Sunday, February 16, 2014

வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்களா ?



அஸ்ஸலாமு அலைக்கும் ஈமான் கொண்டவர்களே!

நீண்ட நாட்களின் பின்னர் உங்களை மீண்டும் சந்திப்பதற்கு வாய்பளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.2011 செப்ரெம்பர் மாதத்தில் எனக்கேற் பட்ட நோய் காரணமாகவும்,கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாகவுமே உங்களைச் இதன் மூலம் சந்திக்க முடியாமைக்கான காரணமாகும்.தொடர்ந்தும் ஆதரவு தரும்படி தயவாகவும்,அல்லாஹ்விற்காகவும் கேட்டுக் கொள்கின்றேன்.
2012.04.18ம் திகதி எழுதிய கட்டுரையின் தொடர்ச்சியை உங்களுக்குத் தர விளை கின்றேன்.
கறுவல்கண்ணாடி என்றழைக்கப்படும் முள்ளியவளைப் பிரதேச தமிழீழ விடுத லைப்புலிகளின் இராணுவப் பொறுப்பாளர் சந்திரன் உடன் நடவடிக்கையில் இறங் கியிருக்க வேண்டும்.இருவரது கட்டுக்கள் அவிழ்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. பச்சையரிசிச் சோறு,பொரித்த முட்டை,பாலாணம்(சொதி) அந்த நேரத்தில் அது இப்பவுள்ள கோழி புரியாணி மாதிரித்தான் சுவையாகவும்,தேவையுடையதாகவும் இருந்தது.சாப்பிடுவதில்தான் சிக்கல் காணப்பட்டது.கை கழுவுவதற்கு தண் ணீரும் அதற்குரிய சட்டியும் தந்தார்கள்.குனிந்து சாப்பிட முடியாது அதற் காக மட்டை நார் கடகம் ஒன்றைக் கவிழ்த்து அதன் மேல்தான் உணவுப் பார்சலை வைத்து இலகுவாகச் சாப்பிட உதவினார்கள்.ஆனால் எமது கை சோற்றை அள்ளி வாயில் வைக்க மறுத்தது,வைத்தாலும் வாய் அதை மெல்ல மறுத்தது,மென்றாலும் அதை விழுங்க குரல்வளை மறுத்தது.என்ன செய்ய எப்டியும் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.அவ்வளவு பசி இருவ ருக்கும்.ஒருவாறு சாப்பிட்டு முடித்ததும் எனக்கு தலையில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு தையல்போட்டு மருந்து கட்ட வைத்தியரை கொண்டுவர புறப்பட்டார்கள்.  நான் தேவையில்லையென மறுத்து விட்டேன். புதிய ஆடைகள் வாங்கி வந்திருந் தார்கள்.காரணம் எமது உடைகளெல்லாம் இரத்தக்கறை படிந்திருந்தது.ஆழம் கூடிய கிணற்றில் தண்ணீர் அள்ளித் தருவதா கவும் குளித்துவிட்டு உடைகளை மாற்றும்படியும் கூறினார் கள்.நான் மறுத்து விட்டேன்.பிறகு உடைகளையாவது மாற்றிக் கொள் ளும்படி கூறினார்கள். அதற்கும் நான் மறுத்து விட்டேன்.அப்போது கறுவல் கண்ணாடி சொன்னான். அண்ணே! உங்களை உங்கட வீட்டார் இந்த கோலத்தில பார்த்தால் கவலைப் படுவாங்கள். உடைகளையாவது மாற்றும்படி கேட்டுக் கொண்டதற்கமைவாக அதனைச் செய்தோம்.இப்ப எனது பருமன் வந்ததை விட இரண்டு பங்கு பருத்து (வீங்கி)க் காணப்பட்டது. நடக்க முடியாது,பேச முடியாது.இந் நேரம் எம்மை ஏற்றிச் செல்வதற்கென வாகனமும் வந்த விட்டது.1986 களில் அவர்களுக்கென சீருடை ஒன்று அமைக்கப் பட்டிருக்கவில்லை. அவர்களின் சீருடையாவது பு+வாளிச்சாறமும்,கம்பளி துணியினால் தைக்கப்பட்ட சேட்டுமே ஆகும். இப்போது அவர்கள் எப்படியாவது என்னை தங்களுடன் இணைக்கும் எண்ணத்திலேயே செயல்பாடு அமைந்திருந்தது. இதற்காக தமது சீருடையை ஒத்த சேர்ட்டும், சாறமும் தத்திருந்தார்கள்.ஆயுதங்களை் பலவற்றைக் காண்பித்தார்கள்.நான் எதற்கும் தயாரில்லை.என்னை உடனே கொண்டுபோய் வீட்டில் விடுமாறுதான் நெருக்குதல் கொடுத்தேன்.
