Thursday, May 8, 2014

வடமாகாண தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் சிந்திப்பார்களா?2014.05.07 ம் திகதி சக்தி தொலைக்காட்சி செய்திச் சேவையில் பதிவு செய்யப்பட்ட ஒலி வடிவம்   இது -   நன்றி சக்தி தொலைக்காட்சி

கடந்த 2014.04.22ம் திகதி இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட செய்தி அனுமானமாக வடமாகாண அரசியல் வாதிகளுக்காக முன் வைக்கப் பட்டது. இப்போது மேற்குறித்த உரையின் எண்ணக்கருவை குறித்த இடுகை முந்திக் கொண்டது.மேலும் இவ்வேண்டுதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை உறைவிடமாகக் கொண்ட தங்களுடைய மக்களுக்கு என்றுதான் அவசரமாக விடுத் துள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கென்றோ அல்லது முஸ்லிம்களையும் சேர்த்தோ  இந்த வேண்டுதலை விடுக்கத் தவறியுள்ளார்.

மேலும் 1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெறுங்கையுடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வடக்கிற்கு வெளியே பல மாவட்டங்களில் வாழுகின்றமை கவனத்தில் கொள்ளத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வட மாகாணம் இருந்த போது  ஏற்பட்ட தற்காலிக சமாதான காலத்தைப் பயன் படுத்தி வடமாகாணத் திலுள்ள பெறுமதிவாய்ந்த முஸ்லிம்களுடைய காணிகளை சொற்ப விலைக்கு அங்கு வாழ்ந்த தமிழ் பேசும் ஹிந்துக்களும்,கிருஷ்தவர்களும் பெற்றுக் கொண் டார்கள். யாழ்ப்பாணத் தில் அதிக பெறுமதியுடைய காணிகள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இம் முஸ்லிம்கள் தமது காணிகளை பணத்தை மீளக்கொடுத்து பெற முயன்றும் அது முழுமையாக சாத்தியமாகவில்லை. இவர்களுக்கு அரச காணிகளும் வழங்காததினால் அவர்கள் தமது வாக்குளை தாம் இடம் பெயர்ந்து வாழ்ந்த மாவட்டங்களில் பதிவு செய்துள்ளனர். இச் செயற்பாடுகள் வடமாகாண அரசியல் நடவடிக்கைக்கு பேரிழப்பாகும் இவ்விழப்பிற்கு வடமாகாண தமிழ் அரசியல் வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.
இது போன்று யுத்தகாலத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலும், மலையகப் பிரதேசத்திலும் இருந்து இடம் பெயர்ந்து முல்லைத்தீவில் முகாம்களில் அல்லது முஸ்லிம்களின் காணிகளில் பலர் குடியிருந்தனர். இவர்களினாலும்,நிரந்தர ஊர்வாசிக ளாலும் குறித்த சமாதான காலத்தில் முஸ்லிம்களின் காணிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பேரில் குறைந்த விலைக்கு பெற்றுக் கொண்டனர். இவற்றுள் L.D.O காணிகளும் அடங்கும்.இப்போது முல்லைத் தீவில் மீளக் குடியமரவுள்ள முஸ்லிம்கள் தமது குழந்தை களின் கல்வி மேம்பாட்டை கவனத்தில் கொண்டு ஒரே பிரதேசத்தில் மீளக்குடியமர விரும்பி அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் வடமாகாண அரசியல் வாதிகளும்,முல்லைத்தீவு அரச அதிகாரிகள் சிலரும் முட்டுக் கட்டை போட்டு இம் முஸ்லிம்களை பலவலாக குடியமர்த சதி திட்டங் களையிட்டு அதில் ஓரளவு வெற்றியும் அடைவ தனை காண முடிகிறது.இது அவர்களின் உள்ளத்திலுள்ள கசப்பான எண் ணம் என்பது கசப்பான உண்மை யாகும்.இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.