Sunday, July 31, 2011

43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்



அ ஸ்ஸலாமு அலைக்கும்
"இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை'' என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.
 
ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

Friday, July 29, 2011

முஹாஜிரீன்களே நிலைதடுமாறாதீர்கள்.!

 நாங்கள் முஸ்லிம்களென வாய்பிளக்க பீத்திக்கொள்ளும் நாம் எமது தலைவர் றஸூலேகரீம் முஹம்மது நபி(ஸல்)  அவர்களும்,அந்த ஸஹாபாத் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்றத் சென்றார்கள் மக்கத்து முஹாஜிரீன்களை மதீனத்து அன்ஸாரிகள் அரைவணைத்தனர்.வெறும் கையுடன் வந்தவர்களுக்கு தம்மிடமுள்ளவற்றில் அரைவாசிக்கும் அதிகஅளவில் கொடுத்துதவினார்கள்.

கடத்தப்பட்ட பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் காவத்தமுனையில் மீட்பு _


   
7/29/2011 12:18:53 PM
  பொலனறுவையில் வைத்து கடந்த வருடம் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் நேற்றுக் காலை ஓட்டமாவடி காவத்தமுனை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.

Thursday, July 28, 2011

ஓட்டமாவடியில் மீட்கப்பட்ட சடலம்

பிக்கப்பட்ட நாள்: 28 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:46 ஜிஎம்டி
மின்அஞ்சலாகஅனுப்புக அச்சு வடிவம்
பட்டானி ராசிக் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள்........


பட்டானி ராசிக் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளனஇலங்கையில் கடந்த வருட முற்பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போன புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பட்டானி ராசிக் என்பவரது சடலம் என நம்பப்படும் சடலமொன்று மட்டக்களப்பு ஓட்டமாவடி காவத்தைமுனையில் பொலிசாரால் இன்று வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 26, 2011

தீர்ப்பு நாளின் அதிபதி!

18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்

Sunday, July 24, 2011

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன்.
கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.

Friday, July 22, 2011

வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது


நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகுமா? என்பதை அறிவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கோடிக்கணக்கான படைப்புகளில் மனிதன் சிறந்த படைப்பாகத்திகழ்கிறான்.சிந்தித்து உணரும் ஆற்றலையும், தான் உணர்ந்த்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் ஆற்றலையும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக்கொண்டு மனிதன் படைத்தசாதனைகள் மகத்தானவை தனது கண்டுபிடிப்புக்களைப்பார்த்து தானே பிரமிக்கும் அளவிற்கு மனிதனின் அறிவாற்றல் சிறந்து விளங்குகின்றது.இது மனிதனின் ஒருபக்கமாக இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் மனிதனின் அறிவு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
தனக்குப்பயன்படும் பொருட்களைக்கண்டு பிடிப்பதிலும் இவ்வுலகில் சொகுசாக வாழ்வதற்கான சாதனங்களைக் கண்டு பிடிப்பதிலும்  மனிதனின் அறிவு மகத்தானதாக இருந்தாலும் சரியான கொள்கை,கோட்பாட்டைக் கண்டறிவதில் பெரும்பாலும் மனிதன் தவறாக முடிவு செய்பவனாகவே இருக்கின்றான். இதைப்பல்வேறு சோதனைகள் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

Tuesday, July 19, 2011

''ஹலாலான உழைப்பின் சிறப்பு!''

'அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)''
 
 
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.
தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

Saturday, July 9, 2011

குமுழமுனை விவசாய அபிவிருத்தி பணிகத்தின் சேவைகள்

 திரு வி.கந்தசாமி(விவசாய அபிவிருத்தி அதிகாரி)விவசாயி ஒருவருடன்.