Thursday, May 1, 2014

முஸ்லிம் பெயர் தாங்கிகளே! நீங்கள் ஏகன் அல்லாவை மறந்து பேச முற்பட வேண்டாம்.

அல்லாஹ்வை ஏற்றும், (அல்-குர்அன்)முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறியை (அல்-ஹதீஸ்) தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களின் பெயரைத் தாங்கிக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தைப்பற்றி அக்கரை கொண்ட வனாக பலர் காட்டிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.இவர்களை ஒரு உண்மை விசுவாசிஆடு நனைவதைக் கண்டு ஓநாய் அழுதகதையாகத்தான் பார்க்கின்றான். நாம்  கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம்  எமது சமூகத்திற்காக  உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு அதிகமான முஸ்லிம் பெயர் தாங்கிகள் பிதற்றுவதையும் கானொளிகளாக காணவும்.வானொலிகளில் கேட்கவும்,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் பார்கவும் முடிகிறது.இவற்றுள் பல செய்திகளைப் பார்க்கும் போது அவர்கள் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவே காண முடிகிறது.

 

பெயர் தாங்கி முஸ்லிம் நண்பர்களே!

 முதலில் நீங்கள் உங்கள் மனநிலையை மீள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.அது சரியாக இயங்கினால் அல்-குர்ஆனின் தமிழ், சிங்கள அல்லது ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் இப்போது தேவையான அளவு றெ்றுக்கொள்ள முடியுமாகவுள்ளது.எனவே அவற்ரில் உங்களுக்கு பரீட்சை யமான மொழியைத் தேர்வு செய்து அதைப் பெற்று அதைத் தெளிவாக வாசித்து புரிந்த கொள்ளுங்கள்.அடுத்து சஹீகான ஹதீஸ் புத்தங்கள்  இப்போது இணையத்தளங்களில் ஈ பதிவு களாகப் பெற்றுக் கொள்ள முடியும்.அவற்றையும் உங்களுக்கு தெளிவாக புரியும் அளவிற்கு படித்துக் கொள்ளுங்கள்.இனி அதனை உங்களது வாழ்கையில் செயற்படுத்துங்கள். இதுதான் நீங்கள் இச்சமூகத்தில் அக்கரை கொண்டிருந்தால் அதுதான் நீங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் மாபெரும் உதவியாகும்.
     இதை விடுத்து  இஸ்லாம் என்ற பெயரில் வாயில் வருவதையெல்லாம் பேசி உங்களையும் கெடுத்து அப்பாவிமுஸ்லிம்களையும் கெடுத்து ஏனைய மதத்தினைருக்கும் சுவர்கத்திற்கு செல்லும் நேரான பாதைளை தவறாக புரியும் தகவலையும் கொடுக்காதீர்கள். நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.இறப்பையும்,கப்று (புதைகுழி) வாழ்வையும், மறுமை யில்  அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் நாளையும் நினைவில் கொண்டு  நீங்கள் விரும்பும் சுவர்கம் மற்றும் நரக வாழ்வையும் எதிர் பார்த்து உங்களைத் தயார் செய்யும்படி பணிவாக வேண்டுவதுடன்,எட்டப்பன் வேலையையும் கை விடுங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.