Friday, January 30, 2015

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர்களில் சுல்தான் பரீத் -பகுதி 1நான் கடந்து வந்த சில சம்பவங்களை நான் மரணிக்கும் முன்பு முடிந்தவரை (இன்ஷா அள்ளாஹ்) தளத்தில் பதிவு செய்யவுள்ளேன்.அதை எனது தற்பெருமை என்று எண்ணுபவராயினும் சரி,எதிர் கால இளைஞர் சமூகத்திற்கான வரலாறாக எண்ணினாலும் சரி சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்.நான் தண்ணீரூற்றில் 1953ம் ஆண்டு பிறந்தேன் 1968ம் ஆண்டு தண்ணீரூற்று முஸ்லிம் வித்தியாலயத்தில் எட்டாம் ஆண்டுவரை கற்கும் வாய்ப்பிருந்தது.அத்தடன் எனத படிப்பிற்கு முற்றுப்பள்ளி இட்டேன்.அதே ஆண்டில் தண்ணீரூற்றில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சார இயக்கம் என்ற சமூகசேவை நிறுவனத்தில் பங்காளராகச் சேர்ந்து கொண்டேன். கரைதுறைப்பற்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் பற்றியும் அதன் வளர்ச்சியில் எனது பங்களிப்பு பற்றியும் பார்ப்போம்.இது பிரதேச சபை உறுப்பினர் மாகாணசபை உறுப்பினர்,. பாறாளுமன்ற உறுப்பினர்,இலங்கை அரசின் அமைச்சர் போன்ற பதவியும் இல்லை.கூட்டுறவுச் சங்கமென்றால் கொள்ளையர் களின் வாழ்விடம் என்று மக்களுக்கு தெரியும்..குறித்த சங்கத்தின் நீராவிப்பிட்டி கிளையில் அங்கத்தவராக நானிருந்தேன்.அக்காலம் 1979 ம் ஆண்டாக இருக்க வேண்டும். இந்நாளில் அரசாங்க அதிபராக திரு பற்றிக் அவர்களும்,மேலதிக அரசாங்க அதிபராக திரு தேவசிகாமணி அவர்களும் கடமையாற்றினார்கள்.கரைதுறைப்பற்று பலநோக்குச் கூட்டுறவுச் சங்கத் தின் ஆளுகை எல்லைகளாக வடக்கு பெருங்கடலும்,கிழக்கு கொக்கிளாய், தெற்கு கூழாமுறிப்பு,மேற்கு விஸ்வபுரம் உடையார்கட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றிலொரு பிரதேசத்தை கொண்டிருந்த்து.குறித்த சங்கத்திற்கு அரசினால் நியமனம் செய்யப்பட்ட பணிப்பாளர் சபை இயங்கி வந்தது.அதன்  உறுப்பினர்களாக திரு சிங்காரவேலு ( உதவி அரசாங்கஅதிபர்,முல்லைத்தீவு)  அவர்களின் தலைமையில் திரு சிவச்சாமி (மாவட்ட காணி அதிகாரி,கச்சேரி) திரு சாம் வடிவேல் (மாவட்ட அபிவிருத்தி அதிகாரி,கச்சேரி)திரு குமார சூரியர் ( பெருந் தெருக்கள் பொறியியலாளர் ) ஆகியோர் பதவியில் இருந்தனர. அக்காலத்தில் கூட்டுறவு உதவி ஆணையாளராக திரு மார்க்கண்டு (யாழ்) அவர்களும் கணக்காய்வளர்களாக திரு கந்தசாமி (முள்ளியவளை) திரு சபாரட்ணம் (தண்ணீரூற்று) ஆகியோரும்  சங்கத்தின் பொது முகாமையாளராக. திரு பாலசிங்கம் (முள்ளியவளை) களஞச்சியப் பொறுப்பாளராக தர்மலிங்கம் (தண்ணீரூற்று) பிரதம லிகிதராக பாலகிருஷ்ணன் (தண்ணீரூற்று) கிளை மேற்பார்வையாளராக சிவசோதி (செம்மலை) போன்றவர்களின் நிருவாகத்தின் கீழ் சங்கம் இயங்கியது. இக்கால கட்டத்தில் தமிழரசுக் கட்சி பாளுமன்ற உறுப்பினர் திரு செல்லத்தம்பு மற்றும் அவரது மகனின் ஆதிக்கத்தில் முல்லைத்தீவு மாவட்டம் இருந்தது. திரு செல்லத்தம்பு அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவராகவும், முல்லைத்தீவு மாவட்டமாக பிரிப்பதற்கு முன்னர் முல்லைத்தீவு டி.ஆர்.ஓ (உதவி அரசாங்க அதிபர் பதவி போன்றது) வாக பணியாற்றியவர். இக்காலகட்டத்தில் அரசினால் நியமனம் பெற்ற பணிப்பாளர் சபையை நீக்கி கரைதுறைப்பற்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு பொது மக்களிலிருந்து ஒரு பணிப்பாளர் சபையை தெரிவு செய்ய அரசு முடிவு செய்தது. இதற்காக முதலில் கிளைச் சங்கங்கங்களிலிருந்து பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.