Monday, January 23, 2012

பொய் ஒரு சாபம்

இத் தீய பழக்கமுடையவர்கள் சமதாயத்தில் குழப்பத்தைத் தவிர வேறெதையும் செய்ய உதவ மாட்டார்கள்.மக்கள் அவர்களை உதவாக்கரை என ஒதுக்கி விடுவார்கள்.
பொய் பேசுபவன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒரு செயலைச் செய்கிறான்.மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு முக்கிய செயலாக பொய் பேசும் பண்பு விளங்குகிறது.இது நீண்ட காலம் வைத்தியம் செய்யப்பட வேண்டிய ஒரு வியாதியாகும்.

Sunday, January 15, 2012

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன்...............


எங்கே அநீதி இருக்குமோ அங்கே அமைதியிருக்க முடியாது என்று இஸ்லாம் கூறுகின்றது.அது வீடாக இருக்கலாம்,கிராமமாகவிருக்கலாம், நாடாகவிருக்கலாம்,ஏன் உலகமாகவும் இருக்கலாம்.நமது நாடும் இதற்கு விதிவிலக்கில்லை.ஆனால் வல்லவமையடைய ஒருவனோ, ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ,ஒரு இனமோ அடுத்தவரைப் பயன்டுத்தி, பலிக்கடாவாக்கி, அடுத்தவர் மீது கால் வைத்து ஏறி மேலே போவதை இப்போலியுலகில் காணமுடிகிறது. இச் செயற்பாடுகளை இன்று எங்கும், எதிலும் காண முடிகிறது.அதற்காக வல்லவர்கள் அடுத்தவர்களை ஏமாளிகளாக எண்ணிவிடமுடியாது.அநீதிக்குள்ளாகுபவர் இஸ்லாமிய வாழ்க்கையுடைவராகவிருந்தால் விதியின் மீது நம்பிக்கை கொண்டவராக இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளராகலாம்.அல்லது வன்முறை யாளராகவும் மாறலாம். ஆக அமைதி நிலை பெற ஒரே வழி நம்மைப் படைத்த இறைவனை மட்டும் வணங்கி வழிபடுவதும். அவனால் அனுப்பப்பட்ட து-தர்களின் து-துத்துவத்தை ஏற்று செயற்படுவதுமாகும். அதாவது ஏகத்துவத்தை பூரணமாக ஏற்றுச் செயற்படுவதாகும்.அதற்காக ஈராக்,லிபியா போன்ற நாடுகளை உதாரணம் காட்ட நீங்கள் முயலக் கூடாது.நான் கூறுவது அல்-குர்ஆன்,அல்-ஹதீஸ்களுக்கமைவாக வாழ்ப வர்களை (முஸ்லிம்களை) மட்டுமே கூறுகின்றேன்

Friday, January 13, 2012

குர்ஆனில் அல்லாஹ்வின் அற்புதங்கள் மனிதப்பிறப்பு)

்kf;fis ,iw ek;gpf;ifapd; gf;fk; miog;gjw;fhf gy;NtW tplaq;fis my;Fh;Md; Kd;itf;fpwJ. rpy ,lq;fspy; thdq;fs;> tpyq;Ffs;> kuq;fs; Nghd;witfis kdpjDf;F rhl;rpahff; fhl;lg;gLfpd;wd. gy trdq;fs; kdpju;fis> mth;fspd; nrhe;j rpU\;bg;G gw;wp ghu;f;Fk; gb Ntz;Lfpwd. kdpjd; vt;thW cyFf;F te;jhd;? ve;j gbfisf; fle;J te;jhd;? Nghd;w tpdhf;fs; %yk; mtu;fSf;F mJ Qhgf%l;lg;gLfpd;wJ.
"ehNk cq;fisg; gilj;Njhk;. vdNt> ePq;fs; cz;iknad;W ek;gNtz;lhkh? ePq;fs; nrYj;Jk; ,e;jphpaj;ijf; ftdpj;jPh;fsh? mij ePq;fs; gilf;fpwPh;fsh? ehk; gilf;fpNwhkh?" (Fh;Md; 56:57-59)

