Sunday, January 15, 2012

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன்...............


எங்கே அநீதி இருக்குமோ அங்கே அமைதியிருக்க முடியாது என்று இஸ்லாம் கூறுகின்றது.அது வீடாக இருக்கலாம்,கிராமமாகவிருக்கலாம், நாடாகவிருக்கலாம்,ஏன் உலகமாகவும் இருக்கலாம்.நமது நாடும் இதற்கு விதிவிலக்கில்லை.ஆனால் வல்லவமையடைய ஒருவனோ, ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ,ஒரு இனமோ அடுத்தவரைப் பயன்டுத்தி, பலிக்கடாவாக்கி, அடுத்தவர் மீது கால் வைத்து ஏறி மேலே போவதை இப்போலியுலகில் காணமுடிகிறது. இச் செயற்பாடுகளை இன்று எங்கும், எதிலும் காண முடிகிறது.அதற்காக வல்லவர்கள் அடுத்தவர்களை ஏமாளிகளாக எண்ணிவிடமுடியாது.அநீதிக்குள்ளாகுபவர் இஸ்லாமிய வாழ்க்கையுடைவராகவிருந்தால் விதியின் மீது நம்பிக்கை கொண்டவராக இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளராகலாம்.அல்லது வன்முறை யாளராகவும் மாறலாம். ஆக அமைதி நிலை பெற ஒரே வழி நம்மைப் படைத்த இறைவனை மட்டும் வணங்கி வழிபடுவதும். அவனால் அனுப்பப்பட்ட து-தர்களின் து-துத்துவத்தை ஏற்று செயற்படுவதுமாகும். அதாவது ஏகத்துவத்தை பூரணமாக ஏற்றுச் செயற்படுவதாகும்.அதற்காக ஈராக்,லிபியா போன்ற நாடுகளை உதாரணம் காட்ட நீங்கள் முயலக் கூடாது.நான் கூறுவது அல்-குர்ஆன்,அல்-ஹதீஸ்களுக்கமைவாக வாழ்ப வர்களை (முஸ்லிம்களை) மட்டுமே கூறுகின்றேன்
.
1982ம் ஆண்டளவில் முல்லைத்தீவு நண்பரொருவர் யாழ்பாணத்தில் மணம் முடித்தார்.அடுத்த ஆண்டு யாழ் பெண்ணிண் சகோரதனுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச தொழில் கிடைத்து விட்டது.காரணம் சகோதரி முல்லைத்தீவில் திருமணம் செய்ததும் அவரது கணவரின் குடும்பத்துடன் சகோதரனை வாக்காளராக பதிவு செய்யப்பட்டுவிட்டனர். முல்லைத்தீவில் குறித்ததொரு திணைக்களத்தின் தலைவராக யாழ் வாசியொருவர் தலைவராக இருந்த காரணத்தால் அவரது திணைக்களத்திலுள்ள வெற்றிடம் (அத்தொழில்) குறித்த புதியவாக்காளருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவரைவிட தகுதியான முஸ்லிம்இளைஞகள் முல்லைத்தீ விலிருந்தும் அத்தொழில் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதை முல்லைத்தீவு முஸ்லிம்கள் பெரிதாகப் பார்க்கவில்லை.இதேபோல் யாழ் மாவட்டத்தை பூர்வீகமாக்க் கொண்ட அடுத்த சமூகத்தைச் சார்தவர்கள் ஆயிரக்கணக்காண அரச தொழில்களையும்,அரச இடங்களையும் தமது அரசதொழில் அதிகாரங்களையும், செல்வாக்குகளையும் பயன்படுத்தி கையகப்படுத்தியதையும் ஞாபகப்படுத்த வேண்டும்.
v  அண்மையில் முல்லைத்தீவு மீளகுடியேற்றம் சார்பான பதிவு ஒன்று சார்பாக அங்கு சென்றிருந்த போது பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.அங்கு அறிமுகமில்லாத ஒரு வயோதிபரை கண்டேன். அவரைப்பற்றி விசாரித்தேன்.அவர் முல்லைத்தீவு நகரைச் சேர்ந்தவராம்.அவரது குடும்ப விபரங்களை விசாரித்த போது அவர் ஏதேதோ உளறுவதாக உணர்ந்து கொண்டேன்.ஆனால் 1967 களில் முல்லைத்தீவில் அரச தொழில் பார்த்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை.தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்விற்காக பதிவுகளை பதிவு செய்து கொடுப்பனவுகளை பெற்று வருகின்றார்.இவர்  யாழ்பாணத்திலிருந்து இடம்பெயந்து வெளிமாவட்டமொன்றில் பிரபல பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரைப் போன்று வேறு மாகாணங்களிலிருந்தும் பலர் முல்லைத்தீவு மாவட்டத்தினுள் ஊடுருவியுள்ளனர்.காரணம் கல்வியும்,இலவச காணியும்,அரச தொழில் வாய்ப்பும் இலேசாகப்றெறுக் கொள்ளவும், இன்னும் சிலர் புத்தளத்தில் ஒன்றிற்கு மேல் குடும்பப் பதிவுகளை மேற் கொண்டு பாரிய மோசடிகளிலும் ஈடுபட்டனர். அதுபோன்றும் வெவ்வேறு மாவட்டங்களிலும்,பிரதேசங்களிலும் மீள் குடிமர்விற்கான பதிவு களையும் மேற்கொள்ளும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது.