அப்போது கண்ணாடி சொன்னான்.உங்களுடைய பாதுகாப்பிற்கு சில சாமான்கள் தரப்போவதாக,நான் உடனே சொன்னேன்.உங்களுடைய பாதுகாப்புச் சாமான் எமக்க்குத் தேவையில்லை என்றேன்.இல்லை யண்ணே சாப்பா்டுச் சாமான் மட்டும் தான் என்றான்.இதற்கிடையில் இறத்தக்கறை தோய்ந்த உடைகளையும் நான் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.அவர்கள் எனக்கு இரண்டு லெமன்பப் பிஸ்கட் பைகட்,வீவா போத்தல் ஒன்று,மாமைட் போத்தல் ஒன்று,கோப்பி பைகட் ஒன்று அத்துடன் ஐநுாறு ரூபாய் பணமும் தந்து ,மீண்டும் எமது கண்களைக்கட்டி வாகனத்தில் ஏற்றி மாமூலை என்னும் ஊரில் இறக்கி ஒருவரை அழைத்து புட்பைசிக்கலில் ஏற்றி இவர் சொல்லும் இடத்தில் இறக்கிவிடும் படி அனுப்பி வைத்தார்கள்.நான் தண்ணீரூற்று நெடுங்கேணி சந்தியில் இறக்கி விடும்படி கூறினேன்.நான் நேரே எனது ரெியம்மா வீட்டிற்கத்தான் போனேன்.அன்றிலிருந்து ஆங்கில வைத்தியமும்,நாட்டு வைத்தியமும் செய்த போதிலும் இன்றும் கையை மேலே துாக்க முடியாமல் சில வேளைகளில் துன்பப் படுகின்றேன்.முதுகு வலியும் காணப்படுகிறது. புலிகள் ஏற்றுக் கொண்டார்கள் நான் காட்டிக்கொடுக்க வில்லையென்று ஆனால் சக சுகாதாரத் தினைக்கள அதிகாரிகள் என்னை ஓரக் கண்ணால்தான் பார்த்தார்கள்.அதன் காரணமாக 1990ல் இடம் பெயர்நததின் பின் வவுனியா வைத்திய சாலையில் பணிக்குச் சேர முயன்றும் அன்றைய வவுனியா பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரின் பழி வாங்கும் கொடூர சிந்தனையால் புலிகளால் பாதிக்கப்பட்டிருந்த காலத்திற்கு வைத்திய அத்தாட்சி பத்திரம் தரவும் மறுத்து குறித்த காலத்திற்கு சம்பளமற்ற விடுமுறையாகவும் ஆக்கி விட்டார்கள். எனக்கு அவர்களிடம் இருந்து வரவேண்டிய 1990 .6ம் மாதச் சம்பளம்,இருவருட சீடுடைத் துணி,மூன்று மாத வாழ்கைச் செலவுப்படி,இடர்காலக் கொடுப்பனவு என்பன தராமல் விட்டதுடன்,பணியையும் தொடர அனுமதிக்கவில்லை.அதற்காக இன்றுவரை போராடுகின்றேன். இன்ஸா அல்லாஹ் போராட்டம் தொடரும். முஸ்லிம்கள் யுத்த காலத்தில் வடக்கில் இருந்திருந்தால் காட்டிக் கொடுத்த எல்லாப் பழியும் எம்மில்தான் வந்திருக்கும்.அல்லாஹ் காப்பாற்றி காட்டிக் கொடுத்தவர்களையும் உள்ளங்கை நெல்லிக் கனியாக அல்லாஹ் வெளிப் படுத்தியும் விட்டான்.(எல்லாப்புகளும் அல்லாஹ்விற்கே) எந்த அநியாயக் காரனும் ஜெயித்ததாக சரித்திரத்தில் இல்லை. முற்றும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.