Saturday, January 30, 2016

மலைநாட்டுச் சிங்களத் தலைமைகள் முன்வைத்த சமஷ்டி ஆட்சி முறை தொடர்பான கோரிக்கை.



இலங்கைக்குப் பொருத்தமான ஆட்சி முறையொன்றை சிபாரிசு செய்வதற்கென டொனமூர் ஆணைக்குழு 1927ம் ஆண்டு நியமனஞ் செய்யப் பட்டது. இந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக கருத்துத் தெரிவித்த மலைநாட்டு சிங்களப் பிரதானிகள் தாம் கரையோரச் சிங்களவரிலும் பார்க்க வேறுபட்ட ஒரு மேலான குடியினராக இருந்து வருவதினால் தமது தனித்துவமான அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறையை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டனர்.அது தொடர்பாகடொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் விபரங்கள் வருமாறு.

அதிகாரமும்,செல்வாக்கும் மிக்க மலைநாடைச் சேர்ந்த ஒரு தரப்பினர் மலைநாட்டுப் பிரதேசத்திற்க சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.அண்மையில் அமைக்கப் பட்டிருந்த மலைநாட்ட தேசிய சபையின் பிரதிநிதிகள் கொரிக்கைகள் குறித்த மிகத் திறமையாகவும்,ஆணித்தரமாகவும் தமது கரத்துக்களை முன் வைத்திருந்தனர். இந்த சபை பெருமளவக்கு உயர் குடி தலைவர்களினதும்,கிராம அதிகாரிகளினதும் அபிப்பிராயங்களையும்இஅச்ச உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஒரு சபையாகவேஇருந்து வருகிறது. எனினும் மலை நாட்டில் மட்டுமன்றி நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு சில அமைப்புக்களுக்கும்ஒரு,சில மலை நாட்டவர்களும் இதனை கடுமையாக எதிர்த்தனர்.
அக்காலப் போர்களில் முன்னனியில் இருந்த தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் அரசியல் சீர்திருத்தங்களைக் கோரி முன்னெடுத்துச் செல்லப்படும் ஓர் இயக்கம் குறித்து சந்தேகப்படுவதும், அதற்கென முனைப்புடன் செயற்பட்டு வரும்  நபர்களின் வாதப் பிரதி வாதங்களை அதிர்ச்சியூட்டும் தேசத் துரோக கருத்துக்களாக நோக்குவதும் இயல்பாகும்.மேலும் அனைத்து விடயங்களுக்கும் மிக்க் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இன்றைய யுகத்தில் தாம் இதுவரை காலமும் மிகந்த பயபக்தியடன் வாழையடி வாழையாகப் போற்றிப் பாதுகாத்து வந்த தமக்கே உரித்தான  பழக்கவழக்கங்கள் மற்றும் சம்சம்பிர்தாயங்கள்  என்பவற்றின் எதிர் காலம் குறித்து அவர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தோன்றுவதும் இயல்பானதேயாகும். மலைநாட்டுத் தலைவர்கள் இந்த விதத்திலான ஒரு கருத்தினை தெரிவிப்பதற்கு வழிகோலிய  மூன்று காரணங்கள் இருந்து வருகின்றன. முதலாவது காரணம் பொருளாதாதார நெருக்கடிகள் காரணமாக  கரையோரச் சிங்களவர்களும், தமிழர்களும்,முஸ்லிம்களும் சனச்செறிவு மிகுந்த கரையோரப் பிரதேசங்களிலிருந்த வெளியேறி மலை நாட்டிற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் குடிபெயர்ந்து சென்று கொண்டிருந்தனர். இரண்டாவது காரணம். அவ்விதம் குடிபெயர்ந்து சென்றவர்களால் கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய நிலையிலிருந்து வந்த மலைநாடைச் சேர்ந்த அப்பாவிக் கிராம மக்களை மிக எளிதில் சுரண்டக் கூடிய நிலை நிலவி வந்த்தாகும். மூன்றாவது காரணம் தமக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்துக் கொள்வதற்காக இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் பெரும் பாலானவர்கள் கரையோரச் சிங்களவர்களாக இருந்து வந்தமையாகும்.