Saturday, January 7, 2012

பேரொளியும்,புதுவாழ்வும்-தளபதிரத்தினம்

ளபதி ரத்தினம் என்பவரால் எழுதப்பட்டு,சிறீலங்கா சகோதருத்துவத்தை மீளக்கட்டி யெழுப்புவதற்கான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள “பேரொளியும் புதுவாழ்வும் என்ற புத்தகத்தை படித்தேன்.இப்புத்தகம் ஹிந்து (ஆரியர்) மதம் மற்றும் இஸ்லாம் மார்க்கம் சார்பாக முக்கியமாக பேசுகிறது. அதிலிருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.அதுசார்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் விரும்புகின்றேன்

புத்தகத்தின் பக்கம் -420 ல்
பாவிஸ் புராணம் - அல்லாஹ்வின் து-தர் இறுதி நபி, நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இறுதி நபியின் தோற்றம் பற்றி இப்பாலிஸ் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலிஸ்புராணம் -பர்தி சர்மத்ந காண்டம் 3,அத்தியாயம் 3,சுலோகம் 5-8 வரைபின் வருமாறு கூறப்பட்டுள்ளது.
  வெளிநாடொன்றில் உள்ள ஆத்மீகத் தலைவர் ஒருவர் நீங்கள் அறியாத பாஷை பேசுபவராக அவரது நம்பிக்கையான தோழர்களுடன் உங்கள்முன் தோற்றமளிப்பார். அவர் பெயர் மஹிமத் அவரது வசிப்பிடம் பாலை வனத்திலிருக்கும்.அவர் வானவரைப்போன்று பாவங்களிலிருந்து விலகி பரிசுத்தமாக இருப்பார்.இந்திய சக்கரவர்த்தி அவரின் விசுவாசத்தைக் கொண்டு வருவார்.பகைவர்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருப்பார்.விக்ரஹ வழிபாடுகளை ஒழித்துக் கட்டுவார்.ஷைத்தானுக்கு எதிராகயுத்தம் புரிவார்.மனித வர்க்கத்தின் ஈடேற்றமாக இருப்பார்.
மேலே தரப்பட்ட பாவிஸ் புராண வாக்கியம் ஹிந்துக்களால் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபுனித நு-லின் வாக்கியம் ஆனால் எந்த ஹிந்துவும் இவ்வாக்கியம் பற்றி மூச்சு விட்டதுமில்லை.இதன் இரகசியம் என்னவென்றால் ஹிந்துக்களில் மிகப்பெரும் பாண்மையினருக்குசமஸ்கிருதம் தெரியாது.தெரிந்த ஒருசிலரும் உயர் வகுப்பார்.அவர்கள் இவ்வுண்மைகளை வெளிப்படுத்த விரும்பார்.இயன்ற அளவு மறைக்கவே முயற்சிப்பர். அண்மைக்காலத்தில் ஹிந்துக்களிடையே ஏற்பட்டவிழிப்புணர்ச்சியின் காரணமாகவே இவ்விடயங்கள் இப்படி வெளியாகின்றன.
மேலும் 431ம் பக்கத்தில் விளக்கமாக நு-லாசிரியர் கூறுகின்றார். 
1.அவர்ஓர் ஆன்மீக ஆசிரியர் -ஆம்  அல்லாஹ்வின் து-தர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தலை சிறந்த ஆசிரியராகத்தான் திகழ்ந்தார்கள்.ஓரிறைக் கொளகையைக் கற்பித்தார். ஏகன் அல்லாஹ்வை அறிமுகப்படுத்தி நுணுக்கமாக கற்பித்தார்கள்.அல்-குரஆனைக் கற்பித் தார்கள். அல்-குர்ஆன் கூறும் வாழ்க்கை முறையை பயிற்றுவித்தார்கள்.ஒழுக்கத்தை கற்பித்தார்கள்.ஒற்றுமையை கற்பித்தார்கள்.மனித சமுதாயத்தையே தனது கற்பித்தலால் முழுமையாக மாற்றியமைத்தார்கள்.நபியவர்களின் மறைவிற்குப் பின் அவர்கள் மனைவி ஆயிஷா(றழி)அவர்களிடம் நபியவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது. என்று கேட்கப் பட்டதிற்கு அன்னையரவர்கள் நீங்கள் அல்-குர்ஆனைப் பார்கவில்லையா? நபியவர்களின் வாழ்க்கை அல்-குர்ஆனாகவே இருந்தது என்று விடை பகர்ந்தார்கள்.கபிகள் நாயகமவர்கள் தமது இருபத்தி மூன்று வருடகால வாழ்வில் இம்மை,மறுமை,படைத்தவன், படைப்புக்கள், வானம்,பூமி,சுவர்க்கம்,நரகம்,வானவர்,மனிதர்,ஜின்கள் அத்தனை விடயங்களையும் மிகத் தெளிவாகக் கற்பித்துள்ளார்கள்.உலக முடிவு நாளுக்கு முன்னுள்ள அடையாளம் அவ்வேளையில் மனிதர்களின் நிலை போன்ற அத்தனை விடயங்களையும் கற்றுத்தந்துவிட்டுத்தான்  சென்றார்கள். இவ்வாறு இதற்கு முன்பு யாரும் போதித்திருந்த தில்லை. பின்னரும் இத்தனை வருடங்களாகியும் யாரும் போதித்ததில்லை.அவ்வளவு தலை சிறந்த ஒப்புவமையில்லாத தலை சிறந்த ஆசிரியராக விளங்கினார்.
