Saturday, January 8, 2011

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடுவழங்க தனியான ஆணைக்குழு வேண்டும்.


வீரகேசரி நாளேடு 1/8/2011 1:22:18 PM Share
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து நஷ்டைஈட்டை பெற்றுக்கொடுக்கும் வகையில் தனியான ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ். மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜி.பஷீர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசாங்கம் அளிக்கும் எந்த சலுகைகளையும் விட உரிமைகளுக்கே முதலிடம் வழங்குவார்கள்.

எனவே அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்க்கமான முடிவை எடுத்து இந்த நாட்டில் அனைத்து சமூகமும் வாழ வழி வகுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ___ E-mail to a friend
நன்றி வுிரகேசரிக்கு- “முஸ்லிம் அகதி”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.