Friday, June 8, 2018

வடமாகாண சுகாதார அமைச்சு,வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர்,முல்லைத்தீவு,வவுனியா பி.சு.சே.பணிப்பாளர்களின் சுத்துமாத்து.

யுத்தத்தின் போது இறந்தவர்களின் ஆவனங்களைப் பயன் படுத்தி தகமையற்ற பலர் வடமாகாண அரச பதவிகளில் புகுத்ததப் பட்டிருக்கலாம் அலல்து புகுந்திருக்கலாம்.என சந்தேகிக்கப் படுகிறது.
(குறிப்பு)
1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் நான் முல்லைத்தீவை விட்டு வெளியேறும் போது எனது சம்பளம் 1670.00 ரூபாவாகும் கடைசியாக 1990.ம் ஆண்டு மே மாதம் எனது சம்பளத்தைப் பெற்றேன். என்து ஜுன் மாதச் சம்பளம் மற்றும் வேறு சில கொடுப்பனவுகளை வவுனியா பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அவர்களினால் வழங்க வேண்டி இருந்தது. நான் பலமுறை பணியாற்ற கேட்ட போதிலும் எனது வேண்டுதல் நிராகரிக்கப் பட்டது. 2016 இறுதியில் நான் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தேன்.உடனடியாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். எனது பக்க (பணம்) நியாயத்தை கூறியபோது முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி தருவதாகவும் தேவையேற்படும் போது வருமாறு கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் வவுனியா,முல்லைத்தீவு பி.சு.சே.பணிப்பார் அலுவலக நிர்வாக அதிகாரிகள் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு என்னிமுள்ள ஆவணங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் வடமாகாண சுகாதார அமைச்சு தங்களிடம் எனது ஆவணங்கள் இல்லையெனவும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களை இணைத்து வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு விசாரனைக்கு அனுப்பியது.. பின் அவ்வமைச்சின் செயலார் நான் 11 வருடங்களுக்கு மேல் கடமைக்கு சமூகமளிக்காததினால் பொ.சே.ஆ.குழு எனது மனுவை நிராகரிப்பதாக அறிவித்தனர். பொதுச்சேவை ஆணைக்குழு என்னிடமுள்ள உண்மை ஆவணங்களை பார்வையிடாமலும். என்னை நேரில் அழைத்து விசாரணை செய்யாதததை ஆட்சேபித்து ஒரு கடிதமும் எனது ஆவணங்கள் சிலவற்றையும் அனுப்பினேன் இதுவரை பதில் இல்லை.
முல்லைத்தீவு ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஸசேக் ஏ.எஸ்.சப்ரின் மொலவி (நளீமி) இஸ்லாத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லையென் கூறியதால் அதை கைவிட்டேன்.
பின்னர் வடமாகாண ஆளுனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவரின் செய்லாளர் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு எனது கொடுப்பனவுகள், ஓய்வூதியம் என்பனவற்றை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.. நான் வ.மா.ச.சே. பணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பேசிய பின்னர் அவரால் அறிக்கை கேட்டு கடந்த மார்கழி மாதம் முல்லைத்தீவு சு.சே.பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பட்டது. நான் முல்லைத்தீவு சு.சே.பணிப்பாளர் அலுகத்தில் அவரைச் சந்திக்கச் சென்ற போது அங்கு பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தரே என்னுடன் பேசினார்.நான் அங்கு நான்கு முறை சென்றுள்ளேன். இதுவரை அறிக்கை கிடைக்கவில்லை. அக்காலத்தில் எனக்கு சம்பளம் வழங்கியது வவுனியா சு.சே.பணிப்பாளர் அலுவலகமாகும் வடமாகாண சு.சே.பணிப்பாளர் வவுனியா சு.சே.பணிப்பாளரிடமே அறிக்கை கேடடிருக்க வேண்டும்.
அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வவுனியா சு.சே.பணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொணட எனது சம்பள பதிவேட்டில் 1990ம் ஆண்டு மே மாதம் 1670 ரூபா பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் 1990 மார்கழி மாதம் வரை சம்பளம் பதிவு செய்யப்பட்டுள்ளது.(2010.00 வரை) மேலும் அதில் பல பகுதிகள் அழிக்கப் பட்டுள்ளது. 9வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தம்மிடம் எனது அவணமேதும் இல்லையெனக் கூறியது என்னால் இவ்வாவனம் மூலம்பொய்யாக்கப்பட்டது)
எனது சுயவிபரக் கோவையும் வடமாகாண சுகாதார அமைச்சு, வடமாகாண சு.சே.ப.அலுவலகம், வவுனியா சு.சே.ப.அலுவலகங்களில்.இல்லாமல் போயுள்ளது எப்படியென்ற கேள்வி எழுகிறது.
தொண்ணூராம் ஆண்டிற்குப் பின்னரும் எனது சம்பளம் இம்மோசடியான முறையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைகிறது.எனக்கு 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் பணி செய்ய அனுமதியாததற்கு இதுவே காரணம என நம்புகின்றேன்.
எனது சம்பளம் மோசடியான முறையில் யாரோ எடுத்திருக்கலாம் என் சந்தேகப் படுவதாக வடமகாண சு.சே.பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தி பிரதியை வடமாகாண ஆளுனரின் செய்லாளருககு அனுப்பி சில மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை.
கடந்த மாதம் வடமாகாண ஆளுனரைச் சுண்டிக்குழி அலுவலகத்தில் சந்தித்து எனது பிரச்சினையை கூறினேன்.சுமார் 15 நிமிடமளவில் என்னுடன் பேசியும்,எனது ஆவணங்களையும் பார்தார்.பின் உரிய அதிகாரிக்கு இதை பாரம் கொடுப்பதாகக் கூறினார.இதுவரை பதில் எதுவுமில்லை.
அண்மையில் பொ.சே.அணைக்குழுவிடமும், முல்லைத்தீவு சு.சே.பணிப்பாளரிடமும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கேட்டுள்ளேன்.அதன் பின்னர் அடுத்த கட்ட நகர்வு இன்ஸா அல்லாஹ் தொடரும்.