Thursday, February 17, 2011

மனிதகுலத்தின் வழிகாட்டி மாநபி முஹம்மது(ஸல்) அவர்களின் ஜனன தினம்.

முஹம்மதுநபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்களின் பிறந்த தினம் கடந்த 2011.02.16ம் திகதி நினைவு கூறப்பட்டது.இது சார்பான செய்திகள் இலங்கையின் சகல இலத்திறனியல் ஊடகங்களிலும் ஒலி,ஒளி பரப்பப் பட்டது. அத்துடன் முன்னனி  பத்திரிகையிலும் செய்திகளாக வெளியிடப்  பட்டது. இச்சிறப்புச் செய்திகமுஹம்மது நபி(ஸல்லல்லாஹூ அலைஹிளில் இலங்கையின் ஜனாதிபதி,பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சிறப்புச் செய்திளை வெளியிட்டனர். அச்செய்திகள் அனைத்திலும்  முஹம்மதுநபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு நேரான வழியைக்காட்ட வந்தவரென்றும் ,அவர்காட்டிய சாந்தி,சமாதானத்தின் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையே  ஒற்றுமையை நிலைநாட்ட முடியுமெனவும் ,அவரின் போதனைகளை ஏற்றுச் செயற்பட வேண்டுமெனவும் கூறப்பட்டது.
உண்மையில் முஹமது நபி(ஸல்) நபி அவர்கள் முஸ்லிம்களுக்கு ம்ட்டும் நேரான வழியைக்காட்டவந்தவரல்ல.மாறாக மனித குலத்திற்கு நேரான மார்கத்தைக் கூறிச்சென்றது மட்டுமல்லாது.அவரது முதற்பணியாக ஓரிறைக் கொள்கையே  மனிதகுலம்  கடைப்பிடிக்க வேண்டுமென கட்டாயத்தை ஆதார, ஆவணங்களுடன் கூறியவர். எனவே பகுத்தறிவுடைய சகல சமூகத்தவரும் ஓரிறைக் கொள்கையை ஏற்றுச்செயலாற்றுவதன் மூலம் மட்டுமே நாட்டில் அமைதி,சமாதானம், அமைதி போன்ற நல்ல விடயங்கள் நடக்க ஆவண செய்ய முடியுமென “முஸ்லிம் அகதி”  திடமாக கூற விரும்புகின்றது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.