Thursday, January 12, 2012

தமிழ் புத்திஜீவிகளின் அறிக்கைக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் வரவேற்பு _


ஏ.ஆர்.ஏ.பரீல்/வீரகேசரி தேசிய நாளேடு 1/12/2012 2:26:28 PM Share
  இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உள்ளீர்ப்பதுடன் தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புத்திஜீவிகள் 71 பேர் வெளியிட்டுள்ள அறிக்கையை பெரிதும் வரவேற்பதாக முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்முஸ்லிம் உறவைப் பலப்படுத்தவும் தீர்வு முயற்சிகளில் இரு சிறுபான்மை சமூகங்களும் கருத்தொருமித்து செயற்படவும் இவ்வறிக்கை உந்துசக்தியாக அமைந்திருப்பதாகவும் முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவித்தனர்

Wednesday, January 11, 2012

அப்பாவி மக்களுக்கு அநீதம் இழைத்தோர் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீருவர் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)


டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்)



கேள்வி எங்கள் தேசம் – கடந்த மூன்று சகாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் அதில் மூன்றாம் தரப்பான முஸ்லிம் சமுதாயத்தின் பாதிப்புக்கள் குறித்து எந்த அளவு தெரிந்து வைத்திருக் கின்றீர்கள்?
பதில் டாக்டர் அப்துல்லாஹ் -ஆரம்பத்தில் ஈழப்போராட்டத்தை பெரிதும் ஆதரித்தவன் நான்.தமிழ் மக்களுக்காக தனித்துவ தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவன்.இதற்காக நாடுநாடாகச் சென்று ஆதரவுப்பிரச்சாரம் செய்தவன்.
1990 ஆம் ஆண்டு புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் இரு மணி நேர அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்ட போது நான் பிரான்சில் இருந்தேன்.இதனைக் கேள்வியுற்றதும் பிரான்சிலுள்ள இலங்கைத் தமிழ் தலைவர்களை சந்தித்து இது பற்றி வன்மையாக எச்சரித்தேன்.அங்கிருந்து விவாதிப்பது பயனற்றது எனக்கருதி பிரான்சிலிருந்து இலங்கைக்க வந்து இங்குள்ள முக்கிய இயக்கத் தலைவர்களை சந்தித்து இந்தக் கொடுங்கோல் முறையை வன்மையாக எதிர்த்தேன்.

Tuesday, January 10, 2012

பழுதடைந்த ரூபா நோட்டுக்களை வாபஸ்பெற புதிய நடைமுறையை அமுல்படுத்தும் மத்திய வங்கி

Saturday, 07 January 2012 07:03Hits: 139 E-mailPrint

money_srilankaபழுதடைந்த ரூபா நோட்டுக்களை சுழற்சிக்கு விடுவதை தவிர்க்கும் நட வடிக்கையில் இலங்கை மத்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுச் சந்தைகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் போன்ற இடங்களில் மக்களிடம் நேரடியாகச் சென்று  பழுதடைந்த ரூபா நோட்டுக்களை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சல்மான் ருஷ்டியின் இந்தியா வருகை தொடர்பில் சர்ச்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜனவரி, 2012 - 16:17 ஜிஎம்டி

சல்மான் ருஷ்டி
சல்மான் ருஷ்டி
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 20-ம் தேதி நடைபெறும் இலக்கிய விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

Saturday, January 7, 2012

பேரொளியும்,புதுவாழ்வும்-தளபதிரத்தினம்

ளபதி ரத்தினம் என்பவரால் எழுதப்பட்டு,சிறீலங்கா சகோதருத்துவத்தை மீளக்கட்டி யெழுப்புவதற்கான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள “பேரொளியும் புதுவாழ்வும் என்ற புத்தகத்தை படித்தேன்.இப்புத்தகம் ஹிந்து (ஆரியர்) மதம் மற்றும் இஸ்லாம் மார்க்கம் சார்பாக முக்கியமாக பேசுகிறது. அதிலிருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.அதுசார்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் விரும்புகின்றேன்