Monday, January 23, 2012

பொய் ஒரு சாபம்

இத் தீய பழக்கமுடையவர்கள் சமதாயத்தில் குழப்பத்தைத் தவிர வேறெதையும் செய்ய உதவ மாட்டார்கள்.மக்கள் அவர்களை உதவாக்கரை என ஒதுக்கி விடுவார்கள்.
பொய் பேசுபவன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒரு செயலைச் செய்கிறான்.மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு முக்கிய செயலாக பொய் பேசும் பண்பு விளங்குகிறது.இது நீண்ட காலம் வைத்தியம் செய்யப்பட வேண்டிய ஒரு வியாதியாகும்.

பொய் என்பது ஒரு மூஃமீனிடம் இருக்கக்கூடாத பண்பு.எனவேதான் இறைத் து-தர்(ஸல்)அலைஹிவஸல்லம் அவர்கள் இப்படிக் கூறினார்கள்.ஒரு மூஃமீனிடம் எல்லாத் தீமைகளும் இருக்கலாம் ஆனால் அவனிடம் பொய்யும்,நேர்மையின்மையும் இருக்கக்கூடாது.(அஹ்மத்)
பொய் சொல்கின்ற ஒருவன் அந்தப் பொய்யை எவ்வளவு து-ரத்திற்குப் பரப்புகின்றானோ அந்தத் து-ரத்தின் அளவிற்கு அவனது பாவத்தின் அளவை வளர்த்துக் கொள்கின்றான்.ஆகவே பொய் பேசுபவர்கள் மிக்க் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.என்பதில் சந்தேகம் கிடையாது.
எனவே இக் கொடிய பாவத்திலிருந்து விமோட்சனம் பெற்றவர்களாக வாழ்வதற்கு முயற்சிப்போம்.அதற்காக இறைவனை இறஞ்சுவோம்.
( ராஷீத் பின் மல்ஹர்தீன்,ஸாஹிரா கல்லு-ரி,மாவனல்லை)
நன்றி அல்ஹஸனாத். ஜனவரி 2012

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.