Sunday, April 1, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? - 4


அஸ்ஸலாமு அலைக்கும்
அதிகாலையில் கண்ணயர்ந்து து-ங்கிவிட்டேன்.அழுகுரல் கேட்டு கண் விழித்தேன். ஆம் என்னுடன் புலிகளால் கடத்தி வரப்பட்டவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஈவிரக்கமின்றி தாக்கப்படும் ஒலி பலவிதமாக கேட்பதையும்,தாக்குதலுக்குள்ளாகும் போது அலறுவதும் தெளிவாகக் கேட்ட போதிலும் கேட்கும் கேள்வியோ,கூறும் பதிலோ எனக்கு விளங்கவில்லை. என்னிலையும் இதுதான் என உணரமுடிந்தது. சுமார் ஏழு மணியளவில் என்னிடம் வந்து காலைக்கடன்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?எனக் கேட்டார்கள்.இல்லையெனப் பதிலளித்தேன். சரி விசாரிக்க வேண்டும் வாரும் எனக்கூறி கால்,கண் கட்டுகளை மட்டும் அவிழ்த்து அழைத்துச் சென்றனர்.அது அந்த வீட்டின் உள்வராந்தா அங்கேதான் முதல் விசாரணை நடந்துள்ளது.அங்கே ஒரு மூலையில் இரத்தம் கசிந்த உடையுடன் சக சகோதரன் ஒரு மூலையில் குந்தி அழுது கொண்டிருந்தார்.
என்னை காலை முன் நீட்டியபடி நிலத்தில் அமரும்படி ஒருவன் சொன்னான்.நானமர்ந்து கொண்டேன்.எனது கை பின்னால் சேர்த்து கயிற்றினால் கட்டப்பட்டே இருந்தது.விசாரணை இடத்திலுள்ள தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்களையும் கவனிக்கத் தவறவில்லை .அவர்களின் நீதவான்(வயது சுமார் 28 இருக்கும்) சொன்னார் அவரைப்பாரும் அதுபோலதான் உமக்கும் நடக்கும் நாங்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உம்மை மன்னித்து விட்டிடுவம் என்றார்.அப்போது அவர் சொன்னார் எனது பெயர் சம்பந்தன் நான் கிளிநொச்சியிலிருந்து வந்திருக்கிறன்.மற்றவன் அழகன்(வயது சுமார் 26 இருக்கும்) இவர் முள்ளியவளைப் பிரதேச அரசியல் துறைப் பொறுப்பாளர். (இவரது அன்றையபணி விசாரணைமுழுவதும் ஒலிப்பதிவுசெய்வது) மற்றவர் கட்டை ராஜன்(வயது சுமார்25 இருக்கும்)இவரது அன்றைய பணி ஈவிரக்கமின்றி என்னை அடித்து முறிப்பது.மற்றவன் கறுவல் கண்ணாடி என்ற சந்திரன் (வயது சுமார் 30 இருக்கும்) இவர் முள்ளியவளை பிரதேச இராணுவப் பொறுப்பாளராம்.(இவர்தான் என்னைக்கடத்தும் போது கன்னத்தில் அறைந்த கொடுமையாளன் இவரும் என்னைத் திரும்பவும் தாக்கத் தயாராகவுள்ளவர்) இதெல்லாம் பின்னர்தான் எனக்குத் தெரிய வந்த பெயர் விபரங்கள்
