









ஸ்ரீ லங்கா, புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கொத்தாந்தீவு கிராம சேவையாளர் நிவாகத்தின் கீழ்வரும் கிராமம்தான் ரஹ்மத்புரம் ஆகும். இக்கிராமத்தில் 1990 ம்ஆண்டு வட மாகாணத்திலிருந்து அகதிகளாக்கப்பட்டமுல்லைதீவு,மன்னார் ஆகிய மாவட்ட
முஸ்லிம்கள் சிலர் 1993 ம் ஆண்டு இக் கிராமம் அமைந்த இடத்தில் 10,பேர்ச்செஸ் காணித்துண்டு ஒன்று ரூபா 7000 முதல் 10000 ரூபா வரையான தமது சொந்தப்பணத்தில் வாங்கிக் கொண்டார்கள். இதன் மூலம் மூன்று வருட அகதிமுகாம் வாழ்க்கைக்கு முடிவும்கண்டனர். தமது பணத்திலேயே ஓலை குடிசைகளையும் அமைத்து வாழத் தொடங்கினார்கள் . 1994 ம் ஆண்டு பதவிக்கு வந்த மாண்புமிகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கஅவர்களது அரசாங்கத்தில் கப்பல், துறை முகங்கள் புனர் வாழ்வு அபிவிருத்தி அமைச்சராக மர்கூம் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்கள் இருந்தார்கள். இவரது முயற்சியினால் முதலாவது இடைக்கால மீள் குடியேற்ற திட்டக்கிராமமாக இக் கிராமம் தெரிவு செய்யப்பட்டது. இதன் காரண கர்த்தாவாகஅப்போது முந்தல் பிரதேச செயலாளராகவிருந்த ஏ.சி. எம். நபீல் அவர்கள் இருந்தார்கள். இங்கு வீடு கட்டுவதற்கு 35 000 ரூபா வழஙகப்பட்டது. இத்திட்டத்திற்கமைவாகசிறிய வீடு கட்டப்பட்டுள்ளது சிலர் சிறிய தொகையான இப் பணத்தை பெற விரும்பவில்லை. இக்கிராமத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்தாக நல்ல தண்ணீர்இலேசாகக் கிடைப்பதால் ரஹ்மத்புரம் என்னும் பெயர் வைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் பெரு மழை ஏற்படும் போது இக்கிராமமும்வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். 2008 ம் ஆண்டு ஒக்டோபர் மாதமும் இக்கிராமம் மழை வெள்ளத்தில் முழ்கிய காட்சியையே இங்கு காண்கின்றீகள். 









நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்.
மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வை.ஜவாஹிர் ஜனோபர்













குழுக்கலந்துரையாடல்கள் .........


இலங்கை ,புத்தளம் மாவட் டத்திலுள்ள ஆலங்குடா என்னும்கிராமத்தில் முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகள் குடியமர்த்டப்பட்டுள்ள [ஏ] முகாமுக்கு நோர்வேயின்பிரதிநிதி எரிக்சொல்கிம்வருகை தந்தபோதுநேரடியாக கையளித்தகடிதத்தின் பிரதி, பதில் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
Grab the RSS feed for Free Updates!
(What's this? — Learn more about RSS)
OR Get blog updates sent directly to your inbox by entering your email address below: