Wednesday, April 18, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -5

அஸ்ஸலாமு அலைக்கும்
காலை பத்தரைமணிக்குப்பின்னர்  பச்சைத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. மாலை ஐந்து மணியளவில்லை.எம்மை இரவைக்கு லைட் போஸ்ரில் போடுவது சார்பாகவும்  கதைப்பது எனது காதில் கேட்டது.செய்யாத குற்றத்திற்காக நான் ஏன்?எட்டப்பன் என்ற பெயருடன் இறக்கவேண்டும்.இப்போது உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எண்ணினேன்.இதுவரை முல்லைத்தீவு முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்ற குற்றத்திற்காக எந்த இயக்கத்தினாலும் ஒரு முஸ்லிம் கூடசுட்டுக் கொல்லப்பட வில்லை

Sunday, April 1, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? - 4


அஸ்ஸலாமு அலைக்கும்
அதிகாலையில் கண்ணயர்ந்து து-ங்கிவிட்டேன்.அழுகுரல் கேட்டு கண் விழித்தேன். ஆம் என்னுடன் புலிகளால் கடத்தி வரப்பட்டவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஈவிரக்கமின்றி தாக்கப்படும் ஒலி பலவிதமாக கேட்பதையும்,தாக்குதலுக்குள்ளாகும் போது அலறுவதும் தெளிவாகக் கேட்ட போதிலும் கேட்கும் கேள்வியோ,கூறும் பதிலோ எனக்கு விளங்கவில்லை. என்னிலையும் இதுதான் என உணரமுடிந்தது. சுமார் ஏழு மணியளவில் என்னிடம் வந்து காலைக்கடன்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?எனக் கேட்டார்கள்.இல்லையெனப் பதிலளித்தேன். சரி விசாரிக்க வேண்டும் வாரும் எனக்கூறி கால்,கண் கட்டுகளை மட்டும் அவிழ்த்து அழைத்துச் சென்றனர்.அது அந்த வீட்டின் உள்வராந்தா அங்கேதான் முதல் விசாரணை நடந்துள்ளது.அங்கே ஒரு மூலையில் இரத்தம் கசிந்த உடையுடன் சக சகோதரன் ஒரு மூலையில் குந்தி அழுது கொண்டிருந்தார்.

Wednesday, March 21, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -3

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென நானும் எதிர் பார்க்க வில்லை.அன்று இரவு சுமார் பத்து மணியளவில் அண்ணே என்று அழைத்தவாறு எமது நான்கு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தோட்டத்தின் நடுவே உள்ள வீட்டுடன் கூடிய கடையை நோக்கி இருவர் வந்தார்கள்.இரவில் வீட்டிற்கு யார் வந்தாலும் நான் டோர்ச் லைட்டுடன் முன்னே செல்வது வழக்கம். அன்றும் நானே முன்னே சென்று வந்தவர்களை நோக்கி வெளிச்சத்தைப் பாச்சினேன்.

Thursday, March 1, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -2

  அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென எனது குடும்பத்தினர் யாரும் எதிர் பார்கவில்லை.எனது குடும்பம் பொருளாதாரத்திலும்,கல்வி மேம் பாட்டிலும் மிகவும் பின் தங்கிய குடும்பம். இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு(1974)தொழில் இன்மை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்னும் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவிலுள்ள முறிப்பு என்னும் பிரதேசத்திலுள்ள அரசாங்க காட்டில் நான்கு ஏக்கர் நிலத்தை பிடித்து பெருமரங்களை வெட்டி துப்பரவு செய்து விவசாயம் செய்யத் தொடங்கி னோம்.இச்செயற்பாட்டிற்கு எனது தந்தையின் நண்பர்களில் சிலரான வல்லிபுரம், (மறைந்து விட்டார்) துரையப்பா, சங்கரலிங்கம்,(மறைந்து விட்டார்)வைத்திலிங்கம் (மறைந்து விட்டார்)  போன்ற நல்லுள்ளம் கொணடவர்கள் வழி காட்டிகளாக இருந்து உதவினார்கள்.எம்முடன் இன்னும் சில முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தனர்

Sunday, February 19, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா?

  அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்அண்மையில் எமது நேரான மார்க்கத்தில் இணைந்து இன்று ஓரிறைக் கொள்கை (சுவர்க்கம் செல்வதறகான நேரான வழி) பற்றி உளவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியிலும் பரப்புரை செய்து வரும் அல்-ஹாஜ் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்களைப் பற்றி முதலில் கூறவேண்டும்.இவர் சர்வதேச புகழ் பெற்ற உளவியல் மருத்துவர் மேலும் இவர் கருத்தம்மா உட்பட சில தமிழ்த் திரைப்படங்களி லும்,.இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வசந்தம்என்ற சின்னத்திரை தொடர் நாடகத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்.மேலும் இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டத்திற்க் காகவும்,தமிழ் மக்களுக்காக தனித்துவத்தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தவர். இதற்காக இவர் நாடுநாடாகச் சென்று ஆதரவுப் பிரச்சாரம் செய்தவர்.

Saturday, February 18, 2012

றஹ்மத்புரத்தில் மீலாதுன்நபி விழா


மேற்படி விழா புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் றஹ்மத்புரம் (1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் களுக்காக 1995ம் ஆண்டு மர்ஹூம் அமைச்சர் அஸ்ரப் அவர்களின் முயற்சி யினால் உருவாக்கப்பட்ட முதலாவது கிராமம்) என்னும் கிராமத் திலுள்ள மஸ்ஜிதுர் றஹ்மான்பள்ளிவாசல் நிர்வாகத்தில் கீழ் இயங்கும் மதரஸதுர் றஹ்மான் மாணவர்களால் மதரஸா அதிபர் மௌலவி ஜே.ஹபீல்தீன் அவர் களின் வழிகாட்டலின் கீழ் ஜமாஅத்தார்களின் அனுசரனை யுடன் இன்று (2011.02.18)நடை பெற்றது

Tuesday, February 14, 2012

இஸ்லாம் என்றால் என்ன?

உலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதாகவோதான் அமைந்திருக்கின்றன.

உதாரணமாக,

Monday, February 13, 2012

மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்

Tuesday, February 07, 2012


உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..
முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய முந்தைய கட்டுரை மூலம் விளக்கி உள்ளோம். பூமியை தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ காற்று இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடாமல் அனைத்து வகைகளிலும் மனித இனம் வாழ இயலாத அளவிற்கும் அதிகப்படியாக நடைபெறும் இயற்கை சீற்றங்களினாலும் மற்ற கிரகங்களில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது, அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் அனைத்து நன்மைகளையும் பெற்று நாம் சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த பூமியில்.

Friday, February 10, 2012

டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகிய இருவரும் மக்கள் முன்- இஸ்லாம் மார்கம் மற்றும் ஹிந்து மதம் சார்பாக விவாதம்.

பெங்களூல் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் "Art of Living" என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது. புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் இந்த விவாத அரங்கம் நடந்தது. "மக்கள் உரிமை" வார இதழுக்காக நமது சிறப்பு செய்தியாளர் ஜன்னா மைந்தன் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட இந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அவர் இங்கே மக்கள் உரிமை வாசகர்களுக்கு வழங்குகிறார்.
- ஆசிரியர் (மக்கள் உரிமை வார இதழ்)

Monday, January 23, 2012

பொய் ஒரு சாபம்

இத் தீய பழக்கமுடையவர்கள் சமதாயத்தில் குழப்பத்தைத் தவிர வேறெதையும் செய்ய உதவ மாட்டார்கள்.மக்கள் அவர்களை உதவாக்கரை என ஒதுக்கி விடுவார்கள்.
பொய் பேசுபவன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒரு செயலைச் செய்கிறான்.மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு முக்கிய செயலாக பொய் பேசும் பண்பு விளங்குகிறது.இது நீண்ட காலம் வைத்தியம் செய்யப்பட வேண்டிய ஒரு வியாதியாகும்.