வைத்திலிங்கம் ஈஸ்வரனைக் காட்டிக் கொடுத்தது நீதானே?இதுதான் முதற் கேள்வி நானில்லையென பதிலிறுத்தேன்.உண்மையைச் சொன்னால் மன்னிச்சு விட்டிடுவம் என சம்பந்தன் சொன்னான்.எனக்கு புலிகளின் குணம்,செயற்பாடு தெரியாத முட்டாளா?. நான் மீண்டும் சொன்னேன் நானில்லை என்றேன். பின்னால் நின்ற கட்டை ராஜன் கோடரியால் முதுகில் ஓங்கி அடித்தான்.நான் எந்தக் குற்றச் செயல்களுக்காகவும் அடிவாங்கவுமில்லைஅப்படி வாங்கியவர்களைப் பார்த்ததுமில்லை.சம்பந்தான்  கேட்டான் நீ இல்லாவிட்டால் யார்? காட்டிக் கொடுத்த்து?நான் தெரியாது என்றேன்.மீண்டும் அதே அடி என்னால் தாங்க முடியவில்லை.ஆனால் அலற வில்லை.ஆமிய உன்ர தோட்டத்தில கொண்டு வந்து வைத்திருந்தது நீ தானே?நான் இல்லையென்றேன்.சம்பந்தன் கேட்டான் ஆமியின்ர ஸூ அடியை நீ அளித்தனிதான? நான் ஆம் என்றேன்.அப்டியென்றால் நீதான ஆமியை கொண்டுவந்து தோட்டத“திலை வச்சிருந்து ஈசனுடைய காணியை காட்டிக் கொடுத்தனி? நானில்லை என பதிலளித்தேன்.அப்ப ஏன் அமியின்ர ஸூ அடியை அளித்தநீ? ஒரு ஆமி எங்கட காணிக்குள்ள வந்த ஸூ அடி இருந்த்து அதை நீங்கள் பார்த்தால் தொந்தரவு வருமென எண்ணி அளித்தேன். மீண்டும் கோடரி அடி.நான் அழவில்லை அடுத்தவன் சொன்னான் மாத்தி அடிரா இவன் சத்தம் போடாமலிருக்கிறான்.சம்பந்தன் கேட்டான் லாயிலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? வணக்கப்பட தகுதியான கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.அல்ஹம்துலில்லாஹ் என்றால் என்ன? எல்லாப்புகளும் இறைவனுக்கு மட்டும் என்றேன் நான்.ஈசனைக்காட்டிக் கொடுத்த்து ஏன்? என சம்பந்தன் கேட்டான்.நான் சொன்னேன் ஈசன் எனது நண்பன் அவன் புலியென்று கூட எனக்குத் தெரியாது என்றேன்.தொடர்ந்து தடித்த னைலோன் கையிற்றை இரண்டாக மடித்து அடித்தான். தாங்க முடியாத வலி எல்லாப் புகளும் இறைவனுக்கென எண்ணிக் கொண்டேன்.மாறி,மாறி அடி வழுந்தபடியே இருந்தது.ச்பந்தன் ஒரு றைபிளைக் காட்டி இது வ்வுனியா ஏ.எஸ்.பி. யிடம் பறித்தது இதுதாலதான் உன்னைச் சுடப்போறன் என்று...வன்...ரூ.....திறீ... என்றான் நான் பயம் கொள்ளவில்லை இப்படி மாடுமாதிரி அடிக்கிறதை விட சுட்டுக் கொல்லு என்றேன்.இதற்கிடையில் தலையிலிருந்து பாயும் இரத்தம் மூக்கு வழியாக ஓடிக் கொண்டிருந்தது.என்னிடம் பயம் இல்லை. சிங்களவனை மோடன் என்ற சொல்லுறீயள் அவன விட நீங்கள்தான் கொடூரமானவர்கள் என்றேன். அதற்கு அழகன் அடிக்கும் ராஜன் சிங்கள தகப்பனுக்குப் பிறந்தவன் என்றான்.அடி காரணமாக எனது உடல் வீங்கி பருத்து விட்டது.அசைய முடியாத வருத்தம்.பசி வேறு.தண்ணீர் தாகமும் கூட புலிகளிடம் அதை எதிர் பார்க்க முடியுமா?நோம் சுமார் பத்து மணியை எட்டியிருந்த்து.அவர்கள் என்னிடம் ஈசன் என்றவனைப் பற்றி எதையும் பெற முடியவில்லை.