2.அவர் வெளி நாடொன்றில் தோன்றுவார்,நீங்கள் அறியாதபாஷை அவரது பாஷையாகும்.
அரேபியா இந்தியாவிற்கு வெளிநாடொன்று மட்டமல்ல,ஆசியா,ஐரோப்பாஈஆபிரிக்கா ஆகிய அக்காலத்தில் அறியப்பட்டிருந்த மூன்று கண்டங்களுக்கும் மத்தியாகவும்,தனித்துவமான வெளிநாடாகவும் கருதப்பட்டது.இந்தியாவில் நு-ற்றுக்கும் அதிகமான பாஷைகள் பேசப் பட்டு வழக்கிலிருந்த போதிலும்இந்தியாவில் வாழ்ந்த அனைத்து சமூகங்களுக்கும் அரபு அறியாத பாஷையாககவே இருந்தது மட்டுமனறி இந்தியாவிலுள்ள பாஷைகள் அல்லதுஇந்தியர்கள் அறிந்த பாஷைகள் அனைத்தும் இடது பக்கத்திலிருந்து ஆரம்பிக் கப்படும்.ஆனால் அரபு பாஷை இவர்களில் எவருமே அறியாத விதமாக வலது பக்கத்ததிலிருந்து எழுத ஆரம்பிக்கப்படும்.இலக்கண அமைப்பிலும் பல வித்தியாசங்கள் உண்டு.உதாரணமாக ஒருமை,இருமை,பண்மைஎன்ற இலக்கண அடைப்பு உலகில் வழங்கும் மொழிகளிலேயே அரபு மொழிக்கு மாத்திரம்தான் உண்டு.எல்லா மொழிகளும் அறிவின் பிறப்பிடம் அல்லாஹ்வினால் கற்பிக்கப்பட்டவைதான் அதில் அரபு மொழி அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்டட முதல் தரமான மொழியாகும்.அதற்கு இன்னும் பல சிறப்பம்சங்கள் உண்டு..
3.அவர் தனக்கு விசுவாசமான உண்மையான தோழர்களுடன் வருவார் அவர் பெயர் மஹிமத், அவர் வதியுமிடம் பாலைவனமாகும்.  இதில் நபிகள் நாயகமவர்களின் பெயரும்,வதிவிடமும் துல்லியமாக குறிப்பிட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும் இவ்வளவு துல்லியமாக தீர்க்க தரிசனக் கூற்றை தன்னுள் அடக்கிய நு-லை புனித நு-லாக ஏற்றுக் கொண்ட ஒரு சமூகம் 1400 வருடங்களாகியும் அவ்வுண்மையை விளங்கி தானும் ஏற்று ஏனைய சமூகங்களுக்கும் எடுத்துரைத்துப் பெரும் சிறப்பும் அடையாமல் தேங்கி பெரும் விந்தையும் ஈடு செய்ய முடியாத நஷ்டமுமேயாகும்.உண்மை எவ்வாறிருந்தாலும் நாம் நம்புவது பொய்யையும் ,பேய்களையும்,பேய்களின் கூத்தாட்டங்களையுமே. நாம் விரும்புவது ஜாதிப்பாகுபாட்டையும்,அடிமை வாழ்வையுமே ஆகும்.முடிவாக நாம் அடைய விரும்புவது பெரும் நஷ்டத்தையும்,கேவலத்தையும்,நரக நெருப்பையுமே என்று பிடிவாதமாகவிருப்பது புரியாத புதிரும், அறியாமையை அறியாமையென்று புரியாத அவல நிலையுமாகும்.