Sunday, January 15, 2012

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன்...............


எங்கே அநீதி இருக்குமோ அங்கே அமைதியிருக்க முடியாது என்று இஸ்லாம் கூறுகின்றது.அது வீடாக இருக்கலாம்,கிராமமாகவிருக்கலாம், நாடாகவிருக்கலாம்,ஏன் உலகமாகவும் இருக்கலாம்.நமது நாடும் இதற்கு விதிவிலக்கில்லை.ஆனால் வல்லவமையடைய ஒருவனோ, ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ,ஒரு இனமோ அடுத்தவரைப் பயன்டுத்தி, பலிக்கடாவாக்கி, அடுத்தவர் மீது கால் வைத்து ஏறி மேலே போவதை இப்போலியுலகில் காணமுடிகிறது. இச் செயற்பாடுகளை இன்று எங்கும், எதிலும் காண முடிகிறது.அதற்காக வல்லவர்கள் அடுத்தவர்களை ஏமாளிகளாக எண்ணிவிடமுடியாது.அநீதிக்குள்ளாகுபவர் இஸ்லாமிய வாழ்க்கையுடைவராகவிருந்தால் விதியின் மீது நம்பிக்கை கொண்டவராக இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளராகலாம்.அல்லது வன்முறை யாளராகவும் மாறலாம். ஆக அமைதி நிலை பெற ஒரே வழி நம்மைப் படைத்த இறைவனை மட்டும் வணங்கி வழிபடுவதும். அவனால் அனுப்பப்பட்ட து-தர்களின் து-துத்துவத்தை ஏற்று செயற்படுவதுமாகும். அதாவது ஏகத்துவத்தை பூரணமாக ஏற்றுச் செயற்படுவதாகும்.அதற்காக ஈராக்,லிபியா போன்ற நாடுகளை உதாரணம் காட்ட நீங்கள் முயலக் கூடாது.நான் கூறுவது அல்-குர்ஆன்,அல்-ஹதீஸ்களுக்கமைவாக வாழ்ப வர்களை (முஸ்லிம்களை) மட்டுமே கூறுகின்றேன்

Friday, January 13, 2012

குர்ஆனில் அல்லாஹ்வின் அற்புதங்கள் மனிதப்பிறப்பு)

்kf;fis ,iw ek;gpf;ifapd; gf;fk; miog;gjw;fhf gy;NtW tplaq;fis my;Fh;Md; Kd;itf;fpwJ. rpy ,lq;fspy; thdq;fs;> tpyq;Ffs;> kuq;fs; Nghd;witfis kdpjDf;F rhl;rpahff; fhl;lg;gLfpd;wd. gy trdq;fs; kdpju;fis> mth;fspd; nrhe;j rpU\;bg;G gw;wp ghu;f;Fk; gb Ntz;Lfpwd. kdpjd; vt;thW cyFf;F te;jhd;? ve;j gbfisf; fle;J te;jhd;? Nghd;w tpdhf;fs; %yk; mtu;fSf;F mJ Qhgf%l;lg;gLfpd;wJ.
"ehNk cq;fisg; gilj;Njhk;. vdNt> ePq;fs; cz;iknad;W ek;gNtz;lhkh? ePq;fs; nrYj;Jk; ,e;jphpaj;ijf; ftdpj;jPh;fsh? mij ePq;fs; gilf;fpwPh;fsh? ehk; gilf;fpNwhkh?" (Fh;Md; 56:57-59)

Thursday, January 12, 2012

தமிழ் புத்திஜீவிகளின் அறிக்கைக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் வரவேற்பு _


