Thursday, March 1, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -2

  அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென எனது குடும்பத்தினர் யாரும் எதிர் பார்கவில்லை.எனது குடும்பம் பொருளாதாரத்திலும்,கல்வி மேம் பாட்டிலும் மிகவும் பின் தங்கிய குடும்பம். இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு(1974)தொழில் இன்மை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்னும் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவிலுள்ள முறிப்பு என்னும் பிரதேசத்திலுள்ள அரசாங்க காட்டில் நான்கு ஏக்கர் நிலத்தை பிடித்து பெருமரங்களை வெட்டி துப்பரவு செய்து விவசாயம் செய்யத் தொடங்கி னோம்.இச்செயற்பாட்டிற்கு எனது தந்தையின் நண்பர்களில் சிலரான வல்லிபுரம், (மறைந்து விட்டார்) துரையப்பா, சங்கரலிங்கம்,(மறைந்து விட்டார்)வைத்திலிங்கம் (மறைந்து விட்டார்)  போன்ற நல்லுள்ளம் கொணடவர்கள் வழி காட்டிகளாக இருந்து உதவினார்கள்.எம்முடன் இன்னும் சில முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தனர்
.
காணியில் வாழை பிரதான பயிராக செய்ததின் காரணமாக எமது பொருளாதாரம் ஓரளவு முன்னேற்றம் கண்டது.அதனைத தொடர்ந்து மிளகாய்,மரவள்ளி,நிலக்கடலை, பப்பாளி,வெங்காயம்,பயற்றை போன்ற தானியங்கள்.செய்தோம்.எமது காணிக்கு செல்லக்கூடிய தெரு இல்லை.எனவே வெட்டும் வாழைக்குலைகளை சுமார் அரைக் கிலோ மீட்டர் து-ரம் தோழில் சுமந்து செல்ல வேண்டும்.அங்கு வாகனம் வந்து ஏற்றிச் செல்லும்.பின்னர் மாட்டு வண்டியில் ஏற்றி துரையப்பா அண்ணணின் காணிக் கூடாக  குறித்த இடத்திற்கு கொண்டு செல்வோம்.அதன் பின்னர் துரையப்பா அவர்கள் அந்த வண்டிப்பாதையை எமக்குரிய தெருவாக தந்துவிட்டார்.சுமார் ஐந்து மீட்டர் அகலமும் சுமார் நு-ற்றி ஐம்பது மீட்டர் நீளமும் கொண்டதாக அவ்வீதி இன்று காணப்படுகின்றது.மொத்த்த்தில் சுமார் அரை ஏக்கர் வரை அவரது காணி தெருவிற்கு ஒதுக்கியுள்ளார். அண்மையில் துரையப்பா அவர்களின் மகன் ராசு அவர்களைக் கண்டேன்.அவர் ஒரு சம்பவத்தைக் கூறினார்.ஒருநாள் எனது தந்தை மாட்டு வண்டியில் ஆரம்பத்தில் அப்பாதையில் செல்லும் போது துரையப்பா அண்ணரின் வாழையிலுள்ள இரண்டு பிஞ்சு குலைகள் முறிந்து விட்டதால். உடனே எனது தந்தை தனது இரண்டு முற்றிய வாழைக்குலைகளுடன் துரையப்பா அண்ணரிடம் போய் நடந்த விடயத்தை கூறி வாழைக்குலையை அவரிடம் கொடுக்க முனைந்த போது துரையப்பா அண்ணர் எனது தநதையை தவறுதலாக நடந்ததிற்காக இதை து-க்கிக் கொண்டு வாறீர்கள்.உதை து-க்கீற்றுப் போங்க என ஏசி வாழைக் குலையுடன் திருப்பியனுப்பி விட்டு அப்பாதையை பெரிதாக்கி சுல்தான் காக்காவுக்கு (எனது தந்தை)விட்டுக் கொடுத்ததாக தன்னிடம் தந்தை கூறியதாக என்னிடம் ராசு கூறினார்.இதுதான் அன்றைய முல்லைத்தீவு தமிழ்,முஸ்லிம் உறவு.ஆனால் இன்று மீள் குடியேறிய முல்லைத்தீவு முஸ்லிம்கள் சிலர் அடுத்தவரின் காணியையும் சேர்த்து எல்லையாக காட்டி காணியை விற்றுள்ளனர்.காணியை வாங்கிய மாற்றுமதச்கோதரர்கள் பொதுக் கிணறுகளையும், அடுத்தவரின் காணியையும் சேர்த்து ஆட்சி செய்கின்றனர். முஸ்லிம்கள் சிலரும் பொதுக் காணிகளையும், தெருக்காணிகளையும் தமதாக்கிக் கொண்டுள்ளதை காண முடிகிறது. இது கண்டிக்க வேண்டியதாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின இன உறவுகள் பற்றிய மற்றொரு சம்பவத்தை எழுதி யாக வேண்டும்.1979,80 என எண்ணுகின்றேன்.