Thursday, June 23, 2011

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 09:50.58 AM GMT ]
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களும்
உள்வாங்கப்பட வேண்டுமென்று அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
இனப் பிரச்சினை தீர்வை அடிப்படை யாகக் கொண்டு அரசாங்கத்திற்கும்இ தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மிடையே கலந்துரையாடல்கள் நடைபெற்ற வரும் சூழ்நிலையில்இ மற்றைய சிறுபான்மையினமான முஸ்லிம்கள் தொடர்பில் அவ்வாறான முயற்சிகள் ஏதும் நடைபெறும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் குனியோ தகஹாஷி வினவியபோதே  லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் தரப்பும் உள்வாங்கப்பட்டு, அதனை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக தொடர வேண்டியதன் அவசியத்தை தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருப்பதாக அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு விஷயத்தில் இங்கு வழும் முஸ்லிம்களின் பரிமாணமும் இன்றியமையாதது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையே நல்லுறவு நிலவுவதாகவும் இரு கட்சி முக்கியஸ்தர்களும் அவ்வப்போது சந்தித்து நல்லெண்ணத்துடன் கருத்து பரிமாற்றங்கள் செய்து கொள்வதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.