Monday, May 9, 2016

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பரிவின் 2016ம் ஆண்டிற்கான காலாச்சார விழா

தகவல்  தேசபந்து,தேசகீர்த்தி,சாமஸ்ரீ முஹம்மது சுல்தான் பரீத்.ஜே.பி

 வடமாகாணசபையின் ஆதரவுடன் வடமாகாண பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் கலாச்சார விழா நடைபெற்றுவருகிறது. இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பரிவின் 2016ம் ஆண்டிற்கான காலாச்சார விழா ஏற்பாட்டுக் குழுவான “கலாச்சார பேரவை” கடந்த 2016.05.06ம் திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திரு சி.குணபாலன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் அலுவலக சிறு மா நாட்டு மண்டபத்தில் கூடியது. பிரதேச  செயலாளர் அவர்கள் தலைமையுரையில் எமது பிரதேச கலாச்சார விழா சிறப்புற நடந்தேற அனைவரும் ஒற்றுழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

 கலாச்சார விழா தினத்தன்று பிற்பகல் அலங்கரிக்கப்பட்ட கோலாட்டம்,கம்பு விளையாட்டு ஆகியவை அலங்கரிக்க 46 கிராம சேவையாளர்களின் ஏற்பாட்டில் 46 கிராம மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஊர்திகளின் ஊர்வலம் ஆரம்பமாகி மாலை நேர கலாச்சார நிகழ்வு நடைபெறும் மேடையை சென்றடைய வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.அதன் பின்னர் கலை நிகழ்சிகள் தொடங்குவதாகவும் .கலை நிகழ்சிகளில் தமிழ் கலாச்சார நிகழ்வான தென்மோடி.வடமோடி கூத்துக்களுடன் இஸ்லாமிய கீதம் இசை நாடகம்,கோலாட்டம், குறுநாடகம்,குறும்படம்,பாடல்கள் கவிதை யரங்கு நடனம் போன்ற நிகழ்சிகள் நடைபெறும்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பகுதியைச் சார்ந்தவர்கள் இதில் பங்காளகளாகி பயன் பெறலாம்.


 பிரதேசத்தைச் சார்ந்தவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக எம்முன்னோர் முதற் கொண்டு பாவித்த பாரம்பரிய தொல் (புரான) பொருட்களின் கண்காட்சிக் கூடமும் அமைக்கப் படஉள்ளது., .எனவே இக்காட்சியகத்தில் உங்களிடமுள்ள பழமைவாய்ந்த பொருட்களை உங்களது பெயரிலேயே காட்சிப்படுத்த முடியும். எனவே தங்களிடமுள்ள பழைமை வாய்ந்த நாணயக் குற்றிகள்,நாணயத் தாள்கள்,விட்டுப் பாவனைப் பொருட்கள், கல்லாலான பொருட்கள்,செம்பிலான வீட்டு அழகு சாதனப் பொருட்கள், பாவனை் பொருட்கள்,விவசாயப் பொருட்கள் போன்ற வற்றை வைத்திருக்கும் உரிமையாளர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் செயலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.உங்களிடமுள்ள தொல் பொருட்கள் கௌரவத்துடன் எதிர் பார்கப்படுகிறது.



விழா நினைவு மலர் ஒன்றும் வெளியிடத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதில் சிறுகதைகள்,கட்டுரைகள்,ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுத் தகவல்கள், கட்டுரைகள்,கவிதைகள், டிகான்ற ஆக்கங்களை எதிர்வரும் 2016.05.31ம் திகதிக்கு முன்னர் கலாச்சாரப் பேரவை கரைதுறைப்பற்று பிரதேசச் செயலகம்,முல்லைத்தீவு என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.தர முன்னுரிமை அடிப்படையில் பிரசரிக்கப்படும்.
மேலும் மே மாதம் தொடக்கம் மாதம் தோறும் பௌர்ணமி (கலை) விழா ஒன்றை நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிகழ்விலும் உங்களது கலைத் திறமைகளை வெளிக் கொண்டுவர சந்தர்பம் வழங்கப்படும். அத்தடன் மாதாந்த சஞ்சிகை ஒன்றும் வெளிடப் பட உள்ளது..இதிலும் உங்களது தரமான ஆக்கங்களைப் பதிவிடலாம். கலையார்வமுடையவர்கள் கரைதுறைப் பற்று பிரதேச செயலகத்துடன்.உங்களது கிராம அதிகாரிகளுடன் அல்லது கலாச்சாரப் பேரவை பிரதிநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.