Friday, March 31, 2017

முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியமர்வு வியடயங்கள் உட்பட நிர்வாக ரீதியிலும் அநீதியையே பெறுகின்றன்னர்..

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரச காணிகள் 1983ம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகதியில் பிற மாவட்டதவர்களினால் பெருமளவில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறித்த மாவட்ட அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணை போயுள்ளதாக நம்பப் படுகிறது
.எனவே 1983ம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியில் காணி அமைச்சின் முன் அனுமதியுடனோ,அல்லது புலிகளினாலோ எத்தனையாயிரம் ஏக்கர் அரசகாடு அழிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தல் வேண்டும. இதில் புலிகளின் ஆதரவோடு காணி பெற்றுக் கொண்டவர்கள் தகுதிகள் பற்றியும் கவனம் செலுத்துதல் வேண்டும்.குறிப்பாக 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட பின்னர் பாதுகாப்புக் காரணங்களினால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தமிழர்கள் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்துள்ளனர். அல்லது நகர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசகாடுகள் அழிக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முல்லையில் இடம் பெறும் காணி சார்பான போராட்டங்களில் பெரும்பாலும் "வந்தேறு"குடிகளே முன் நின்று செயற் படுகின்றனர். வன்னியில் மீள்குடியமர்வு கோடுப்பனவுகள் தாளாளமாக வழங்கப்படுவதினால் தவறான பதிவகளும் மேற் கொள்ளப்பட்டு "வரப்பிரசாங்களை" செல்வாக்குள்ளவர்கள் சுறுட்டிக் கொள்வதும் அவதானிக்க முடிகிறது.இதன் காரணமாகவும் நியாயமாகப் பொருளாதார மற்றும் மனித உயிர் இழப்புக்களை சந்தித்தவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அரசு இதனை முல்லைத்தீவு பிரதேச செயலகங்களினூடாகப் பெற்று உரிய நடவடிக்கை மேற் கொள்ளுதல் அவசியமாகும்.இதே வேளை மீள்குடியமர காணியற்ற முஸ்லிம்களுக்கு தகுதி அடிப்படையில் காணி வழங்க தமிழ் அரசியல்வாதிகள் முட்டுக் கட்டை போட்டு வருவது யாவரும் அறிந்ததே.இதனால் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியமர முடியாத நிலைமை காணப்படுகிறது. இதையும் அரசும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.