Tuesday, February 16, 2016

குரங்கிற்கு வாழ்க்கைப்பட்டால் தொங்கித்தான் ஆகவேண்டும்




அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இலங்கை அரசியல் களப்பரப்பில் அண்மைக் காலமாக வெளிபடுத்துகின்ற கருத்துக்களும்,அறிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒரு திருப்திகரமான மனோ நிலையை தோற்றுவித்திருக்கின்றது.

அமைச்சர்  பாட்டாளி சம்பிக்க ரணவக்க மினச் சிறந்ததொரு கல்வியலாளரும், சர்வதேச அரசியல் கள நிலவர அவதானிப்பாளருமாவாவார்.இருந்த போதிலும் குரங்கிற்கு வாழ்க்கைப்பட்டால் கொப்பில்  தொங்குவது சகஜம்என்ற கடந்த மஹிந்த ரெஜிமென்டுடைய சர்வாதிகார ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கெதிராக பலதரப்பட்ட இனவாதக் கருத்துக்களை தொடர்ந்தேச்சையாக  விதைத்தும், வெளியிட்டும் வந்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,கிழக்கமாகாண இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் தொடர்பில் இவர் வெளியிட்ட விமர்சனங்களும்,குற்றச்சாட்டுக்களும் ஆபத்தானவை மாத்திரமின்றி 2104ம் ஆண்டு மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக பௌத்த பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பிலிலிருந்து கடல் வழியாகத தப்பித்து 71 முஸ்லிம்கள் பொத்துவில் கடற்பரபில் நிரக்கதியாக நின்ற போது இலங்கை கடற் படையினர் அவர்களை மிட்டெடுத்து அகதி முகாமொன்றில் அபயமளித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த அவ்வகதிகள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக உடனடியாக நாட்டை விட்டும் வெயியேற்றும்படி பாராளு மன்றத்தில் வைத்தே குரலெழுப்பினார்.அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஒட்டு மொத்தத்தில் இலங்கை நாட்டின் இஸ்லாமிய சமூகத்திற்கெதிரான ஊடக பயங்கரவாத்த்திற்கு றிப்பன் வெட்டி திறப்புவிழா நடாத்தியவர்களில் அமைச்சர்  பாட்டாளி சம்பிக்க ரணவக்க முதன்மையானவர் என்றால் அது மிகைவில்லை.
ஆனாலும் மஹிந்த ரெஜிமென்டுடைய இனவாதப்போக்கு ஜனநாயக நீரோட்டத்திற்கு விரோதமானது.என உணர்ந்து கொண்டதுடன் அந்த சர்வாதிகார குடும்ப நிருவாகத்தின் கோரப் பிடியிலிருந்தும் தன்னை லாவகமாக விடுவித்துக் கொண்டார்.
அந்த வகையில் தற்போது இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக பாட்டாளி சம்பிக்க ரணவக்க கொண்டுள்ள நிலைப்பாடும் முன்வைக்கின்ற கருத்துக்களும் அவர் மீதான ஒரு மதிப்பையும்,நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தி நிற்கின்றன.
இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் வகிபாகம் மற்றும் ISIS என்ற சர்வதேச ஆயத்தாரிகள் தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் ஆக்க பூர்வமானதாகவம்,கடந்தகால கசப்புணர்வுர்களை மறக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.
எனவே உள்ளங்களைப்பரட்டக்கூடியவன் அள்ளாஹ் ஒருவன் மாத்திரமே அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவினுடைய உள்ளத்த்தில் நீண்ட காலமாக குடி கொண்டிருந்த இஸ்லாமிய சிந்தனை விரோதப் போக்கானது திசை திருப்பி இருக்குமென்றால் அதுபோன்று ஏனைய இனவாதிகளுடைய மனோ நிலைகளும் மாற்றம் பெற வேண்டுமென வல்ல அள்ளாஹ்வை பிரார்த்திப்போம்.
-முஹம்மது நியாஸ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.