கரையோரச் சிங்களவர்களின் கோரிக்கையை ஏற்றக் கொண்டால் என்றோ ஒரு நாள் தமது சொந்த நாட்டில் தாம் அந்நியப் படுத்தப்பட முடியும் என்ற அச்ச உணர்வும் மலைநாட்டுச் சிங்களவர்கள் மத்தியில் நிலவி வந்த்து.இவ்விதம் வந்து குடியேறியவர்கள் மிகவும் தந்திரமான மறையில் தமது காரியங்களை சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தைக் கொண்டிருதந்னர்.
வந்தேறு குடிகளின் பிடியிலிருந்து தப்பிக் கொள்ளும் அளவுக்கு ஆற்றல் கொண்டவர்களாக மலை நாட்டு மக்கள் இருந்து வரவில்லை. மறுபுறத்தில் மலை நாட்டிலிருந்து அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்படும் பிரதி நிதிகள் மலை நாட்டவர்களாக இருந்து வந்த போதிலும் அவர்களின் எண்ணிக்கை கரையோரப் பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பெருமளவிற்கு குறைவாக இருந்து வந்த்து.கரையோரச் சிங்களவர்களுக்கும், இலங்கைத் தமழிழர்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப் படுவதனையும்  அதற்கூடாக மலைநாட்டுப் பிரதேசத்தின் அரசியல் அதிகாரம் இந்த இரு பிரதான குழுக்களின் கைகளில் போய்ச் சேர்வதனையும் மலைநாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் தனித் தனமை என்பன ஒழிக்கப்படுவதனையும் எந்த வித்த்திலும் தடுத்துக் கொள்ள முடியாது போய்விடுமென அவர்கள் கருதினர். நாட்டில் முன்னெடுக்கப் பட்ட அரசியல் சீர்திருத்த இயக்கங்களை மலைநாட்டுச் சிங்களவர்கள் சந்தேக்க் கண்கொண்டு நோக்கினர்.இந்த இயக்கங்களுக்கூடாக பெருமளவுக்கு முன்னேறியிருக்கும் கரையோரச் சமூகங்களுக்கு மத்தியில் தமது தனித்தன்மை மங்கிச் செல்ல முடியும் என்றும்,அகரித்து வரும் கரையோரச் சமூகத்தின் செல்வாக்கிற்க தாம் இரையாக வேண்டியிருக்குமென்றும் அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர்.
இத்தகைய நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு இலங்கை மூன்று சுயாட்சி அலகுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற யோசனையை மலைநாட்டுத் தவைர்கள் முன் வைத்தனர். அவையாவன்
1. தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழ்ந்து வரம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள்
2. மலை நாட்டு மாகாணங்கள்.
3. கரையோரச் சிங்களவர்கள் செறிவாக வாழ்ந்து வரும் தென் மற்றும் மேல்    மாகாணங்கள்.
இந்த முறையின் பிரகாரம் அம் மூன்று சமூகப் பிரிவினருக்கும் சுயாட்சியுடன் கூடிய ஓர் அரசாங்கம் கிடைக்கும்.அதற்கூடாக மலை நாட்டவர்களின்  தேசிய மேன்மை பாதுகாக்கப் படுவது மட்டுமன்றி தெற்கிலிருந்தும்,வடக்கிலிருந்தும் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும் அச்சுறுத்தல்கள் குறித்த அச்சமும் போக்கப் பட்டுவிடும். முழு நாட்டிற்கும் நன்மையை எடுத்து வரக்கூடிய விடயங்களைச் செயற்படத்துவதற்கும் இந்த மூன்று அரசாங்கங்களையும் இணைத்து ஒரு சமஷ்டி அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள முடியும். அப்பொழுது எந்த ஒரு சமூகப்பிரிவினாலும் மற்றொரு சமூகப் பிரிவை அடக்கியாள முடியாத நிலை தோன்றும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.