ஏ.ஆர்.ஏ.பரீல்/வீரகேசரி தேசிய நாளேடு 1/12/2012 2:26:28 PM Share
  இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உள்ளீர்ப்பதுடன் தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புத்திஜீவிகள் 71 பேர் வெளியிட்டுள்ள அறிக்கையை பெரிதும் வரவேற்பதாக முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்முஸ்லிம் உறவைப் பலப்படுத்தவும் தீர்வு முயற்சிகளில் இரு சிறுபான்மை சமூகங்களும் கருத்தொருமித்து செயற்படவும் இவ்வறிக்கை உந்துசக்தியாக அமைந்திருப்பதாகவும் முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவித்தனர்

Wednesday, January 11, 2012

அப்பாவி மக்களுக்கு அநீதம் இழைத்தோர் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீருவர் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)


டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்)கேள்வி எங்கள் தேசம் – கடந்த மூன்று சகாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் அதில் மூன்றாம் தரப்பான முஸ்லிம் சமுதாயத்தின் பாதிப்புக்கள் குறித்து எந்த அளவு தெரிந்து வைத்திருக் கின்றீர்கள்?
பதில் டாக்டர் அப்துல்லாஹ் -ஆரம்பத்தில் ஈழப்போராட்டத்தை பெரிதும் ஆதரித்தவன் நான்.தமிழ் மக்களுக்காக தனித்துவ தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவன்.இதற்காக நாடுநாடாகச் சென்று ஆதரவுப்பிரச்சாரம் செய்தவன்.
1990 ஆம் ஆண்டு புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் இரு மணி நேர அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்ட போது நான் பிரான்சில் இருந்தேன்.இதனைக் கேள்வியுற்றதும் பிரான்சிலுள்ள இலங்கைத் தமிழ் தலைவர்களை சந்தித்து இது பற்றி வன்மையாக எச்சரித்தேன்.அங்கிருந்து விவாதிப்பது பயனற்றது எனக்கருதி பிரான்சிலிருந்து இலங்கைக்க வந்து இங்குள்ள முக்கிய இயக்கத் தலைவர்களை சந்தித்து இந்தக் கொடுங்கோல் முறையை வன்மையாக எதிர்த்தேன்.

Tuesday, January 10, 2012

பழுதடைந்த ரூபா நோட்டுக்களை வாபஸ்பெற புதிய நடைமுறையை அமுல்படுத்தும் மத்திய வங்கி

Saturday, 07 January 2012 07:03Hits: 139 E-mailPrint

money_srilankaபழுதடைந்த ரூபா நோட்டுக்களை சுழற்சிக்கு விடுவதை தவிர்க்கும் நட வடிக்கையில் இலங்கை மத்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுச் சந்தைகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் போன்ற இடங்களில் மக்களிடம் நேரடியாகச் சென்று  பழுதடைந்த ரூபா நோட்டுக்களை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சல்மான் ருஷ்டியின் இந்தியா வருகை தொடர்பில் சர்ச்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜனவரி, 2012 - 16:17 ஜிஎம்டி

சல்மான் ருஷ்டி
சல்மான் ருஷ்டி
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 20-ம் தேதி நடைபெறும் இலக்கிய விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

Saturday, January 7, 2012

பேரொளியும்,புதுவாழ்வும்-தளபதிரத்தினம்

ளபதி ரத்தினம் என்பவரால் எழுதப்பட்டு,சிறீலங்கா சகோதருத்துவத்தை மீளக்கட்டி யெழுப்புவதற்கான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள “பேரொளியும் புதுவாழ்வும் என்ற புத்தகத்தை படித்தேன்.இப்புத்தகம் ஹிந்து (ஆரியர்) மதம் மற்றும் இஸ்லாம் மார்க்கம் சார்பாக முக்கியமாக பேசுகிறது. அதிலிருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.அதுசார்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் விரும்புகின்றேன்