நபிகள் நாயகமவர்களின் தோழர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.இவர்கள் சகாபாக்கள் என்று அழைக்கப்படுவர்.இறுதி நபியவர்களுக்கு தோழர்கள் அமைந்த மாதிரி எந்த நபிக்குமே அமையவில்லை.நபி மீது பூரண விசுவாசங் கொண்டவர்கள்,இணையில்லா அன்பு கொ்டவர்கள் நபிக்காக தமது உயிரையும் தியாகம் செய்யத்தயங்காதவர்கள்.நபியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை பெரும் பாக்கியமாக கருதுபவர்கள்.அன்றிலிருந்து இன்று வரைக்கும் வரலாற்று ஆசிரியர்களும்,அய்வாளர்களும் இப்படி தம தலைவர் மீது வைத்திருக்கும் தோழர்களை உலக வரலாற்றிலே எங்குமே காணமுடியாது.இறுதி நபியவர்களுக்கு முந்திய நபியான ஈஸா (அலை)(யேசு)அவர்கள் கூட அவர்களின் தோழர்களில் ஒருவரால்தான் காட்டிக்கொடுக்க முன்வந்து துரத்திச் சென்றான்.ஆனால் அல்லாஹ் தனது நபியை மேல் உயர்த்திக் கொண்டான்.காட்டிக்கொடுப்பதாக துரத்திச் சென்றவன் சிலுவையில் அறையப்பட்டான்.நபிகள் நாயகமவர்களின் 124000 சகாப்பாத் தோழர்களில் ஒருவர் கூட கனப்பொழுதேயேனும் அல்லாஹ்வின் துாதர் நபிகள் நாயகமவர்களுக்கு மாறு செய்ய நினைக்கவும் மாட்டார்கள்.
4.வானவர்களைப்போன்று பாவங்களிலிருந்து விலகி பரிசுத்தமாயிருப்பார்.
பாவம் என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வது.பொதுவாக நபிமார்கள் அனைவரும் பாவச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.எனினும் ஏனைய நபிமார்கள் அனைவரும் தமது செயல்களில் ஒன்றையோஈசிலதையோ நினைத்துப்பயந்து கொண்டிருப் பார்கள்.மறுமையில் தீர்ப்பு நாளின் போது தம்மீது என்ன நிகீமொ என்று அல்லாஹ்வை பயந்தவர்களாகவே இருப்பார்கள்.அந்த அமளி,துமளி நிறைந்த நாளில் அல்லாஹ்விடம் மற்றவர்களுக்காக பரிந்துரைக்க தகுதி பெற்ற நபி பரிந்துரைக்க அல்லாஹ்வால் அனுமதி கொடுக்கப்படும் நபி(ஸல்)அவர்களட மட்டுமே அவர்கள் மாத்திரம்தான் பாவங்களிலிரந்து பரிசுத்தமானவர்களாகவும்,அல்லாவிடத்தில் பரிந்துரைக்க அனுமதிஅனுமதிக்கப்படுபவரா கவும் இருப்பார்கள்.இவ்விடயத்தையும் பவிஷ்ய புராணம் கூறியள்ளது.இவ்வளவு நுனுக்கமாக தீர்க்கத்தரிசனத்தைக் கூறும்நுாலை மக்கள் அறிய முடியாமல் மறைத்து வைத்திருந்தவர்கள் மன்னிக்க முடியாத பெரும் குற்றவாளிகளே!பவிஷ்ய புராணம் சூறும் உண்மைகளை இப்பொழுதாவது விளங்கிக் கொண்ட இந்து சகோதரர்கள் இன்னும் பாரா முகமாக இருக்கக்கூடாது.கண் திறக்கச் செய்யும் கருவுவூலத்தை கண் திறந்து பார்க்க வேண்டும்.