கிளையின் அங்கத்துவத்திறகேற்ப பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். நீராவிப்பிட்டிக்கிளை சார்பாக ஒன்பது பெயர் தெரிவு செய்யப்பட வேண்டும்.தேர்தல் மூலமாகமாகவே தெரிவு நடந்த்து. என்னுடன்  2. முஹம்மது இப்றாஹீம் சஹீத், 3. முஸ்தபா அப்துல் மஜீத், 4.சுல்தான் அப்துல்காதர் ஜூனைத், 5.நாகூர்பிச்சை ஜலால்தீன்,6.முஹம்மது சரிபு மன்சூர்,7.நாகூர்பிச்சை அப்துல் கபூர், 8.முஹம்மது இப்றாஹீம் பளீல், 9.முஹம்மது இஸ்மாயீல் ஜமால்தீன், ஆகிய ஒன்பது பெயர்கள் தேர்ந் தெடுக்கபட்டோம்.இப்போது நாம் பொதுச்சபை பிரதிநிதிகள் இப்படியாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 135 (உதாரணம் பாராளுமன்ற உறுப்பினர்கள்) பிரதி நிதிகளும்  தமக்குளிருந்து ஆளும் தரப்பாக வரவிருப்பவர்கள் தமது பெரும் பாண்மையை உறுதிப்புடுத்த வேண்டும். பெரும்பாண்மைத் தன்மையை உறுதிப் படுத்திய பின்னர் அவர்களிலிருந்து தெரிவு செய்யப் படுபவர்கள்தான் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் (உதாரணம் அமைச்சரவை) சபையாகும்.பெரும் பாண்மை யற்றவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவார்கள். இவர்களுக்கு எந்த விதமான பதவிகளும் வழங்கப்படுவதில்லை. வருடாந்த அல்லது அவசியமான பொதுச்சபை கூட்டங்களுக்கு மட்டும் அழைக்கப்படுவார்கள்.
அந்தக் காலத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப்போல் ஆட்சி செய்தவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பு அவர்களும்,அவரது புதல்வனும்,மற்றும் அவரது ஆதரவாளர்களும்.கூட்டுறவுத் துறையிலும் இவரது ஆதிக்கம் காணப்பட்டது. இவரது ஆதரவாகளே சங்கத்தின் ஆட்சியாளர்களாகவும் இருப்பார்கள். இம்முறை இவர்களுக்கு போட்டியாக ஒரு அரசை (பணிப்பாள்ர் சபை) அமைக்கவென முல்லைத்தீவு மறுமலர்ச்சிக் கழகம் முன்வந்த்து.அவர்களில் இவர்களும் அடங்குவார்கள். வண்ணாங்குளம் ஜேசுதாசன்,செல்வபுரம் புத்திசிகாமணி,முல்லைத்தீவு றாசிக்,முல்லைத்தீவு யோகநாதன்,கரைச்சிக்குடியிருப்பு டாக்டர் சுப்பிர மணியம் அவர்களின் மகன் இவர்களுக்கு பிற்காலத்தில் புலிகளின் தொல்லை அதிகமாக விருந்த்து .காரணம் இவர்களில் சிலர் ஈரோஸ் அமைப்புடன் தொடர்புடைய வர்களாம். வண்ணாங்குளம் ஜேசுதாசன், முல்லைத்தீவு றாசிக்,முல்லைத்தீவு யோகநாதன் பேன்றோர் வெளிநாடு சென்றுவிட்டார்கள். கரைச்சிக்குடியிருப்பு டாக்டர் சுப்பிரமணியம் அவர்களின் மகன் இவர் வ்வுனியாவில் கொல்லப்பட்டார். செல்வபுரம் புத்திசிகாமணி இவரைக் கடத்தி தாக்கப்பட்ட நிலையில் விடுதலையாகி வெளி நாட்டில் வாழுகிறார். இவர்கள் கரைதுறைப்பற்று பல நோக்குச் சங்கத்தின் ஊழலற்ற நல்லாட்சிக்காக பாடுபட்டவரகள்.
இவர்கள் எமது நீராவிப்பிட்டி கிளை பொதுச்சபை பிதி நிதிகளுடன் தமது நோக்கம் பற்றியும் நாம் ஒன்பது பேரும் தமக்குச் சாதமாக செயற்பட்டால் அமையப்போகும் புதிய பணிப்பாளர்சபையில் இடம் பெறும் வகையில் ஒரு உறுப்பினர் (அமைச்சர்) தருவதாக வாக்களித்தனர் நாமும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டோம.பாராளுமன்ற உறுப்பினரின் சார்பாக அரசு அமைக்க முயற்சிப்பவர்கள் எம்மைத் தனித்தனியாக சந்தித்து பேரம் பேசினார்கள். என்னுடன் கிராம சேவையாளர் செல்லத்துரை (எனக்கு மிகவும் வேண்டிய ஒருவராகவும்,எனது செல்வாக்கிற்கு பாத்திரமான வராகவும் இருந்தாவர்) நான் அவர்களுக்கு சாதகமாகச் செயற்படும் பட்சத்தில் பணம் தேவையென்றால் பணம்,அரச உத்தியோகம், நித்தகைக்குளத்தில் மூன்று ஏக்கர் காணி.முல்லைத்தீவில் என்கு ஏதும் பிரச்சினை வருமென்றால் அதற்கு செல்வபுரம் குண்டன்ராசா என அழைக் கப்படும் நபரை பாதுகாப்பளராக தருவதாகவும் உறுதியளிக் கப்பட்டது.
