குறித்த கடிதத்தில் நினைவுபடுத்தப்பட்டுள்ள விடயங்கள்சார்பாக குறித்த அதிகாரிகளுடன் தொடர்புகளைப்பேணியிருந்தால் முல்லைத்தீவு முஸ்லிம்களினதும் மீள்குடியேற்றம் சார்பாக மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருக்க முடியுமெனவும். மேலும் முல்லைத்தீவில் எம்மவர்களினால் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களையும் தடுத்திருக்கலாம் எனவும் முஸ்லிம் அகதி நம்புகிறது.

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அவலங்கள்.

1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களெல்லாம் பலவந்தமாக தமிழீழவிடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டனர்.இப்போது இருபதுவருடங்கள்கழிந்தநிலையில் ,2009ம் ஆண்டுநடைபெற்ற இறுதியுத்தத்தில் இடம்பெயர்கப்பட்டு வவுனியா நலன்புரிமுகாம்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வசித்தவந்தவர்கள் மீள்குடியேற்றம் செய்யும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வடமாகாணத்திற்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்களும் மீள்குடியேற்றம் செய்ய அரசாங்கமும் முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிகாரிகளும் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
கடந்த ஜூன் மாதம் முல்லைத்தீவு கச்சேரியிலிருந்து மீள்குடியமர்தலுக்குப் பொறுப்பான அதிகாரியுட்பட இருவர் புத்தளம் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். இவர்களுக்கு உதவியாக கௌரவ அமைச்சர் றிசாத் பதுறுத்தீன் அவர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரான வை.ஜவாஹிர் அவர்களும் புத்தளத்திலுள்ள முக்கியமான முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் முகாம்களுக்குச் சென்று மீள்குடியேற்றம் சார்பான கூட்டங்களை வைத்து அக் கூட்த்தில் கலந்து கொண்டவர்களில் முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் செய்ய விரும்புபவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களை முல்லைத்தீவிற்கு ஏற்றிச்செல்ல பஸ்வண்டிகளும்வருமென கூறப்பட்டது.
இன்று வவுனியா முகாமிலுள்ளவ்ர்களை பஸ்வண்டிகள் மூலம் மீள்குடியமர்விற்காக அழைத்துச்செல்லப்படுகின்றது.இதுபாராட்டத்தக்கவிடயம்.
வெளிநாடுகளிலுள்ளவர்களும் இலங்கைக்கு வரவிரும்புபவர்களை பாதுகாப்பாக ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அழைத்துவர ஆவண செய்யமுடியுமெனக்கூறியுள்ளார். ஆனால் கடந்த இருபதுவருடகாலமாக வடமாகாணத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள்மட்டும் தமது சொந்தச் செலவில் முல்லைத்தீவிற்கு வர நிர்பந்திக்கப்படுவது ஏன்?ஒருவர் பத்தளத்திலிருந்து முல்லைத்தீவுக்குச் செல்ல சுமார் 500 ரூபா தேவைப்படுகின்றது். ஆறு அல்லது ஏழு பெயர் கொண்ட ஒரு குடும்பம் செல்வதாயின் இவர்களின் நிலை என்னவென்று யாரும் சிந்தித்துப்பார்காதது ஏன்?இதற்கு யார்? பொறுப்பு முல்லைத்தீவு மாவடட் அரச அதிகாரிகளா? வன்னி மாவட்டமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களா அல்லது அவர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர்களா? ஏன் இந்த பாகுபாடு!