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரிய தொரு கூட்டுறவுச் சங்கம்தான் கரைதுறைப்பற்று பல-நோக்கு கூட்டுறவுச் சங்கம்.. இது மேற்காக உடையார்கட்டுத் தொடக்கம் கிழக்காக கொக்குளாய் வரையிலும் தெற்காக கூழாமுறிப்பு வரையிலும் பரந்திருந்தது.அதன் பணிப்பாளர்களாக கூட்டுறவு ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்சபை கடமையிலிருந்த்து. 1. உதவி அரசாங்க அதிபர் வி.சிங்காரவேல் அவர்களைத் தலைவராகக் கொண்டதும் மற்றும் , 2.கிராமிய அபிவிருத்தி அதிகாரி சாம்வடிவேல்,3. காணி அபிவிருத்தி அதிகாரி சிவசாமி, 4.பெருந்தெருக்கள் பொறியியலாளர் குமாரசூரியர் ஆகியோரை பணிப்பாளர் களாகவும் அச்சபை கொண்டிருந்த்து.
இக்கால கட்டத்தில் ஜனநாயக ரீதியிலான பணிப்பாளர் சபை ஒன்றை நிறுவுவதற் காக கிளைக்குழுத் தேர்தலகள் இடம் பெற்றது.நீராவிப்பிட்டி கிளைத் தேர்தலில் நானும் ஒரு பொதுச்சபை பிரதிநிதியாக மொத்தம் ஒன்பது பெயர் தெரிவு செய்யப் பட்டிருந்தோம்.கரைதறைப்பற்று பல-நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திள் மொத்த பொதுச்சபை பிரதிநிதிகள் 120 பெயரை தாண்டியிருந்தது.இச்சங்கத்தின் சிறந்த வளர்ச்சியை நோக்காகக் கொண்டு முல்லைத்தீவு மறுமலர்ச்சி கழகம் என்ற பொது அமைப்பு  அயராது முயற்சிகளை மேற்கொண்டு எம்மையும் அணுகியது.அவர்கள் எமது வேண்டுதலுக்கமைவாக  நீராவிப்பிட்டி கிளையைச் சார்ந்த ஒருவருக்கு பணிப் பாளர் சபை உறுப்பினராக பதவி ஒன்று தருவதாக உறுதியளித்தது. இவர்களுக் கெதிராக அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பு அவர்களின் அணுசர ளையிலான குழு வொன்று களத்தில் இருந்தது..இவர்களினாலும் என்னிடம் பேரம் பேசப்பட்டது.பணம்,காணி,அரச தொழில், இவற்றுடன் பாதுகாப்பிற்காக சண்டியர்கள் பணிப்பாளர் சபை தேர்தலுக்கு இருநாட்களுக்கு முன்னர் எமது குழுவிலுள்ள ஒருவர் எதிரணியினரால் கடத்தப்பட்டு அவர்களுக்கு சாதகமாகி விட்டார்.மிகுதி எண்மரையும் உடனடியாக குறித்த கழகம் அழைத்துச் சென்று இரண்டு நாட்களும் சகல வசதிகளும் செய்து தந்து முல்லைத்தீவு யேசுதாசன் அவர்களது வீட்டில் மறைவாக வைத்திருந்து பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச்செய்தனர்.எனது சக உறுப்பினர்கள் என்னை பணிப்பாளர் சபைக்கு செல்வதற்கு அனுமதித்தனர்.முடிவாக மறுமலர்ச்சி கழகம் வெற்றி பெற்றது. பணிப்பாளர்களாக 1. திரு யோகநாதன் (முல்லைத்தீவு) பயிர்ச்செய்கை உத்தியோகத்தர்,2.திரு சண்முகநாதன் (முள்ளியவளை) பட்டதாரி, 3.திரு பரமானந்தம் (தண்ணீமரூற்று) அதிபர் தண்டுவான்,4. திரு கனகையா (முள்ளியவளை) பிரதி அதிபர்,வித்தியானந்தாக்கல்லாரி, 5. திரு கந்தசாமி (கொக்குத்தொடுவாய்) தபால் காரர்,6.திரு இராஇரத்தினம் (உடையார்கட்டு) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அவர்களின் சகோதர்ர்),7.திரு சு.யோசெப்- ஜெயம் (முல்லைத்தீவு)சம்மாட்டி,8.ஜனாப் ஜமால்தீன் (முல்லைத்தீவு) 9.எம்.எஸ்.பரீத்         (நீராவிப்பிட்டி) இந்த ஒன்பது பணிப்பாளர்களில் நான் மட்டும் பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்னிலையில் உள்ளவன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மொத்தமாக பதின்நான்கு பெயர்கள் பணிப்பாளர் சபையினராக உதவி அரசாங்க அதிபர் தலைமையில் செயலாற்றினோம்.நாம் ஒன்று பட்டு செயலாற்றிலாலும் நியமன உறுப்பினர்களை நீக்குவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக செயலாற்றி வெற்றி பெற்றோம்.
இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பணிப்பாளர்களிலிருந்து தலைவர், உப தலைவர் தெரிவு செய்யவென ஒன்று கூடினோம்.அதன் போது தலைவராக திரு ஜெயம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். தலைவர் உபதலைவரை தெரிவு செய்யும் படி கூறியதும் திரு சு.யோகநாதன் அவர்கள் பரீத் அண்ணரை நான் முன் மொழி வதாக கூறினார்.எதுவித எதிர்ப்புமின்றிஏகமனதாக நான தெரிவானேன். எனக்கு என் காதையே நம்ப முடியவில்லை.என்னை விட தகுதியானவர்கள் பலர் இருக்கும் போது ஏன் என்னை தெரிவு செய்தார்கள். எனக்கு விளங்கியது எனவே எனது மனப்பூர்வமான உழைப்பை சங்கத்தின் வளர்ச்சிக்காக அர்பணித்தேன்.இதன் காரணமாக கொள்வனவு உபகுழு.வின் தலைவராகவும்,உத்தியோகத்தர் நேர்முகப் பரீட்சைக் குழுவின் தலைவர்,விசாரணைக் குழுத்தலைவர்,எரிபொருள் நிலைய மேற்பார்வையாளர்,தொழிலாளர்களின் சேம இலாப நிதி விடயங்களுக்கு தொழில் அமைச்சுடனான இணைப்பாளர்,தேசிய கூட்டுறவுச் சபையின் எமது சங்கப் பிரதிநிதி போன்ற பொறுப்புக்கள் எனக்கு வழங்கப்பட்டது.  வழங்கப்பட்ட பொறுபுக்கள் அனைத்தும் செவ்வன செயலாற்றினேன். முல்லைத்தீவில் தேசிய கூட்டுறவுச் சபையின் உப அலுவலகம் திறப்பதற்கு நான் பொறுப்பாகவும்,அயராது கொழும்பிலும்,வ்வுனியா போன்ற இடங்களில் நடைபெற்ற  கூட்டங்களில் விவாதித்து அதை செய்து முடித்ததை நான் இன்னும் நினைத்துப் பார்ப்ப துண்டு.அப்படியான நல்ல நோக்கத்துடனும்,திறந்த மனதுடனும்,மோசடிகளுக்கு அடி பணியாமலும்,நான செயலாற்றியமைக்காகவே மேற்சொன்ன பொறுப்புக்கள் எனக்கு தமிழ் சகோதரர்கள் வழங்கினார்கள்.1984ம் ஆண்டு முல்லைத்தீவு வைத்திய சாலையில் பணியாளராக நியமனம் பெற்று,முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணியகத்திலும்,முள்ளியவளை மத்திய மருந்தகத்திலும் என்னால் இயன்ற உதவிகளை நோயாளர்களுக்கு செய்த என்னை தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக்கொடுத்ததாக குற்றம் சுமத்தி புலிகளே என்னைக் கடத்திச் சென்று துன்புறுத்தியதை இனி பார்ப்போம்.
குறிப்பு -முல்லைத்தீவைச்சார்ந்த இளம் தலை முறையினர் முல்லைத்தீவு சமூகங்களின் (இன,மத,மார்க்கம்) மத்தியில் கடந்த காலத்தில்(1990க்கு முன்னர்) இருந்த ஒற்றுமை பற்றிய நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.எதிர் காலத்திலும் இனங்களுக்கிடையில் சமாதன நிலை மேம்பாட்டைய வேண்டும் என்ற நோக்கத்தி லேயே இவ்விடயங்களை எழுதுகிறேன். 
தொடரும்......


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.