v  முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள்  ஆரம்ப காலத்தில் மிகவும் கண்ணியமானவர்களாகவும்,மார்க்க அனுஷ்டானங்களை முறையாகப் பேணி நடப்பவர்ளாகவும்,ஏனைய சமூகத்தாருடன் அன்பொழுக நடந்து கொள்பவர்களுமாகவே காணப்பட்டனர்.பின்னர் வெளியிடங்களிலிருந்து கூலித் தொழிலுக்க்காக வந்தவர்கள் கஞ்சா, மது போன்றவற்றின் அடிமைகளாகவே காணப்பட்டனர்.காலப்போக்கில் முல்லைத்திலுள்ள  பெண்களை திருமணஞ் செய்து கஞ்சா வியாபாரிளாகவே மாறி  சமூகத்தை கெடுத்தனர்.இன்னும் அவர்களது தலை முறை அதனையே செய்து வருவதுவும் குறிப்பிடத்தக்கது.அதுபோன்ற செயற்பாடுகள் வேறு விதமாகவும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.அண்மையில் முல்லைத்தீவில் கொடுப்பனவு ஒன்றிற்காக மக்கள் குவிந்தனர். ஆனால் குறித்த ஒரு பிரதேச மீள்குடியேற்றவாசிகளின் கொடுப்பனவு பெயர்ப் பட்டியலில் பல பெயர்கள் தவறியிருந்த்து. அத்தவறு குறித்த கிராம சேவை அதிகாரியின் தவறென சிலரும்,மேலிடத்தின் தவறென சிலரும் கூறினர்.முல்லைத்தீவு வாசி ஒருவர் கிராம சேவையாளரின் தவறில்லை.என்றதும் பக்கத்திலிருந்த ஒரு இளைஞன் நீங்கள் ஜி.எஸ் சிக்கு வக்காலத்து வாங்க வேண்டாமெனவும் ,ஜி.எஸ் சிற்கு சாத்த வேண்டுமெனவும் கூறினார்.நான் உடனே அந்த இளைஞனை நோக்கி தம்பி நிதானமாகப் பேசவேண்டும்.முஸ்லிம்களின் நற் பண்புகளை நாம் காட்ட வேண்டும். தவறுகள் எவரும் செய்யலாம் அதையும் முடிந்த வரை பொறுத்துப் போக வேண்டுமென்றேன்.எனக்கு அந்த இளைஞனின் பேச்சில் சந்தேகமேற்படவே,நீங்கள் யாருடைய மகன் என்று கேட்டேன்.
பக்கத்திலுள்ளவர் இவர் முல்லைத்தீவைச் சார்ந்த இன்னாருடைய மருமகன் என்றும் அவரது ஊர் புத்தளம் என்றார்.ஆக இடம் பெயர்வுக்கு முன்னர் எப்படி கஞ்சாசெடி முல்லைத்தீவு முஸ்லிம்களுக்குள் ஊடுருவியதோ! அதுபோல் மீள் குடியமர்வுடன் காடைத்தனமும் மீள்குடியமரப்போகிறது.இதன் மூலம் முல்லைத்தீவு சமூகங்களின் உறவுகளில் இடைவெளியையேற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகிறது. இதை முல்லைத்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட சகல தரப்பினரும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.அதற்கேற்ப நகர்வுகளை மேற் கொள்ளுதலும் அவசியமாகும்.
மீள் குடியேற்ற மோசடிகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் முஸ்லிம் கிராமசேவையாளர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக மக்கள் கருத்துக் கூறுகின்றனர்.முல்லைத்தீவு முஸ்லிம்களுக்குரிய சேவைகளை தமிழ் மொழி பேசும் அடுத்த சமூகத்திலுள்ள கிராம சேவையாளர்களே செய்கின்றனர்.அவர்களுக்கு மீள்குடியேற்ற வாசிகளை அடையாளம் காண்ப தென்பது சிரமமானதேயாகும்.
எனவே கிராம சேவையாளர்களுக்கு உதவியாக இருப்பவர்களும்,கிராம அபிவிருத்திச்சங்கம்,விவசாயிகள் சங்கம்,மீன்பிடிச்சங்கம் போன்றவற்றின்  பொறுப்பாளர்கள் உண்மையான முஸ்லிம்களாக செயலாற்றுவதன் மூலம் ஒருவரின் மேலாதிக்கத்தின் மூலம் அடுத்தவருக்கு அநீதி இளைக் கப்படுவதை தவிர்க முடியுமல்லவா! அதனால் அமைதியை நிலை நாட்டியவர்களாக நீங்கள் ஆகுவீர்கள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.