Monday, September 12, 2011

இனி நாங்க புத்தளத்தான் தான்!!!!!!!!!


Posted by admin on Sep 9, 2011 in News, Regional News | 2 comments
SRF Swiss Radio and Television சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செய்தியாளிணி கரின் வாக்னர் (Karin Wagner) புத்தளம் விஜயம்

SRF Swiss Radio and Television சுவிஸ் ரேடியோ அன் டெலிவிசன் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செய்தியாளிணி கரின் வாக்னர் (Karin Wagner) செய்தி விவரணமொன்று தயாரிப்பதற்காக புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.

Tuesday, September 6, 2011

கருவலகஸ்வெவ ஸ்ரீ விஜயராஜ விகாரையின் மித்தாலன்கார தேரருடன் சந்திப்பு


Posted by admin on Sep 5, 2011 in News, Regional News | 1 comment
புத்தளம் நகரம் இன நல்லுறவின் சிகரம். அது இன்று ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் கறைபடிந்து விட்டது. இந்நாட்டில் வெளிவந்த பத்திரிகை செய்திகள்விவரணங்கள் இந்நிகழ்வு தொடர்பிலான பிழையான பதிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. மனிதாபிமானமற்ற இப்படுகொலை காரணமாகஎல்லா மக்களுடனும் சகவாழ்வுடனும் நட்புறவுடனும் வாழும் புத்தளம் முஸ்லிம் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். என்றாலும் நாம் இதற்கான பிரயாசித்தங்களை நிறையவே புரிந்துள்ளோம். வியாபார தளங்களை

Sunday, September 4, 2011

முல்லைத்தீவு “முஸ்லிம் அகதி”க்கு சமூகசேவையாற்றியமைக்காக வழங்கப்பட்ட விருதுகளும்,சான்றிதழ்களும்

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் வழங்கப்பட்ட தேசகீர்த்தி விருது.வழங்குபவர் சுவீடன் நாட்டின் இலங்கைக்கான பிரதிநிதி.


கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்ட தேசபந்து,சாமஸ்ரீ விருதுகள்

Friday, September 2, 2011

வண. புத்தியாகம சந்திர தேரர் அவர்களுடன் பெருநாள் சந்திப்பு


Sep 2, 2011 in News, Regional News | 1 comment
கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது நகரத்தில் இடம் பெற்ற அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்ட பின்விளைவுகள் சகோதர சமூகத்திற்கு மத்தியில் குறிப்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் அரசாங்க துறைகளிலும் முஸ்லிம்களை பற்றிய தப்பபிப்பிராயங்களையும் குரோத போக்கினையும் உருவாக்கிவிட்டுள்ளது.

புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை


 Sep 1, 2011 in Social | 0 comments
கடந்த இருபத்தி ஓராம் திகதி இரவு கலக்கக்காரர்களினால் படுகொலை செய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் நிலைய அதிகாரி நவரத்ண பண்டார அவர்களின் மரணமும் அதனைத் தொடர்ந்து சில பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்தும் புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை
மனிதாபிமானமற்ற இந்த செயலின் காரணமாக எல்லா மக்களுடனும் சகவாழ்வுடனும் நட்புறவுடனும் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம் பொது மக்களுக்கும் குறிப்பாக புத்தளம்வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். இந்த துரதிருஷ்டவசமான மரணம்