முல்லைத்தீவு முஸ்லிம் களுக்கு காணி வழங்குவதாக நாடகமாடி பல காணிக்கச்சேரிகளை வைத்து முஸ்லிம்களின் பொருளா தாரத்தையும்,நேரத்தையும் விரையமாகிக் கொண்டி ருப்பதோடு அவர் களின் மனங்களில் மீள் குடியேற்றத்திலுள்ள்ள ஆர்வத்தி னையும் கனிசமான அளவு குறைத்து விட்டனர். சமகாலத்தில் 1990 இற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு வழங்கிய காணிகளை (காடுகளை) துப்பரவு செய்ய வற்புறுத்துதல் போன்ற நடவடிக்கையை குறப்பிட்டாக வேண்டும். இடம் பெயர்வு காரணமாக தொலைந்த காணி உறுதி, உத்தரவுப் பத்திரத் திற்காக முஸ்லிம்களும் விண்ணபிருக்கின்றனர். இவற்றை கணிணிகளில் பதிவு செய்து வைத்துள்ள காணி அதிகாரிகள் காணிக் கச்சேரிகளின் போது இந்த இந்த இடங்களில் உங்களுக்கு காணி இருப்பதாகக் கூறி முஸ்லிம் களின்  மேட்டுப்பயிர்ச் செய்கைக்குரிய காணிகள்,நெற்செய்கை காணிகளை யும் குறித்துக் காட்டுகின்றனர். இக் காணிகளில் மீள்குடியமர்வுக்கான வீட்டுத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இவற்றில் வசிக்க இருப்பவர்கள் மின் சாரத்தை காண நீண்ட காலமெடுக்கும். மேலும் அதற்கான செலவீனமும் அதிகமாக தேவைப்படும்.இவர்கள் மீண்டும் துன்பமான வாழ்கையை எதிர் கொள்ள மறைமுகமாக வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதை முஸ்லிம் அரசியல் வாதிகள் கவனமெடுக்க வேண்டியுள்ளது. மேலும் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி போன்ற கிராமங்களிலுள்ள பல L.D.O காணிகளை வெளி மாவட்டதிலிருந்து வந்தவர்களும்,உள்ளுர் தமிழர்களும் வாங்கியுள்ளதை அரசு சட்ட பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதா? குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசா லைக்கு (மாஞ்சோலை) முன்னாலுள்ள பிரதான வீதிக்கு அண்மையிலுள்ள ஹிஜ்ராபுர மக்களின் L.D.O காணிகள் சார்பாக சர்ச்சைகள் காணப்படுகின்றன. இக்காணிகள் சார்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படுதல் வேண்டும் இதற்கு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளும் உதவலாமல்லவா? மீள் குடியமர்வுக்கு வீடு வழங்கும் தகவல் விடயத்தில் புத்தளத்தில் காணி,வீடு இருப்பதை சுட்டிக்காட்டும் அதிகாரிகள் வெளி மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து முல்லைத்தீவில்  மீளக்குடியமரவென வீடுகள் வழங்கிய போது அவர்களது சொந்தப் பிரதேச காணி,வீடு போன்ற வற்றையும் கவனித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையா? இவர்கள் மீள்குடியேற்றம் எங்கு செய்ய வேண்டும்.இவர்களுக்கு விஷேஷ சட்டங்கள் அமுலிலுள்ளதா? அல்லது முஸ்லிம்களுக்கு சட்டங்கள் வேறாக உள்ளதா? ஆக பிரச்சினையென்று வரும் போது முஸ்லிம்களும் அதன் போக்கிலேயே அணுக நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.
 ஆயினும் வெளிமாவட்ட மற்றும் மலையக மக்களை தமிழ் அரசியல் வாதி களின் திட்டமிட்ட குடியேற்றத் திட்டத்தினாலும், அரசினால் செய்யப்படு கின்ற குடியேற்றங்களாலும் வன்னி மாவட்டம் மேலதிகமாக ஒரு பாராளு மன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ளத் தயாராவுள்ளது.
வடமாகாண முஸ்லிம்களது மீள் குடியேற்றம் சார்பாக பேசப்படுகின்ற இந்த இறுதி நேரத்திலாவது தமிழ்,முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மனம் திறந்த பேச்சு வார்தையைத் தொடங்கி தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். தவறும் பட்ச்சத்தில் வடமாகாண முஸ்லிம் தமிழ் உறவில் விரிசல் ஏற்படலாம்! புதையல் காத்த பூதத்தின் நிலைதான் அரச காணியிலும் தழிழ் தரப்பினர் எதிர் கொள்ள வேண்டி வரலாம்!! முஸ்லிம் களும் மீள் குடியமர்வு சார்பான நடவடிக்கைகளை தோண்டிப்பார்க் கவும்,காட்டவும் தயாராக இருக்க வேண்டும்!!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.