Monday, October 11, 2010

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அவலங்கள்.

1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களெல்லாம் பலவந்தமாக தமிழீழவிடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டனர்.இப்போது இருபதுவருடங்கள்கழிந்தநிலையில் ,2009ம் ஆண்டுநடைபெற்ற இறுதியுத்தத்தில் இடம்பெயர்கப்பட்டு வவுனியா நலன்புரிமுகாம்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வசித்தவந்தவர்கள் மீள்குடியேற்றம் செய்யும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வடமாகாணத்திற்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்களும் மீள்குடியேற்றம் செய்ய அரசாங்கமும் முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிகாரிகளும் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
கடந்த ஜூன் மாதம் முல்லைத்தீவு கச்சேரியிலிருந்து மீள்குடியமர்தலுக்குப் பொறுப்பான அதிகாரியுட்பட இருவர் புத்தளம் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். இவர்களுக்கு உதவியாக கௌரவ அமைச்சர் றிசாத் பதுறுத்தீன் அவர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரான வை.ஜவாஹிர் அவர்களும் புத்தளத்திலுள்ள முக்கியமான முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் முகாம்களுக்குச் சென்று மீள்குடியேற்றம் சார்பான கூட்டங்களை வைத்து அக் கூட்த்தில் கலந்து கொண்டவர்களில் முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் செய்ய விரும்புபவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களை முல்லைத்தீவிற்கு ஏற்றிச்செல்ல பஸ்வண்டிகளும்வருமென கூறப்பட்டது.
இன்று வவுனியா முகாமிலுள்ளவ்ர்களை பஸ்வண்டிகள் மூலம் மீள்குடியமர்விற்காக அழைத்துச்செல்லப்படுகின்றது.இதுபாராட்டத்தக்கவிடயம்.
வெளிநாடுகளிலுள்ளவர்களும் இலங்கைக்கு வரவிரும்புபவர்களை பாதுகாப்பாக ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அழைத்துவர ஆவண செய்யமுடியுமெனக்கூறியுள்ளார். ஆனால் கடந்த இருபதுவருடகாலமாக வடமாகாணத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள்மட்டும் தமது சொந்தச் செலவில் முல்லைத்தீவிற்கு வர நிர்பந்திக்கப்படுவது ஏன்?ஒருவர் பத்தளத்திலிருந்து முல்லைத்தீவுக்குச் செல்ல சுமார் 500 ரூபா தேவைப்படுகின்றது். ஆறு அல்லது ஏழு பெயர் கொண்ட ஒரு குடும்பம் செல்வதாயின் இவர்களின் நிலை என்னவென்று யாரும் சிந்தித்துப்பார்காதது ஏன்?இதற்கு யார்? பொறுப்பு முல்லைத்தீவு மாவடட் அரச அதிகாரிகளா? வன்னி மாவட்டமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களா அல்லது அவர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர்களா? ஏன் இந்த பாகுபாடு!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.