
இது தொடர்பாக திரு எஸ்.டப்ள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் தெரிவித்த
கருத்துக்கள் 1926ம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி வெளிவந்த ”சிலோன் மோனிங் லீடர்”
பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது..
அதாவது இலங்கையில் வாழ்ந்து வரும் பல்லின மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண் கொண்டு நோக்கி வருகின்றனர். அவர்களுக் கிடையில்
நிலவிவரும் வேறுபாடுகள் அடிப்படையான வேறுபாடுகளாக இருந்து வரவில்லை.எனக்கருதுவது
தவறானதாகும். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் அத்தகைய வேறுபாடுகள் இருந்து வரவில்லை. தமிழர்கள்,
இஸ்லாமியர்,மலைநாட்டுச் சிங்களவர்கள், மற்றும் கரையோரச் சிங்களவர் ஆகிய அனைவரும்
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த காரணத்தினால் அத்தகைய வேறுபாடுகள் தலை
தூக்கவில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டுமென இலங்கை மக்கள் குரலெழுப்பத் தொடங்கியமையை
உடனடுத்து உள்ளே அமுங்கிக் கிடந்த இத்தகைய வேறுபாடுகள் தீப்பொறிகள்போல வெளிக் கிளம்பத்
தொடங்கின.
தமிழர்கள், இஸ்லாமியர், மலைநாட்டுச் சிங்களவர்கள், மற்றும் கரையோரச் சிங்களவர்
ஆகிய சமூகப் பிரிவினர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் வாழ்ந்து
வந்திருந்த போதிலும் ஒருவரோடு ஒருவர் இணைந்து கொள்வதற்கு அவர்கள் எந்தவொரு
சந்தர்ப்பத்திலும் ஆயத்தமாக இருந்து வரவில்லை.என்ற விடயத்தையே வலராறு எமக்கு
எடுத்தக்காட்டகின்றது. அவர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்கள், மொழி, மற்றும் சமயம் என்பனவற்றை
தனித்தனியாக பின்பற்றி வருகின்றனர்.இந்த வேறுபாடுகள் காலப் போக்கில் ஒழிக்கப்பட்டு
விடுமென ஒரு முட்டாள் மட்டுமே கருதிக் கொள்ள முடியும்.சமஷ்டி ஆட்சி முறையில் கீழ் இடம்பெறும் ஒரு விடயம் அனைத்து சமஷ்டி
அலகுகளுக்கும் தன்னாதிக்கும் கிடைப்பதாகும். அதேவேளையில் அனைத்து அலகுகளும் ஒன்றாக
இணைந்து காணப்படுகின்றன. முழுநாட்டையும் பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் குறித்து
கலந்துரையாடுவதற்கு அவர்களுக்கு ஒரு அரசாங்கசபை அல்லது இரு அரசாங்க சபைகள் இருந்து
வருகின்றன.
ஐக்கிய அமெரிக்காவின் இத்தகைய ஒரு ஆட்சி முறையே காணப்படுகின்றன.
கனடா.அவுஸ்ரேலியா, மற்றும் தென்னாபிரிக்கா போன்ற சுயாட்சிக் குடியரசுகளிலும்
அத்தகைய ஆட்சி முறையே இருந்து வருகிறது.. சுவீட்ச்சலாந்தில் காணப்படும் ஆட்சிமுறை
இலங்கைகு மிகவும் பொருத்தமான ஒரு முன்
மாதிரியாக இருந்து வருகிறது.அது மிகவும் சிறிய ஒரு நாடாகும் எனினும் அங்கு
பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச்
சேர்ந்த சமூகக் குழுக்கள் வாழ்ந்து வருகின்றன.சுவீட்சிலாந்தில் சமஷ்டி வகையைச் சேர்ந்த ஆட்சி முறை மிகவும்
வெற்றிகரமாக இடம் பெற்று வருவதை காண முடிகிறது.
இலங்கையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் முழுமையான சுயாட்சி உரிமை இருந்து வருதல்
வேண்டும். நாட்டின் விஷேஷ வருமானங்கள் மற்றும் செலவுகள் என்பன குறித்து முடிவுகளை
மேற்கொள்வதற்கு ஒரு அரசாங்க சபை அல்லது இரு அரசாங்க சபைகள் இருந்து வருதல்
வேண்டும். இந்த ஆட்சி முறைக்கெதிராக எண்ணற்ற தர்க்க நியாயங்களை எவரும் முன் வைக்க
முடியும்.எனினும் அந்த எதிர்ப்புக்கள் குறைவடைந்து சென்ற பின்னர் சமஷ்டி ஆட்சி
முறையே இலங்கைக்குள் ஒரேயோரு தீர்வு என்ற நிலை ஏற்படும்.
1920களில் ஓர் இளைஞனாக இருந்து வந்த திரு பண்டாரநாயக்கா
அவர்கள் முன்வைத்த மேற்படி கருத்துக்கள் இலங்கைக்கு ஒரு சமஷ்டி ஆட்சிமுறை
தேவைப்படுவது ஏன் மற்றும் அதற்கெதிராக முன் வைக்கப்படும் தர்க்க நியாயங்கள்
ஆதாரமற்றவையாக இருந்து வருவது ஏன் என்ற இரு கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.