நான் அந்தப் பேரம் பேசுதலிருந்து சாதுர்யமாக விலகிக் கொண்டேன். குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டத்திற்கு முதல் நாளே எம்மை முல்லைத்தீவு மறுமலர்ச்சி கழக அமைப்பினர் அழைத்துச் சென்று தமது பாதுகாப்பில் வண்ணாங்குளத்திலுள்ள ஜேசுதாசன் அவர்களின் வீட்டில் உணவு,உறைவிடம் போன்ற எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டு வைக்கப்பட்டிருந்தோம்.காரணம் எமது குழுவை எதிர்தரப்பார் கடத்தி வாக்களிக்காமல் செய்யக்கூடிய வாய்ப்புக் காணப்பட்ட தேயாகும். ஆனாலும் எம்மிலிருந்த ஒருவர் வர முடியாத சூழல் ஏற்பட்டது. அவர் வந்தால் அவரது சகோதரியின் கணவரை தாம் பிரித்துக்கொண்டு சென்று விடுவதாக சகோதரியின் மாமா அச்சுறுத்தியமையே காரணமாகும்.. அத்துடன் அவர் எதிர்தரப்பினர் சார்பாகவும் வாக்களிக்க நிர்பந்திக்கப் பட்டார்.வாக்களிக்கும் நாள் அன்று லண்டன் சலீம் அவர்களின் சிறிய தந்தையின் காரில் லண்டன் சலீம் சாரதியாக எம்மை அழைத்துச் சென்றார்.அழைத்துச் செல்லப்பட்ட நாம் முல்லைத்தீவில்  தற்போதைய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில காரை நிறுத்தினார்.எம்மை கீழே இறங்க அவர் அனுமதிக்கவில்லை. இத்தரு ணத்தில் தமிழரசக் கட்சி பேராதளவாளரான புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் தம்பாபிள்ளை அவர்கள் எம்மைக் கடத்தும் நோக்குடன் அவரது குழுவினர் சகிதம் சமூகமளித்து காரின் கதவை திறக்க முற்பட்டார்.இதைக் அவதானித்த லண்டன் சலீம் ஸ்குறு உழியுடன் காரை விட்டிறங்கி கடந்தல் காரர்களை நோக்கிப் பாய்ந்தார்.பயம் கொண்ட கடத்தல் குழுவினர் அவ்விடத்தை விட்டும் அகன்றனர்.
அன்றைய தினம் பொதுக் கூட்டம் ஆரம்பமானது.எமது தரப்பினர் தமது அதி கூடிய கோரத்தைக் காட்டினர்.அப்போது பணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கு கூட்டுறவு உதவி ஆணையாளர் எமக்கு அனுமதி வழங்கினார்.நாம் பணிப்பாளரை ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவு செய்தோம்.நீராவிப்பிட்டிக்கிளை சார்பாக என்னை பணிப்பாளர்சபைக்கு தெரிவு செய்ய ஏனைய சக நண்பர்கள் ஏழு பேரும் சம்மதம் தெரிரிவித் திருந்த நிலையில் பணிப்பாளர் சபை தெரிவு இடம் பெற்றது.
1.முல்லைத்தீவு ஜெயம்(பிரபல சம்மாட்டி) 2.யோகநாதன் (பயிர்செய்கை உத்தியோகத்தர்) 3.அந்தோனி குருஸ் (பிரபல சம்மாட்டி) 4.உடையார்கட்டு இராஜரத்தினம் (கனகரத்தின் எம்.பி அவர்களின் சகோதர்ர்) 5. நீராவிப்பிட்டி மு.சுல்தான் பரீத்(கல்வித்தரம் எட்டாம் ஆண்டு –ஜே.எஸ்.சி) 6.தண்ணீ ரூற்று பரமானந்தம் (பாடசாலை அதிபர்) 7.முள்ளியவளை அப்பன் சண் முகநாதன் (பட்டதாரி) 8.முள்ளியவளை கனகையா (வித்தியானந்த கல்லு-ரி உப அதிபர்) 9. கொக்குத் தொடுவாய் கந்தசாமி (தபால் ஊழியர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.  எற்கவே நியமன பணிப்பாளர்களுடன் நாமும் சேர்ர்ந்து கூட்டறவுச் சங்கத்தை ஒரு மாதகாலம் வரை சீராக நடத்தினோம்.பின்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்மிடம் முழுப் பொறுப்பும் கையளிக்கப்பட்டது. தொடரும்........

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.