Monday, July 7, 2014

இஸ்லாம் இதுதான் நேரான மார்க்கம்

மனித வாழ்வு
1. ஆலமுல் அர்வாவுடைய வாழ்வு - (இது ஆத்மாக்களின் உலகம்) இது அள்ளாவின்- தீர்மானமேயன்றி நமது தீர்மானமல்ல  அதாவது தாயின் வயிற்றில், அல்லது உலகில் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கின்ற,வாழப் போகின்ற அனைத்து மனித உயிர்களும் ஒரே நாளில் அள்ளாஹ்வினால் படைக்கப்பட்டு அவ்வாத்மாக்கள் அள்ளாவிற்கு கட்டுப்பட்டு வாழ்ந்த. அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற இடம்.


2. தாயின் கற்பக் கோளறையின் வாழ்வு- அள்ளாஹ்வின் தீர்மானமேயன்றி நமது தீர்மானமிலலை.)

3. உலக வாழ்வு-ஆத்மாக்களில் உலகில் நாம் அள்ளாவிற்கு வழங்கிய உத்தர வாதத்திற்கேற்ப வாழ்வது (அல்லாஹ்வினால் அருளப்பட் வேதங்களுக் கமைவாக) கற்றுக் கொள்ளல்,செயற்படுத்தல், சோதனைகளுக்கு முகம் கொடுத்தல்,பொறுமை காத்தல் போன்ற செயல்களுடன் வாழுமிடம்.அல்லது மாற்றமாக வாழவும் முடியும்.இது எமது தீர்மானமாகும்.(நேரான மார்க்கம் அல்லது தவறான மார்க்கம்)

4. கப்றுடைய வாழ்வு -உலக வாழ்வு சார்பான ஆரம்ப விசாரனையும் அதற் கேற்ப அள்ளாஹ் வழங்கும் தற்காலிக தண்டணை அல்லது அருட் கொடை பெற்று வாழுமிடம். (அள்ளாஹ்வின் தீர்மானமேயன்றி நமது தீர்மானமிலலை.)

5. மஹ்ஷரடைய வாழ்வு (அள்ளாவுடைய நீதி மன்றம்)-நாம் ஆத்மாக்களின் உலகில் அள்ளாஹ்விற்கு வழங்கிய உத்தரவாதத்திகமைவாக உலக வாழ்வவை மேற் கொண்டது சார்பான முழுமையான விசாரணையும் நிரந்தர தீர்ப்பு வழங்கலும் (அள்ளாஹ்வின் தீர்மான மேயன்றி நமது தீர்மானமிலலை.)

6. சுவர்க்க வாழ்வு அல்லது நரக வாழ்வு - அள்ளாவின் தீர்ப்புக்கேற்ப சொர்க்கம் அல்லது நரகம் (அள்ளாஹ்வின் தீர்மானமேயன்றி நமது தீர்மானமிலலை.)
                                               சிந்திப்போம்,செயற்படுவோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.