     
6.     6. இந்தியாவின சக்கரவர்த்தி அவரின் மீது விசுவாசத்தைக் கொண்டு வருவார். இறுதி நபி நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் பிறப்பதற்கு முன்பு கூறப்பட்ட அத்தீர்கத்தரிசனத்தில் இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.இந்திய பாடசாலைகளில் கற்பிக்கப்படும் சமூக்க்கல்வி,இந்திய வரலாறு போன்ற பாடங்களில் இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் முஸ்லிம்கள் ஆட்சி செய்தனர். அதே போல் அதற்கு முன்பும் யாரும் ஆட்சி செய்யவில்லை. அவர்களுக்கு பின்பும் யாரும் ஆட்சி செய்யவில்லை.இன்றும் கூட பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம்,பூட்டான்,ஆகியன தவிர்ந்தே இந்தியா என்கின்றோம்.இவை யாவும் சேர்ந்தே இந்திய உபகண்டம் எனப்பட்டது. அவ்ரங்கசிப் சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழுள்ள இந்திய நிலப்பரப்பின் படம் இந்திய பாடசாலைகளின் பாடப்புத்தகங்களில் வரையப்பட்டுள்ளது .அதைப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
7.     7.  அவர் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றிருப்பார்- அல்லாஹ்வின்  து-தர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்.அவன் என்னை நபியாக அனுப்பியுள்ளான்.என்று எப்போழுது தனது நபித்துவத்தை மக்கள் முன் வைத்தார்களோ அன்று தொடங்கிய எதிர்ப்பும் எதிரிகளும், எதிரிகளது, சூழ்ச்சிகளும்,பகைமையும், பகைவர்களது சதி முயற்சி களும் நபிகள் நாயகமவர் களுக்கும், நபியவர்கள் கொண்டு வந்த அல்-குர்ஆன் வேதமாகிய இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எண்ணிலடங்காத சூழ்சிகளும்,பயங்கரமான சதிகளும், பொய்ப்பிரச்சாரங்களும் எதிர்க்கட்சி சேர்த்தலும் அன்று தொடங்கி இன்றும் மும்முரமாக நவீனமயப் படுத்தப்பட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. வல்லரசுகளும் ஏனைய எத்தனையோ நாடுகளும் சேர்ந்து முயற்சி செய்கின்றன.எவ்வாறு அல்லாஹ்வின் து-தர் நபிகள் நாயகமவர்களுக்கு அன்றைய உலகம் முழுவதுமாக கிளர்ந்தெழுந்தும் எதுவும் செய்ய முடியவில்லையோ அதேபோல் இன்றுவரை இஸ்லாத்திற்கெதிராக அத்தனை முயற்சிகளும் படுதொல்வியடைந்து படுகுழியில் வீழ்ந்து விடுகின்றன. இஸ்லாம் வளர்ந்து கொண்டே செல்கின்றது. எதிரிகளின் கோட்டைகளையும் உடைத்து உள்நுழைந்து செழிப்புடன் வளர்கிறது.எப்படி நபிகள் நாயகமவர்கள் பக்குவமாகப் பாதுகாக்கப்பட்டார்களோ அதே போல் இஸ்லாமும் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வருகிறது. இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்த எதிரிகளின் சக்தியாலும் தடுக்க முடியாது.
8.  8.    அவர் சிலை வணக்கத்தை இல்லாதொழிப்பார் - இஸ்லாம் சிலை வணக்கத்திற்கு முற்றிலும் எதிரானது. உலகில் முதன்முதலில் சிலை வணக்கத்தை எதிர்த்த்து இஸ்லாம்தான். நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் மக்கா நகரம் முழுவதுமே சிலைகள் நிரம்பியிருந்த்து.சிலை வணக்கமும்,சிலைகளுக்கான திருவிழாக்களும் சம்பிரதாயங்களும் மக்கள்வாழ்க்கையில் இரண்டறக்கலந்திருந்தன .இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான சூழ்நிலையில் அல்லாஹ்வின் து-தர் இவற்றில் எதைக் கொண்டும் எதுவும் ஆகாது.இவற்றிற்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது.இவை யாவும் கல்லும், மண்ணும்,மரக்கட்டையும்தான் இவற்றில் எதுவும் வணக்கத் திற்குரியதல்ல.வணக்கத்திற்குரியவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அல்லாஹ் அவன்தான் சர்வ சக்தன் அனைத்தையும் படைத்தவன்.அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது.அவனை மாத்திரம்தான் வணங்க வேண்டும்.என்ற அர்த்தம் நிறைந்த “லாயிலாஹ இல்லல்லாஹ்” எனும் பிரபஞ்சத்திலும் பெரிதும், கனதியு முள்ள திருக்கலிமாவை மொழிந்து முன் வைத்தார்கள். மிகச்சொற்ப காலத்தில் அன்றைய உலகின்  மூன்றில் இரண்டு பகுதியில் சிலைகள் யாவும் .இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தன. ஒழிக்கப் பட்டன.சிலை வணக்கமும் வேரோடொழிக் கப்பட்டது.