ராஜனை முந்தி எங்கசரி பார்த்தனீரா? எனக் கேட்டான். ஒருவன் தண்ணீரூற்றில இருக்கிற பஸ் காரி வீட்டுக்கு வந்து போறத பார்த்திருக்கிறன் ஆனா இவர் புலியென்று தெரியாது என்றேன்.அவ எப்படியான ஆள் என்றான் அவன்.அவ்வை பற்றி ஊரிலை நல்லபிப்பிராயம் மக்கள் மத்தியில் இல்லை என்றேன். அவ்வோட இவனுக்கு தொடர்பு என்று சொல்லச் சிரித்தார்கள்.மீண்டும் நீ ஈசனைக் காட்டிக் கொடுத்தாக ஏற்றுக் கொள்ளு நாங்கள் உங்கள மன்னித்து விடுறம் என்றான் சம்பந்தன்.நான் சொன்னேன் நான் யாரையும் காட்டிக் கொடுக்க வுமில்லை,அதற்கு உதவியாக இருக்கவுமில்லை,அதை யாரு செய்ததென்று எனக்கு தெரியாது. நீங்க வேற என்ன கேட்டாலும் சொல்லுறன். நான் உண்மையை மட்டும் தான் பேசுபவன் என்றேன்.கட்டை ராஜன் அடித்துக் களைத்து விட்டான்,கறுவல் கண்ணாடி சந்திரனும் என்னுடைய காலில் ஏறி மிதித்தான்.சம்பந்தன் மரத் சுத்தியால் முழங்காலிலும்,குதி காலிலும் அடித்தான் அவர்களுடைய எந்தத் தாக்குதலுக்கும் பதில் ஒன்றுதான் எனக்குத் தெரியாது.அப்போது ஒரு அக்கா வந்தா இவர்களி லொருவன் அக்கா இங்க வாங்க ஈசனைக் காட்டிய துரோகியை பாருங்க என்றான். நானும் கடுமையான குரலில் அக்கா ஈசனைக் காட்டிய துரோகியென்று என்னைப் பார்க்க வரவேண்டான்.வைத்திய சாலையில் வேல செய்யிற முஸ்லிம் பெடியனை பார்க்கிறதென்றால் வாருங்கள் என்றேன். அவ திரும்பிப் போய் விட்டா.காதல் கதை,காமக்கதை,ஊர்க்கதைஇஸ்லாமிய மார்க்கம் சார்பான விளக்கம் எல்லாம் கேட்டார்கள்.ஆனால் காரியத்தில் கண் தவறவில்லை. அதாவது ஈசனை காட்டியது நீதானே?எல்லாவற்றிற்கும் சரியான பதிலை சொல்லத்தவறவில்லை. ஆனால் அவர்கள் எதிர் பார்த்த பதில் கிடைக்கவில்லை.எனக்க அல்லாஹ்வின் உதவி பூரணமாகக் கிடைத்தது.அவர்கள் மனிதர்கள் போல் இல்லை. காட்டு விலங்குகள் போல் நடந்து கொண்டார்கள்.அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.பத்தரை மணியளவில் விசாரணை முடிந்தது. ஆனால் அவர்களின் முடிவு நான்தான் ஈசனை இராணுவம் சுட்டுக் கொல்வதற்கு உடந்தையாக என்பதுதான். பின்னர் ஒரு துண்டு பாணும்,ரின் மீன் சம்பலும்,ஒரு டம்லர் தண்ணீரும் தந்தார்கள்எனக்கு பசிதான் ஆனால் அப்பானை எடுத்த பிய்த்துச் சாப்பிடவோ?.தண்ணீர் டம்லரை து-க்கிக் குடிக்கவோ என்னிடம் சக்தி இல்லை. ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. கஸ்டப்பட்டு சாப்பிட்டேன்.உடல் முழுமையாக வீக்கமாகி விட்டது. மீண்டும் காலையும்,கண்ணையும் கட்டி கொண்டுபோய் ஒரே அறையில் இருவரையும் போட்டு கதவையும் பூட்டிவிட்டார்கள்.

தொடரும்
No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.