Sunday, November 15, 2009

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் அகதிகளும் முஸ்லிம் சமாதானச் செயலகமும்.இணைப்பு:-1

லங்கையில் ஆயுதப்போராட்டம் தொடங்கிய பின்னர் 1984 ம் ஆண்டு டிசம்பர்மாதம் முல்லைத்தீவு மாவட்டதினுள் 'வெலிஓயா"என்ற புதிய மாவட்டம்அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் திட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது. எனவே இம்மாவட்டத்தின் எல்லைகளை உறுதிப்படுத்தும்நோக்கில் இராணுவம் ஒருநாள் அவகாசத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை குறித்த பிரதேசங்களை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கிமூலம் அறிவித்தனர். இராணுவம் கூறிய காரணம் காடுகளிலுள்ள பயங்கரவாதிகளை குண்டுகளைப்போட்டு அளிக்கப் போவதாக, இதில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் குடும்பங்களும் அடக்கம். இவர்களே தமது பிரதேசங்களை விட்டுவெளியேறிய முதலாவது முஸ்லிம் அகதி அந்தஸ்திற்கு உரியவர்கள். இக்காலத்தில் அறுவடைக்குத்தயாராகவிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய உற்பத்திகள் காட்டு மிருகங்களினாலும்,திருடர்களினாலும் அழிக்கப்பட்டது. இந்தஅழிவுகளுக்கான நட்டஈடுகள் இவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