9.      9. ஷைத்தானுக்கெதிராக யுத்தம் புரிவார். ஷைத்தான்அல்லாஹ்வினால் சபிக்க ப்பட்டு சுவர்க்கத்திலிருந்து வெளியேறியபோது ஆதம் (நபி) அவர்களின் சந்த்தி யினரான மனிதர்களை வழிகெடுப்பேன். எனச்சபதமிட்டே வெளியேறினான்.மேலும் சில வரங்களையும் அல்லாஹ்விடம் வேண்டிப் பெற்றுக் கொண்டான்.அதில் ஒன்றுதான் உலகம் முடிவு நாள்வரை அவன் நீடித்து வாழ்வது மற்றொன்று மனிதனை வழி கெடுக்க சகல சூழ்ச்சிகளையும் செய்வதற்கு அனுமதி ஷைத்தான் கேட்ட வரங்களைக் கொடுத்து அல்லாஹ் கூறினான். உன்னால் எனது நல்லடியார்களை வழி கெடுக்க முடியாது. அப்படி அவர்கள் உனது சூழ்ச்சிக்குப் பலியாகி பாவங்கள் செயதாலும் பாவமன்னிப்பு என்னும் ஆயுத்த்தால் உன்னை தோற்கடிப்பர் என்றான். மனிதவர்க்கத்தின் மீது சைத்தான் ஈட்டியபெருவெற்றி  மனிதர்களை சிலை வணக்கத்தில் ஈடுபடுத்தியதாகும்.அல்லாஹ்வின் நாட்டப் படியே அனைத்து விடயங் களும் நடைபெறுகின்றன .என்ற உண்மையை மறக்கச் செய்த அல்லாஹ்வின் நாட்டப்படி நல்ல விடயங்கள் அதாவது மனிதனுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்கள் நடபெறும் போது சிலை வணக்கத்தின் மூலம் பெற்ற வெற்றியாகவும,கஷ்டங்கள்,நஷ்டங்கள் ஏற்படும் போது சிலை வணக் கத்தின் குறைபாட்டினால் ஏற்பட்டதாகவும் மக்களுக்கு ஷைத்தான் விளக்கம் கொடுப்பான்.எனவே இஸ்லாம் சிலை வணக்கத்திற்கு எதிரானது. என்றால் ஷைத்தானக்கு எதிரானது.எனவே அல்லாஹ்வின் து-தர் ஷைத்தானுக்கு எதிரான, ஷைத்தானின் சூழ்ச்சி களுகெதிரான யத்தத்தை சதி,நாச வேலைகளிலும், சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டு விடாது முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறான். இஸ்லாமும் ஷைத்தானக்கு எதிராக யுத்தம் புரிந்து கொண்டுதான் இருக்கிறது.
10.   10.   மனித வர்க்கத்தின் ஈடேற்றமாக இருப்பார் – மனித வர்க்கத்தின் ஈடேற்றம் என்பது ஈருலக வெற்றியைக்குறிப்பதாகும்.அது இணை வைப்பதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதிலும்,ஷைத்தானை விரோதிப்பதிலுமே பெரிதும் தங்கியுள்ளது. அண்மைக்காலமாக கிருஷ்தவர்களில் ஒரு பகுதியினர் சிலை வணக்கத்தை நிராகரித்துள்ளனர். இத்தையோர் மேலும் விளக்கம் பெற்றுபப் படிப்படியாக நேர்வழியின் பக்கம் ஈடேற்றம் பெறுவர்.என நல்லெண்ணம் கொள்ளலாம். ஹிந்துக்களில் படித்தவர்களும், உலக அனுபவமுள்ளவர்களும் சிலை வணக்கத்தை வெறுத்தொதுக்கி வருகின்றனர்.இதனால் கோவில்களுக்கு செல்வது மில்லை.இந்துக்களின் சடங்குகள் சம்பிர்தாயங்களில் ஈடுபடுவதுமில்லை, நம்புவது மில்லை.ஆனால் இவர்கள் இந்து மதத்தின் தவறுகளை தெளிந்து உணர்ந்தாலும் மௌனியாகி விட்டனர்.எதிர்ப்பு தெரிவிப்பதுமில்லை. தவறுகளையும்,மூட நம்பிக் கைகளையும் சுட்டிக் காட்டுவதுமில்லை.இத்தகையோர் பொய்யை இனம் கண்டு கொண்டது போல உண்மையென்று ஒன்று இருக்கத்தானே வேண்டுமென்று உண்மையை தேடுவார்களாயின் பேரொளியில் புகுந்து ஈடேற்றம் பெற்றுவிடுவர்.
