Sunday, October 11, 2015

முல்லைத்தீவு முஸ்லிம்களின் அவல நிலை. -பகுதி 1

நேற்று  இரவு ”சக்தி” தொலைக்காட்சியில் எட்டுமணிச் செய்தியில் வட மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு  உறுபடபினர் ரவிகரன் முல்லைத்தீவு  முஸ்லிம்களின் காணி, குடியிருப்பு விடயத்தில் மூக்கை நுழைத்து கருத்துக்கள் கூறியது மிகவும் வேதனை தருவதாக இருந்தது.அவர் அமைச்சர் றிஸாத் பதிறுத்தீன் அவர்களுடன் ஏதாவது அரசியல் ரீதியாக முரண்பாடு இருந்தால் அதை அவருடன் தனிப்பட்ட முறையில் பேசி தீர்க்க வேணடும்

.நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமை யாற்றும் போது கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தார் ரவிகரன் அவரது மனைவி வைத்தியசாலையில் சிறந்த தாதியாக பணியாறிறியவர் இநதவகையில் எனக்கும் ரவிகரனுக்கும் நட்பு காணப்பட்டது.பின் யுத்த காலத்தில் தனது பிள்ளைகளை படிப்பிப்பதற்காக நீர்கொழும்பில் வாழுவதாக என்னை பஸ்ஸில் சந்தித்து நட்பு பாராட்டியதுடன் அவரது தொலைபேசி இலக்கத் தையும்  தந்து நீர்கொழும்பு வீட்டிற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். நானும் அவர்மீது மே்மபாடான எண்ணத்தைக் கொணடிருந்தவன். முஸ்லிம் களின் காணி கச்சேரியின் போதும் முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்கள் கூறி இன்று வரை காணி வழங்காமல் அதிமான முஸ்லிம்கள் மீள்குடியமர முடியாத சூழழில் இருக்கின்றனர்.குறித்த செய்தியானது என்னை இந்த நிலைக்கு  (எழுதுமாறு) துாண்டியதுகுட்டக் குட்ட குணிபவனும் முடாள், குணியக்குணியக் குட்டுபவனும் முட்டாள் என்றொர பழமொழியுண்டு முல்லைத்தீவு முஸ்லிம் இளைஞர்களே இது உங்களினதும்,சமாதானத்தை விரும்பும் முல்லைத்தீவு தமிழ் அன்பர்களுக்காகவும்.
 தமிழர்களின் போராட்டததை முஸ்லிம்களாகிய நாம் காட்டிக் கொடுக்க வில்லை.என்பது நிரூபனமாகியுள்ளது.தழிழர்கள் எமது சொத்துக்களை பறித்துக் கொண்டு எமது பாரம்பரிய வாழ்விடங் களிலிருந்து துரத்தினாலும் நாம் நம்பிய இஸ்லாமிய மார்க்க வழி பாடுகளும்,எம்மால் வழிபடும் கடவுளான ” அள்ளாஹ்”வும் எமது சமூகத்தை கைவிடவில்லை
என்பதை முள்ளிவாய்காலில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முல்லைத்தீவு  முஸ்லிம்களைப் பார்த்துக்கூறுவதை கேட்டவன் என்ற வகையில் இதை எழுத விளைகின்றேன். அதிகமான தமிழர்கள் இன்னும் முஸ்லிம்களை இழிவாக நோக்குவதையும்,முகநுாலில் எம்மை தகாத வார்த்ததைப் பிரயோகங்கள் மூலம் விமர்சிப்பதையும் அவதானிக்க முடிகிறது.அவர்கள் இன்னும் மனந் திருந்தவில்லை.திருந்தவும் விடமாட்டார்கள் போலும். அதாவது நாய்வால் நிமிராது என்பதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. அவர்களின் செயற்பாடுகளும்,பார்வையும்  பார்க்கவும்,கேட்கவும் முடிவது டன் சில செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கிறது.
தமிழர்கள்  தாம் இலங்கையில் சிறு பாண்மையினரெனக்கூறி பெரும் பாண்மை சிங்களச் சமூகத்துடன் தவழ்ந்து தொடக்கிய போராட்டம் முதுமையில் ஓடியாடி  நடத்தியும் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை் காரணம் ஒற்றுமையின்மை, காட்டிக் கொடுப்பு,.மூத்த தமிழர்களின்  தவறான வழி காட்டல் மூலம் ஈழம் என்றும் தமிழ் என்றும் சூடேற்றி விட்ட இளைஞர் களின் அடாவடித்தனம். விட்டுக் கொடுப்பு இன்மை,சமாதாத்தில் நம்பிக்கை இன்மை, நானும் எனது மதமும் சிறப்பானதென்ற கற்பனையுடன் கூடிய கர்வம், தம்முடன் இரண்டறக்கலந்து வாழ்ந்த முஸ்லிம்களை தொப்பி பிரட்டிக ளென்றும்,சோனிகளென்றும் அவமதிக்கும் மனப்பாங்கு ஏன் தமது சமூகத்த வர்களுக்குள்ளேயே வண்ணான்,அப்பட்டன், பறையன், பள்ளன், கோவியன், வெள்ளாளன், உடையான், பிராமணர் என பலவகையாக பிரித்து வைத்து தம்மை மேலாகக் கருதி அழகு பார்க்கும் தலைமைத்துவத்தையடைய  சமூகமாகவும் விளங்கியது.
இப்படியான கடந்த கால வறலாற்றை மறந்து 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த துன்ப அனுபவத்தின் பின்னராவது மனந்திருந்தி வாழ கடவுள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்த போதிலும் நாம் அப்படித்தான் வாழப் போகிறோம் என்று அடம் பிடித்தால் ஆகப்போவது  எதுவுமில்லை.
நீங்கள்  பெரும்பாண்மையினராக வாழ்ந்துவரும் முல்லைத்தீவில் (வடமாகாணம்) சிறுனபண்மையினராக வாழும் எம்மை தாழ்த்தி மிதிக்க முற்படுவது ஏன்?.சமாதானத்தை விரும்பும் சில தழிழ் சகோதரர்களையும் அந்த புலி பாசறையிலிருந்து கொண்டு அவர்களினதும் மற்றும் சிறு குழந்தை களின் உள்ளங்களிலும், இளைஞர்கள் மத்தியிலும் கொடூர இன விசத்தை விதைப்பது ஏனென்று கேட்க விளைகின்றேன். உங்களுக்கு உரிமை சிங்களவன் தரவேண்டும் தமிழராகிய  நாம் யாருக்கும் அவர்களது(முஸ்லிம்) உரிமையை வழங்கி விடக் கூடாது.உங்களது பதவி பட்டங்களை பாதுகாக்கப் போடும் வேடமா? அல்லது மிகுதியாக உள்ள தழிழ் சகோதரர்களையும் அழிக்கப் போடும் திட்டமா? நீங்கள் பேர்டும் வேடம் நிலைத்து நிற்காது அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.