1987 ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவம் முல்லைத்தீவுமாவட்டத்தினுள் வரும்போது போது முஸ்லிம் பிரதேசத்தினுள் ஏற்பட்ட யுத்தங்கள் காரணமாக பல முஸ்லிம்கள்இறந்தும்,பலர் காயப்பட்டனர்.எனவேமுதலாவதாக சொந்தமண்ணைவிட்டு சுமார் ஐம்பத்தைந்து மைல் தொலைவினை கால்நடையாக நடந்து ஹிஜ்ரத்செய்ய நேரிட்டது. வரும் வழியில் நெடுங்கேணி என்னும்இடத்தில் மூன்றுமுஸ்லிம் இளைஞர்கள் [சஹீதானார்கள்] கொல்லப்பட்டனர்.இதற்கான காரணம் இந்திய இராணுவ ஹெலித் தாக்குதலாகும்.[இவர்களுக்கு உணவு,நீர் மற்றும் உதவிகளை செய்ய வந்திருந்த பலஹிந்து,கிருஸ்த்வர்களும், இறந்தமைகுறிப்பிடத்தக்கது] வவுனிவைநோக்கி முல்லைத்தீவு முஸ்லிம்கள்வநது கொண்டிருக்கும்;செய்தி கொழும்புவரை எட்டியது. உடனடியாக செயலில்இறங்கியமுஸ்லிம் தனவந்தர்கள் தமதுவாகனங்களை வவுனியாவைநோக்கி அனுப்பினார்கள். இவ்வகதிகள் அனுராதபுர மாவட்டதின் நாச்சியாதீவு, கஹட்டகஸ்திஹிலிய, இக்கிரிகொல்லாவெவ கிரிபாவ,மாத்தளை சாஹிரா கல்லூரி ,கண்டி மாவட்டத்தின் அக்குறன சுப்பர் மார்கெட், இக்கினியாகள, தல்கஸ்பிட்டி, குருநாகல் மாவட்டத்தில் கெகுணுகொல ,குருவிகொட்டுவ, புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி, நுரைச்சோலை, கல்பிட்டி, புத்தளம்,ஆகிய பிரதேசங்களில் குடியமர்தப்பட்டனர். இப் பிரதேசமுஸ்லிம்கள் இவர்களுக்கு பாரிய உதவிகளைச் செய்துள்ளனர். இம்முஸ்லிம்களை மறக்க முடியாது.1990 ம் ஆண்டு முற்பகுதியில் இவ்வகதிகள் தமது பிரதேசத்தில் [முல்லைத்தீவு] மீள் குடியமர்தப்பட்டனர். இவர்களுக்கான் உலர் உணவு கொடுக்கப்பட்டது. நட்டஈடு வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டிருந்தது. சிலருக்கு ஒரு சிறு பகுதி நட்டஈடும் வழங்கப்பட்டிருந்தது. காடுகளாக கிடந்த விவசாய நிலங்களை சுத்த்ப்படுத்தினார்கள்.
இவ்வேளையில் 1990 ம் ஆண்டு ஜூலை மாதம் முல்லைத்தீவில் பரவலாக மோதல்கள் தொடங்கியதையடுத்து மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்த்னர். மீண்டும் சுமார் எழுபது மைலகள் கால் நடையாக மூன்று நாட்களில் பாவற்குளத்தை வந்தடைந்தனர்.இங்கு இடம்பெயர [ஹிஜ்ரத்] செய்ய மனமில்லாது த்மிழ் சகோதரர்களை நம்பி முல்லைத்தீவில் இருந்தவர்களும்[சுமார் 25 குடும்பங்கள்] 1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வேறுங் கையுடன் பலவந்தமாக வெளியேற்ரப்பட்டனர். என்பது குறிப்பிடத் தக்கது. இங்கிருந்து வாகனங்கள் மூலம் அனுராதபுர மாவட்டத்தின் இக்கிரிகொல்லவா என்னும் இடத்தை வந்தடைந்தனர். இங்கிருந்து அரச பஸ் வண்டிகளிலும், தனவந்தர்களது வாகனங்களிலும் ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். புத்தளத்திற்கே இம்முறை அதிகமானவர்கள் தாமாக விரும்பிய படியால் கொண்டு வரப்பட்டனர். இதற்கு முல்லைத்தீவைச்சேர்ந்த செயினுத்தீன் அப்துல் றஹீம் என்பரும் முக்கியபங்காற்றினார்.
இங்கு கடந்த 1987 இல் புத்தளத்திலிருந்தபோது முல்லைத்தீவு முஸ்லிம்கள், புத்தளத்து முஸ்லிம்களுடன் முரண்பட்டிருக்கவில்லை.அதற்கு உதாரணமாக புத்தள முஸ்லிம்களின் ஆதரவுடன் 1989 ம் ஆண்டு பொதுத்தேருதலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் அபூபக்கர் அவர்களை பாராளுமன்றம் செல்லவைத்தனர். ஆனால் இவரும் பிரதேச வாதத்தை காட்டத்தவறவில்லை.1987 ம் ஆண்டு முல்லை முஸ்லிம்கள் புத்தளம் மக்களுடன் முரண்பட்டிருந்தால் [1990 ம் ஆண்டு ஜூலைமாதம்] புத்தள மாவட்ட முஸ்லிம்கள் [அன்சாரிகள்] முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் அகதிகளை [முஹாஜிரீன்களை] வரவேற்றிருக்க மாட்டார்கள்.
ஆக 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் வடமாகாணமுஸ்லிகள் அனைவரும் விடுதலைப்புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட பின்னர்தான் முரண்பாடுகள்காணப்பட்டது. காரணத்தை ஆராய்ந்தால் கர்வமுடைய சில மக்களும் சில அரசியல்வாதிகளும், சிலஅரசசார்பற்ற நிறுவனங்களும், ஒருசிலஅரச ஊழியர்களுமாகும்.

இவர்களில் பலர் ஒருமித்தும்,தனித்தும் அகதிகளுக்கான கோடிக்கணக்கான பெறுமதியான உலர் உணவு,மற்றும் நிவாரணப்பொருட்களில் மோசடி செய்து இலச்சாதிபதிகளானார்கள். [இது உங்களுடைய வருகையினால் கட்டப்பட்ட வீடு என்று சொல்லும் நல்ல பண்புள்ள அரச அதிகாரிகள் அகதிகளிடம் சொல்வதாக ஒரு நண்பர் குறிப்பிட்டார்].இது போன்ற செயல்கள் இடம்பெயர்ந்த உள்ளூர் முஸ்லிம் மக்களுக்கிடையே முரண்பாடுகளுக்கு முக்கிய காரணமாகவிருந்தது எனலாம்.
பிற் காலத்தில் அரசாங்க சமாதானச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம், முஸ்லிம் சமாதானச் செயலகம் எனஆரம்பிக்கப்பட்டது. இவைகளுக்கானதேவைகளும் நிறையவே காணப்பட்டது. அதைப்பற்றி மேலும் சந்தர்ப்பம்கிடைத்தால் பார்ப்போம். [இணைப்பு இரண்டினை எதிர் பாருங்கள் இன்ஷா அல்லா]

No comments: