Monday, April 25, 2011

டாக்டர் சாகிர்நாயக் பதில்-2

Print E-mail
கேள்வி : முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
பதில் : உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முஸ்லீம்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர்.
ஊடகங்களின் வாயிலாகவும்  முஸ்லீம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா
மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் - முஸ்லீம்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் "மத்திய கிழக்கு நாடுகளின்" கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்து முஸ்லீம்கள் மீது சுமத்தப்படும்; "அடிப்படைவாதம்" பற்றியும் - "தீவிரவாதம்" பற்றியும் நாம் ஆராய்வோம்.

1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:
தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர். உதாரணத்திற்கு மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார்.
இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார்.
இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. . அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.
2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.

எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் ப+சக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும்.
கொள்ளையடிக்கும் - சிறற்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.
3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.

இறைவனி;ன் மாபெரும் கிருபையினால் - நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து - அறிந்த விதிகளை பின்பற்றி - அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான்.
நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் - இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர்.
இந்த தவறான எண்ணம் ஏனெனில் - இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் - மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் - மொத்த மனித சமுதாயத்திற்கும் - முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.
4. "அடிப்படைவாதத்திற்கு" டிக்ஷ்னரி தரும் விளக்கம்:
அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் "பாதுகாக்கும் கொள்கையை" அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும். நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான - நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது - வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். "கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்" என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.
அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் "மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது - குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்" என்பதாகும்.
இன்றைக்கு ஒரு மனிதன் "அடிப்படைவாதம்" என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் - ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.
5. ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் - ஒவ்வொரு முஸ்லீமும்  ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும்.
சமுதாயக் குற்றவாளிகள் - ஒரு முஸ்லீமை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு - அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு - மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு முஸ்லீம்- அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.
6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு - "பயங்கரவாதிகள்" என்றும் "விடுதலைப் போராட்ட வீரர்கள்" என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.

வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் - இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் - சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் - அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள்.
அவர்கள் "பயங்கரவாதிகள்" என்று ஒரு தரப்பினராலும் - "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை "பயங்கரவாதிகள்" என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று அழைத்தனர்.
எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் - அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு - விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு - அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.
7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.

குறைவதுடன் "இஸ்லாம்" என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் - இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் - நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி - ஒவ்வொரு இஸ்லாமியனும் - சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.