Tuesday, April 22, 2014

எமது மனதையும் கிளறி விடும் வடமாகாண அரசியல் வாதிகளே! அரச அதிகாரிகளே!!

நன்றி -  எங்கள் தேசம் ( 2014.04.04)




 
வடமாகாண முஸ்லிம்களுக்கு இழைக்ககப்பட்ட அநியாயத்திற்காண தீர் வினை வடமாகாணசபை தமது நிர்வாகக்கட்டமைப்புக்குள்ளாளும்,மத்திய அரசிடமிருந்தும்,சர்வதேச அரச சார்பற்ற மற்றும் மனிதநேய அமைப்புகளி டமிருந்தும் பெற்று வழங்குவதுடன் தேவையேற்படின்  அதற்கான பரிந்துரை களையும் முன் வைக்க வேண்டும்.மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து செயற்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு அவர்களால் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. 1990ம் ஆண்டு முஸ்லிம்கள்  வடமாகாணத் திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரான காலப் பகுதியில் அம்முஸ்லிம் இளைஞர்களை நிராயுதபாணிகளாக்கி கொல்லப் பட்டதாக அல்லது காணாமல் செய்யப்பட்டவர்களாக கருதப்படும் (சந்தேகிக்கப்படும்) இளைஞர்களின் நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு  போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். இப்படியான உரிமைகளை வடமாகாண அரசு செய்தல் அவசியமாகும். இப்படியான  செயற்பாடுகள் வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகப் பூமியில் வாழ்வதை தமிழ் பேசும் ஹிந்துக்களும்,கிருஷ்தவர்களும் விரும்பும் ஒரு நல்ல சமிக்கையாக வட க்கிற்கு வெளியில் வாழும் வடமாகாண தமிழ் பேசும் முஸ்லிம்கள் கருத்திற் கொள்ள முடியும்.ஏன் பூரணமாக அங்கு மீள்கடியேறி வாழும் முஸ்லிம்களும் நம்புவார்கள்.அதைவிடுத்து வடமாகாண அரசும்,அரச அதிகாரிகளும் சில விடயங்கயில் விட்டுக் கொடுப்பின்றி அரசியல் செய்ய முயல்வதாலும் உரிமைகளை வழங்க இடையூறாக செயற்படுவதாலும் வடமாகாண முஸ்லிம்கள் மனம் நொந்து போயுள்ளனர்.இதன் காரணமாக தமது வாக்க ளிக்கும் உரிமையைக்கூட தாம் தற்போது வாழும் பிரதேசங்களில் பதிவு செய்துள்ளனர்.தொடர்ச்சியாக இப்படியான எண்ணங்ள் வளர்ந்து செல்வ தையும் காண முடிகிறது.குறிப்பாக யாழ்பாண மாவட்டத்தில் மீள் குடிணமர விரும்பும் முஸ்லிம்களுக்கு போதிய காணிகள் இல்லை.எனவே யாழிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தமது வாக்குகளை புத்தளத்தில் பதிவு செய்து கடந்த மாகாண சபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ் வேட்பாளர்  ஜனாப் நியாஸ் என்பவருக்கு தமது கன்னி வாக்குகளை வழங்கியதன் காரணமாகத்தான் தான் மட்டுமாவது புத்தளம் மாவட்டத்தில் வெற்றி பெற்றதாக தமது துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தார். இது புத்தளம் வாழ் மக்களை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.இதனை வடமாகாண தமிழ் அரசியல்தரப்பு கவணமெடுக்கத் தவறினால் எதிர் காலத்தில் கடந்த காலத்தை விட பாரிய  வாக்குகள் குறைவடையக் கூடிய சூழல் காணப் படுகிறது. இதன் காரணமாக பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மேலும் குறைவடையலாம்.எனவே மீள் குடியமர்வென்பது எங்கிருந்து புறப்பட்டார் களோ அந்த இடத்தில் அல்லது அந்தப் பிரதேசத்தில் குடியமர்த்துவது தான் மீள்குடியேற்றம்.அதைவிடுத்து சரணாகதியடைந்த பிரதேசத்திலுள்ள நில புலங்களை வடக்கிலுள்ள அதிகாரிகள் கணக்குப் பார்க்க விளைபவர்கள் முதலில் முஸ்லிம்களிடமிருந்து 1990ளில்  பலவந்தமாகப் பறித்தவற்றைக் திரும்பக் கொடுத்து விட்டுத் தான் பேச வேண்டும்.அதுதான் அவர்களுக்கு கௌரவத்தையும் தரவல்லது. என முஸ்லிம் அகதி நம்புகின்றான்.மேலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை மட்டும் தமிழ் தரப்பு அரவணைப்பதில் பலனேதும் கிடைக்கப் போவவதில்லை. அவர்களது வாக்கு வங்கிகளாக  மாற்றப்பட்ட முஸ்லிம்களையும் அரவ ணைக்க வேண்டும்.அதுதான் தமிழ் பேசும் மக்களின் வெற்றியாகவும் அமையும். பல நுாற்றண்டிற்கு முன்னர் வடமாகாண நல்லுார் கோவில் பிரதேசசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் குடிநீர்க் கிணறுகளுக்குள் பன்றிகளை வெட்டிப்போட்டு முஸ்லிம்களிடமிருந்து அவர்களின் காணி களையும் விலை மதிப்புள்ள சொத்துக்களையும் அபகரித்து நாவாந்துறையை யும், முல்லைத்தீவையும் நோக்கி துரத்திய காலம் தொடங்கி 1990ம் ஆண்டு வடமாகாணத்தில் வாழ்ந்த எமது முழுவளத்தையும் அபகரித்துக் கொண் டீர்கள். இத்தோடு இதுபோன்ற செயற்பாடுகளை நிறுத்திவிட்டு   முஸ்லிம்க ளுக்கான உரிமைகளையும், தேவைகளையும் மனமுவர்ந்து வழங்க முன்வர வேண்டும். உங்களோடு இனிய மொழி பேசி இரண்டறக் கலந்து வாழ்ந்த சிறு பாண்மை முஸ்லிம்களின் உரிமைகளை வழங்காது உங்களது உரிமையை  மட்டும் பெற்றுக் கொள்ள நினைப்பது சரியான கொள்கைதானா?


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.