Thursday, March 27, 2014

முஸ்லிம்களில் நான்கு பிரிவினர் உள்ளனர் ரியல் முஸ்லிம் ! பெருநாள் முஸ்லிம்!! ஜூம்ஆ முஸ்லிம் !!! சும்மா முஸ்லிம் !!!! மஹநுவர திலகரத்ன தேரர்லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்துர்ரஸூல்லாஹி வணக்கத்திற் குரியவன் யாருமில்லை.அல்லாஹ்
வைத் தவிர  இன்று ஒரு அழகான நாள். பாருங்கள் எமது முஸ்லிம் பிள்ளைகள் எவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். ஒரு விடயமிருக்கிறது. லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர்ரஸூலுல்லாஹி  என்று வெறுமனே வாயினால் மாத்திரம் கூறினால் போதாது. அதன் அர்த்த்த்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.
அதற்கு பாடசாலை ஒரு நல்ல இடம்.இன்று அதிகமான முஸ்லிம்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலுள்ளனர்.எங்களது பௌத்தர் களில் அதிகமானோர் பௌத்த மதம் தொடர்பில் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இஸ்லாம் என்றால் கீழ்ப்படிதல்.பணிவுடன் செயற்படுதல் என்பதாகும். அல்லாஹ் சுபானஹ்ஹூத்தாலாவிற்கு கீழ்ப்பணிவதாகும். அத்துடன் ஒரு நாளைக்கு ஐவேளை தொழ வேண்டும். சுபஹ், ளுகர், அஸ்ர், மஃரிப், இஷா இத் தொழுகைகள் முஸ்லிம்கள் தொழ வேண்டும். தொழுகையின் சிறப்பு என்ற ஒரு புத்தகத்தை நான் படித்த போது  தொழாதவர்களுக்கும், காபிர்களுக்கும் வேறுபாடில்லை.என்று குறிப்பி டப்பட்டுள்ளது. என புத்தளம் கறுவலகஸ்வெவ பிரதேச புத்த விகாரையில் கடமையாற்றும் மஹநுவர திலகரத்தின தேரர் தெரிவித்தார்.
புளிச்சாக்குளம் உமர் பாறுக் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற   நு-ற்றாண்டு விழா நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிங்களத்திலும்,தமிழிலும் மாறி,மாறி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.அறபு வாசகங்களை சரளமாக மொழிந்து அவர் ஆற்றிய உரை பார்வை யாளர்களை  பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வித்தியாலய அதிபர் எம்.டி.பாரி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற இவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக வடமேல்மாகாண  முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர கலந்து கொண்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய தேரர் தனதுரையில் கூறியதாவது.எல்லா முஸ்லிம்களும் இங்கிருக்கின்ற இந்த சிறுவர்கள் உட்பட அனைவரும் எல்லா நேரமும் சுபஹானல்லாஹ் கலிமாவை ஓத வேண்டும்.அதில் நிறைய பறகத் இருக்கிறது. சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்ல்ல்லாஹூ வல்லாஹூ அக்பர். வலாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹி அழியுல் அழீம். இதற்கு மேல் உலகத்திலே ஒன்றுமே இல்லை. அதுமட்டுமல்ல குல்ஹூவல்லாஹூஅஹது அல்லாஹூஸ் ஸமத் லம்யலித் வலம்யூலத் வலம்யகுல்லஹூ குபுவன் அஹத். இதன்படி வாழ வேண்டும்.
எதிர்கால சந்த்தியினர் தொடர்பில் எமக்கு பாரியபொறுப்புள்ளது. நானும் ஒரு அதிபர்.ஓய்வு பெற்ற முதலாம் தர அதிபர்.ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்த காலம்,ரணில் கல்வியமைச்சராக இருந்த 1983ம் ஆண்டு முதலாம் தரத்தில் அதிபராய் நியமனம் பெற்ற ஒரேயொரு பௌத்த பிக்கு நான்.இந்த முஸ்லிம் பிள்ளைகள் எம்மை சாது என்றுதானே கூப்பிடுகிறார்கள் பிள்ளைகளே! சாதுதான் லாது அல்ல சாது என்பது வேறு லாது என்பது வேறு.
எனவே எனது அன்பிற்குரிய பிள்ளைகள் என்றும் வினைத்திறன் உள்ள, ஒழுக்க முள்ள பிள்ளைகளாய் வர வேண்டும்.என்பது எனது ஆசை.நான் கண்டி திலகரத்தின தேரராக இருந்த போதும் இந்த பௌத்த விகாரையின் பௌத்த தேரராக இருக்கின்ற நிலையிலும் என்னிடத்தில் ஒரு போதும் ஜாதிபேதம்,இனபேதம்,குலபேதம்,மதபேதம் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாப்பிள்ளைகளும் எனது பிள்ளைகள்,நாம் அனைவரும் ஒரே நாட்டில் வாழுகின்றோம்.எமது ஜனாதிபதி எமக்கு நிம்மதியாக வாழ ஒரு சூழ் நிலை யினை ஏற்படுத்தி தந்துள்ளார்.
