Thursday, July 8, 2010

வன்னியில் காக்கைவன்னியன் என்றொரு காட்டிக்கொடுத்தவன் இருந்திருந்தால் அவனொரு முஸ்லிம் அல்ல.



மேலே இணைக்கபபட்டுள்ளதும் 2010.07.08ம் திகதி பிரபல்யமானஇணையத்தளமொன்றில் இடுகையிடப்பட்டதுமான மேற்படி செய்தியைப்பார்த்த முல்லைத்தீவைச் சார்ந்த சிலமுஸ்லிம் இளைஞர்கள் மிக மனவேதனையடைந்தவர்களாக தொலைபேசியூடாகவும்,மின்னஞ்சல் மூலமாகவும் 'முஸ்லிம் அகதி'யிடம் தொடர்பு கொண்டு இச்செய்திக்கு உரியபதிலை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். இதை பெரிதாகப் பார்க்க வேண்டியஅவசியமில்லை. இருந்தாலும் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு கடந்த காலவரலாற்றை கொஞ்சம் சொல்ல வேண்டியது எனது கடமையெனகருதுகின்றேன். முல்லைத்தீவில் நடிக்கப்படும் நாடகம் பண்டார வன்னியன்ஆகும். இந்த பண்டார வன்னியன்' வன்னியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். இவன்ஆங்கிலேயருக்கு எதிராக சண்டை செய்து சுயமாக நாட்டையாள விருப்பினான். இவனை ஆங்கிலேயருக்கு காட்டிகொடுத்தவன்தான் 'காக்கைவன்னியன்' இவன்ஒரு முஸ்லிமாக இருக்கலாமென பலரும் எண்ணுவதுண்டு.நான் அப்படிஎண்ணுவதில்லை. காரணம் முஸ்லிகளின் வரலாற்றில் காட்டிகொடுத்தவன்என்றொரு பாத்திரமில்லை. எனவே காக்கைவன்னியனும் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது என்ற முடிவு எனக்கிருந்தது.
வன்னியின்கதை என்னும் நுலினை முல்லைத்தீவைச் சார்ந்த வே.சுப்பிமணியம் [முல்லைமணி] எழுதியுள்ளார். அந் நூலில் பண்டாரவன்னியன் நடவடிகைகள் பற்றி பிரித்தாணியர்களுக்கு தகவல் கொடுத்து வந்தவர் கதிர்காம நாயக முதலியார் என நுலாசிரியர் குறிப்பிட்டுள்ளதோடு பண்டாரவண்ணியன் ஒரு கற்பனை பாத்திரமெனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே முல்லைத்தீவு முஸ்லிம்கள் துக்கப்படத் தேவையில்லை. ஆகவே மன்னனும் காட்டிக்கொடுத்தவனும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கலென்பது நிருபிக்கப்பட்டுள்ளது. வன்னியின்கதை புத்தகத்தின் குறித்த பகுதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே டென்மார்க் ' தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ' குறிப்பிட்டிருக்கும் காக்கைவன்னியனும் முஸ்லிம் சமுகத்தினை சார்ந்தவர்களை குறிக்க வில்லை. அது கதிர்காம நாயக முதலியாரின் பரம்பரையினரைத்தான சுட்டிக்காடியுள்ளனர் .

மேலும் 1809 ம் ஆண்டு முல்லைதீவிலிருந்து ஒன்றரை மைல் தொலைவிலுள்ளவட்டுவாகல் கிராமத்தில் பண்டாரவன்னியன் இருப்பதாக கதிர்காம நாயகமுதலியார் குறிப்பிட்டுள்ளாரென நுலாசிரியர் முல்லைமணி அவர்கள்வன்னியின்கதை என்னும் புத்தகத்தின் 52 ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வட்டுவாகல் கிராமம் என்பது 2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்க்குஎதிராக இறுதி யுத்தம் நடந்ததாகக் கூறப்படும் பிரதேசத்தின் கிழக்குஎல்லைபுறமாகவும், முல்லைத்தீவு நகரின் மேற்கு புறமாகவும், நந்திக்கடலின்வடக்குப் புறமாகவும், இந்து சமுத்திரத்தின் தெற்குப்புறமாகவும் அமைந்துள்ளது என்பது குரிப்பிடட்டக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.