 
மீண்டும் பின்நோக்கி புத்தகத்தின் 429ம் பக்கத்தில்........
சிந்திக்கத்தெரிந்த எமது அன்பிற்குரிய சகோதரர்களே!
ஏனைய உலக விடயங்களையும்,விஞ்ஞான தொழில் நுற்ப விடயங்களையும் நன்றாக சிந்தித்து நாளுக்குநாள் முன்னேற்றம் காணும் நீங்கள் எல்லாவற்றை விடவும் மிகமுக்கியமானதும் இம்மை,மறுமை ஆகிய ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரேயொரு மார்க்கமான இஸ்லாத்தை மட்டும் சிந்திக்காமல், கவலைப்படாமல் இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இருளில் மூழ்கித் தத்தளிக்கப் போகின்றீர்கள். பேய்களென்று நீங்கள் கூறும் ஷைத்தானுக்கு வழிப்பட்டு முடிவுறாத நஷ்டத்தையும்,தோல்வியையும் அடையப்போறீர்கள். பேரொ ளியில் (இஸ்லாத்தில்) பிரவேசித்து நீங்கள் ஒளிமயமாக  இன்னும் தாமதமேன்?
 

முஸ்லிம் அகதியின் குறிப்பு – இன்று சில ஊடகங்களும் சினிமா, மற்றும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களும் சீரற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டுவதை அல்லது சிலை வணக்கங்களின் மூலம் பெறக்கூடிய நன்மைகளை நவீன கிறாபிக் தொழில் நுற்பத்தின் ஊடாக நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் தயாரித்து கிளிப் பிள்ளையான மக்களை (குழந்தைகளை) ஏமாற்றி வியப்பிலாழ்தி தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் சமூகங்களை வழிகேட்டிற்கும் ஊக்குவிப்பதனையும் அவதானிக்க முடிகிறது. அதே போன்று எல்லோருக்கும் பொதுவான இறைவன் என்று யாரையோ விழித்தழைப் பதனையும் பகுத்தறிவுள்ள இஸ்லாமியர் அல்லாதவர்களிடமும் சில ஊடகங் களிலும் அவதானிக்கவும் முடிகிறது. நீங்கள் பகுத்தறிவு உடையவராக இருந்தால் உங்களின் இறப்பு வருமுன்னர் அந்த எல்லோருக்கும் பொதுவான இறைவனைத் தேடுங்கள். அவன் கூறிய அவனது நபி வாழ்ந்து காட்டிய வாழ்கை முறையில் இணைந்து கொள்ளுங்கள். வெற்றி பெறுங்கள்.இவ்வுலகம் விளையாட்டுத்திடல் அல்ல! கற்றுக்கொள்ள வந்திருக்கும் பாடசாலை மண்டபம் இங்கு பரீட்சையும் நடக்கலாம் அதில் பெறுபேறுகளாக பரிசுப்பொருட்களும், தண்டனைகளும் கிடைக்கலாம். பாடசாலைக் காலம் முடிந்து வீடு வந்த பின்னர்தான் நாம் உண்மையான பெறு பேறுகளை அறியலாம்.இது போன்றுதான் இவ்வுலக வாழ்வும் மறு உலகத்தில் பெறப்போகும் பெறுபேறுகளும்.
"சகோதர்ர்களே இதை உங்களின் உறவினர்கள்,நண்பர்கள் கற்றவர்களுடன் கலந்தாலோசித்து சரியான முடிவுக்கு வாருங்கள்
 முஸ்லிம்களின் பெயரில் வாழும் இஸ்லாமிய விரோதிகளின் செயற்பாடுகளை பார்த்து இதுதானா? இஸ்லாம் என்று ஏமாந்து விடாதீர்கள்.
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.