அண்மையில் பதியுத்தீன் மஹ்மூத் நினைவு தின வைபவத்தில் எனக்கு மூன்று மொழிகளிலும் உரையாற்றக் கிடைத்த்து.அந்தளவிற்கு இஸ்லாம் மதத்திற்கு விருப்பமுள்ளவன்.எமது முஸ்லிம் பிள்ளைகளிடத்தில் அளப்பரிய பாசம் உள்ளது. நான் முன்னரே சொன்னேன்.இஸ்லாம் என்பது கீழ்படிதல்,பணிவுடன் செயற்படுதல் என்று எனவே எல்லா நிலைகளிலும் இந்தப் பிள்ளைகளின் பெறுமதியினை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.பாடசாலை என்பது பிள்ளைகளை ஒரு நல்ல இடத்திற்குத் தள்ளும் ஒரு கூடம்.
இஸ்லாம் மதத்தில் நான்கு பிரிவுகள் உள்ளதாக நான் அறிந்துள்ளேன். நான் இவைகளைக் கூறும் போது இங்கிருக்கும் மௌலவிமார் கோபித்துக் கொள்வார் களோ தெரியாது.ஷாபி,ஹனபி,ஹன்பளி,மாலிக் என்பனவே அந்த அந்த நான்கு பிரிவுகள்.மௌலவிமார்களே! நான் கூறுவது சரிதானே? ஆனால் நான் புதிதாக நான்கு பிரிவினரை முஸ்லிம்க ளிடத்தில் காண்கிறேன்.என்ன அந்த நான்கு பிரிவுகள்இன்று முஸ்லிம்கள் தாம் முஸ்லிம்கள் என்பதற்காக மாத்திரம் லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்று கூறிக் கொண்டிருக் கிறார்கள். அண்மையில் ஒரு சிறுவனை அழைத்துக் கேட்டேன் இன்று சுபஹ் தொழுதாயா? என்று இல்லையென்றான்.ஏனென்று கேட்டேன் து-க்கம் போய்ட்டுது என்றான்.நான் சொன்னேன்.அஸ்ஸலாத்து ஹைறும் மினன் நவும் என்றால் என்ன தெரியுமா? து-க்கத்தைவிட தொழுகை சிறந்தது என்பதுதான் அதன் அர்த்தம் என்று அச்சிறுவனுக்குச் சொன்னேன்.
இஸ்லாத்திலுள்ள நான்கு பிரிவுகளுக்கு மாற்றமாக நான் நான்கு புதிய பிரிவுகளைக் காண்கின்றேன்.அதில் ஒரு பிரிவு ரியல் முஸ்லிம் சரியாகத் தொழுது சரியாக இஸ்லாத்தை பின் பற்றுபவர்கள். சுபஹ்,ளுகர், அஸ்ர்,மஃரிப்,இஷா தொழுபவர்கள். சரியாகத் தொழுது அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு அல்லாவிடம் பிரார்த்தனை செய்து பயபக்தியுடன் வாழுபவர்கள்.இவர்களை நான் ரியல் முஸ்லிம்கள் என்று கூறுகின் றேன்.அடுத்த பிரிவினர் பெருநாள் முஸ்லிம்கள் இவர்கள் பெருநாள் தினத்தில் மாத்திரம் புது ஆடைகளை உடுத்திக் கொண்டு மற்றவர்களைக் கண்டு ஈத்முபாரக் சொல்லிக் கொண்டு பள்ளிக்குச் சென்று தொழுபவர்கள் இன்னொரு பிரிவினர் ஜூம்ஆ முஸ்லிம்கள் இவர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஜூம்ஆவிற்கு மட்டும் சென்று தொழுபவர்கள்.இறுதியாக ஒரு பிரிவினர் உள்ளார்கள். அவர்கள் சும்மா முஸ்லிம்கள் அவர்களுக்கு ஒன்றுமே இல்லை.
எனவே நான் எப்போதும் எனது பௌத்த மக்களைப் பார்த்தும்,கத்தோலிக்க மக்களைப் பார்த்தும் சொல்வது என்னவென்றால் முஸ்லிம் மக்களைப்பார்த்து இஸ்லாம் மத்ததை விமர்சிக்க வேண்டாம்.இஸ்லாம் மதத்தைப் பாருங்கள் முஸ்லிம்களைப் பார்க்க வேண்டாம்.அல்லாஹ் சுப்ஹானஹூத்தஆலாவால் அனுப்ப்ப்பட்ட து-தர் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட வஹியைப் பாருங்கள் நாங்களும் சொல்லுகின்றோம். பௌத்தர்களைப் பார்க்க வேண்டாம்.பௌத்த மதத்தை பாருங்கள்.எனவே இஸ்லாம் மதத்தின் பெறுமதியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்கள் எப்பவும் தொழ வேண்டும். கடவுளின் ஆசீர்வா தத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்காகவும் பிரார்த் தனை செய்யுங்கள். எங்களுக்கு தஃவா கொடுக்க உங்களால்முடியும் அப்படித் தானே ஹஸ்ரத்?தஃவா கொடுக்க வேண்டும் ஹிதாயத் கொடுக்க முடியர்து. அது அல்லாஹ்ட வேலை.நான் சொல்வது சரிதானே மௌலவி சாப்?ஹிதாயத்தை அல்லாஹ் தருவான் இன்ஷா அல்லாஹ் என்றார்.
எம்.எஸ்.முஸப்பிர் (மதுரங்குளி நிருபர்)
2014.03.13ம் திகதிய விடிவெள்ளி பத்திரிகைக்கு முஸ்லிம் அகதியின் நன்றிகள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.