Wednesday, April 20, 2011

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுங்கள்- சட்டத்தரணி றமீஸ்


மீள் குடியேற்றதுக்கு அரசு உதவிகளை செய்யவில்லை என்றும் அரசு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொண்டாலும் அவை நேரடியாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவவில்லை என்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம் .எம் ரமீஸ் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை Jaffna Muslim Association மேற்கொண்டுள்ளது 20 ஆண்டுகளின் பின் தாயக மண்ணில் குடியேறுவதில் ஏற்படும் சவால்கள் , பிரச்சினைகள் அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பாக பிரிட்டனில் வாழும் யாழ் முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பாக நடைபெற்றுள்ள கலந்துரையாடலுக்கு யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம் .எம் ரமீஸ்அதீதியாக  கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் உரையாற்றிய ரமீஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

9000ஆயிரம் யாழ் முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம் , நீர் கொழும்பு, கொழுப்பு ஆகிய பிரதேசங்களில் செறிந்து வாழ்வதாகவும் இவர்களில் 400 குடும்பங்கள் மட்டும் தற்போது மீள் குடியேறியுள்ளதாகவும் மீள் குடியேற்றம் சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் முஸ்லிம் வர்த்தகர்களின் உதவியால் இதுவரை 35 வீடுகள் கட்டப்பட்டும் மேலும் பல வீடுகள் திருத்தபட்டும் உள்ளதாகவும் மீள் குடியேற்றதுக்கு அரசு உதவிகளை செய்யவில்லை என்றும் அரசு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொண்டாலும் அவை நேரடியாக யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவவில்லை.

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வெறும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றமாக இருக்கக்கூடாது அது இஸ்லாமிய மீள்குடியேற்றமாக அமைய வேண்டும் மீள் குடியேற்றத்துக்கு உதவுவது வாஜிப்.  யாழ்ப்பாணத்திலும் அதற்கு வெளியிலும் இயங்கும் 13 அமைப்புகளை கொண்ட கூட்டமைப்பு ஒன்று உருவாக்கபட்டுள்ளதால் அதன் ஊடாக பல சாதகமான விடையங்கள் மேற்கொள்ளபடுவதாகவும் யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் உடனடியாக இடம்பெறும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றும் கடந்த 20 வருடங்களாக வேறு பிரதேசங்களில் வாழந்து வருபவர்கள் உடனடியாக மீள் குடியேற வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது ஆனால் அதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும்.

யாழ்பாணத்தில் 20 ற்கும் அதிகமான மஸ்ஜிதுகளும் பல பாடசாலைகளும் உள்ளது எனினும் சில மஸ்ஜிதுகளும் ஒரு பாடசாலையும் மட்டும் இயங்கும் நிலையில் உள்ளது முஸ்லிம் சமூகம் தான் இழந்த பூமியை மீட்பதும் அதனை மீண்டும் இயக்குவதும் இஸ்லாம் போதிக்கும் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். முஸ்லிம் சமூகம் தனது இருப்பை இஸ்திரப்டுத்த தேவையான மக்கள் தொகையுடன் மீள் குடியேறவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
                                                      நன்றி யாழ் முஸ்லிம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.