Wednesday, March 21, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -3

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென நானும் எதிர் பார்க்க வில்லை.அன்று இரவு சுமார் பத்து மணியளவில் அண்ணே என்று அழைத்தவாறு எமது நான்கு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தோட்டத்தின் நடுவே உள்ள வீட்டுடன் கூடிய கடையை நோக்கி இருவர் வந்தார்கள்.இரவில் வீட்டிற்கு யார் வந்தாலும் நான் டோர்ச் லைட்டுடன் முன்னே செல்வது வழக்கம். அன்றும் நானே முன்னே சென்று வந்தவர்களை நோக்கி வெளிச்சத்தைப் பாச்சினேன்.

Thursday, March 1, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -2

  அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென எனது குடும்பத்தினர் யாரும் எதிர் பார்கவில்லை.எனது குடும்பம் பொருளாதாரத்திலும்,கல்வி மேம் பாட்டிலும் மிகவும் பின் தங்கிய குடும்பம். இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு(1974)தொழில் இன்மை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்னும் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவிலுள்ள முறிப்பு என்னும் பிரதேசத்திலுள்ள அரசாங்க காட்டில் நான்கு ஏக்கர் நிலத்தை பிடித்து பெருமரங்களை வெட்டி துப்பரவு செய்து விவசாயம் செய்யத் தொடங்கி னோம்.இச்செயற்பாட்டிற்கு எனது தந்தையின் நண்பர்களில் சிலரான வல்லிபுரம், (மறைந்து விட்டார்) துரையப்பா, சங்கரலிங்கம்,(மறைந்து விட்டார்)வைத்திலிங்கம் (மறைந்து விட்டார்)  போன்ற நல்லுள்ளம் கொணடவர்கள் வழி காட்டிகளாக இருந்து உதவினார்கள்.எம்முடன் இன்னும் சில முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தனர்