Friday, July 22, 2011

வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது


நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகுமா? என்பதை அறிவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கோடிக்கணக்கான படைப்புகளில் மனிதன் சிறந்த படைப்பாகத்திகழ்கிறான்.சிந்தித்து உணரும் ஆற்றலையும், தான் உணர்ந்த்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் ஆற்றலையும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக்கொண்டு மனிதன் படைத்தசாதனைகள் மகத்தானவை தனது கண்டுபிடிப்புக்களைப்பார்த்து தானே பிரமிக்கும் அளவிற்கு மனிதனின் அறிவாற்றல் சிறந்து விளங்குகின்றது.இது மனிதனின் ஒருபக்கமாக இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் மனிதனின் அறிவு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
தனக்குப்பயன்படும் பொருட்களைக்கண்டு பிடிப்பதிலும் இவ்வுலகில் சொகுசாக வாழ்வதற்கான சாதனங்களைக் கண்டு பிடிப்பதிலும்  மனிதனின் அறிவு மகத்தானதாக இருந்தாலும் சரியான கொள்கை,கோட்பாட்டைக் கண்டறிவதில் பெரும்பாலும் மனிதன் தவறாக முடிவு செய்பவனாகவே இருக்கின்றான். இதைப்பல்வேறு சோதனைகள் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

மாமேதைகள்,பண்டிதர்கள் என்று வரலாற்றில் போற்றப்படுபவர்களும்.நம்கண் முன்னே வாழ்ந்துவருபவர்களும் தாங்களே உருவாக்கிக் கொண்டஒரு கல்லுக்கு முன்னால் கூனி,குறுகி நின்று வழிபாடு நடத்துகின்றான்.“இது நாம் செதுக்கிய கல்தானே! இதற்கு எந்த சக்தியும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லையேஎன்று இவர்களின் அறிவு இவர்களுக்கு வழி காட்ட வில்லை.
பெரிய,பெரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியபலர் “கடவுளுக்கு ஒரு மகன் இருக்கிறான்என்றும்“பிறவிப்பாவத்தை அந்தமகன் சுமந்து கொண்டார்என்றும் நம்பி அவரை வழிபடுவோராக இருந்தனர் என்பது வரலாறு. .“ஒருவரது பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாதுஎன்ற சாதாரண உண்மையைக் கூட இவர்களின் சக்தி வாய்ந்த மூளையால் கண்டறிய முடியவில்லை.“மற்ற மனிதர்களை ஏமாற்றக்கூடாது,  சுறண்டக் கூடாதுஎன்ற சாதாரண உண்மையை படிக்காதவர்கள் அறிந்து கொண்ட அளவிற்கு படித்தவர்கள் அறியவில்லை.
வரதட்சனை வாங்குவது,கலப்படம் செய்வது,மக்களைச் சீரழிக்கும் சினிமாக்களைத் தயாரிப்பது,பெற்றோரைக் கவனிக்காமல் விரட்டியடிப்பது உள்ளிட்ட கொடுஞ் செயல்களை அதிக அறிவு உள்ளவர்கள்தான்அதிக அளவு செய்து வருவதைக் காண்கின்றோம். மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு சரியான நேர்வழியை கண்டறிய முடியாது என்பதற்கு இதை ஒரு அளவு கோலாக கருதலாம்.
கம்யூனிஸம்,சோஷலிஷம்,கேப்பிட்டலிசம்,புதிய கேப்பிட்டலிசம் என்று என்ற பல்வேறு பொருளாதாரக் கொள்கைகள்  உலகில் உள்ளன.ஒவ்வொரு கொள்கையையும் உலகிற்கு தந்தவர்களும் அவற்றை இன்றளவும் துர்க்கிப் பிடிப்பவர்களும் யார்? நல்ல அறிவாளிகள்தான்.
மேற்கண்டகொள்கைகளில் ஏதோ ஒன்றுதான்சரியானதாக இருக்க முடியும். ஆனாலும் அனைத்து அறிவாளிகளும் ஒன்றுகூடி அந்த ஒரு கொள்கை எது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படி ஆயிரமாயிரம் விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளது.ஒவ்வொருவரும் தத்தமது நிலைதான் சரியானது என்று சாதிக்கின்றனர். முரண்பட்ட விடயங்களில் ஒன்றுதான் சரியானதாக இருக்கமுடியும் என்பதுதான் அறிவுப்புர்வமான முடிவாகும்.அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள விஷயங்களில் ஏதோ ஒன்றுதான் சரியானது. மற்றவை தவறானவை என்றால், அறிவுடையவர்கள் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பது பொய்யென இதிலிருந்து தெரிகிறது.சரியான முடிவைக் கண்டறிய முடியாமல் மனிதன் தடுமாறும்  தன்மையுள்ளவனாக  இருப்பதால் நேர்வழியைக்கண்டு பிடிக்கும் பொறுப்பை மனிதனின் கையில் ஒப்படைக்க முடியாது.
மனிதனைப்படைத்த ஏக இறைவன் தான் அனைத்திலும் சரியான முடிவை அறிபவனாக இருக்கிறான்.மனிதனுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பு அவனிடம் இருப்பதுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது.என்றுஇஸ்லாம் அறிவுறுத்துகிறது. சில விடயங்களில் மனிதன் சரியான முடிவை கண்டறிந்த விட்டாலும் தனது சுயநலம் காரணமாக அந்த வழியை மறைப்பவனாகவும் மனிதன் இருக்கிறான்.
ஆட்சியாளர்களால் தனக்கு ஆபத்து ஏற்படுமோ,தீயசெயலை தீமையென்று தெளிவு படுத்தினால் அத்தீமையைச் செய்பவர்களால் தனக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி, தான் கண்டறிந்த சரியான பாதையை மற்றவர்களுக்கு சொல்லாமல் மனிதன் மறைத்து விடுகிறான்.
தனக்கு கிடைக்கும் ஆதாயத்துக்காக தீமைதான் என்று திட்டவட்டமாக தெரியும் ஒன்றை நன்மை தான் என்று பிரச்சாரம் செய்பவனாகவும் மனிதன் இருக்கின்றான்.இத்தைகைய பலவீனம் கொண்டவனிடம் நேர்வழி காட்டும் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாகிய இறைவன்மட்டுமதான் மனிதனுக்குச்சரியான வழியைக் காட்ட முடியும்.என்ற கொள்கையை இஸ்லாம் உலகுக்குச் சொல்கிறது.
எனவே இறைவனிடமிருந்து செய்திகளைப்பெற இயலாத எந்த அறிஞரையோ, எந்த நபித்தோழரையோ பின்பற்றக் கூடாது என்பதை இந்த அடிப்படைத் தத்துவத்தில் இருந்து அறியலாம்.
(இத்தகவல் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய “நபித் தோழர்களும் நமது நிலையும்என்ற நாலிலிருந்து பெறப்பட்டது.)நன்றி

 குறிப்பு -இதைப்படிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.