Tuesday, January 12, 2016

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,வன்னி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான காதர் காதர் மஸ்தானின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர் இனங்காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் தமது வாக்காளர் பதிவு சார்பாக மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தனர்.இது சார்பான விசாரணை 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முல்லைத்தீவு தேர்தல் உப அலுவலகத்தில் இடம் பெற்றது.அச்சமயம் மக்களுக்கும், உத்தியோகத்தர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியது.இது சார்பான முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், அமைச்சர்களுடனும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தமது பிரச்சினை சார்பாக பேசினார்கள்.
அதில் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர்.காதர் மஸ்தானுடன் தான் தொடர்பு கொண்ட போது உங்களுடைய அமைச்சரிடம் சொல்லலாமே,ஏன் என்னிடம் கூறு கின்றீர்கள் என்று கூறியதாக மக்கள் மத்தியில் ஒருவர் கதையை பரவ விட்டுள்ளார்.இது எனது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. நான் மறு நாள் பாராளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போது தான் அப்படி யாருடனும் பேசவில்லை யெனவும்,அப்படியான தேவையும் எனகில்லை எனவும் குறிப்பிட்டார்.கடந்த 2016.01.04ம் திகதி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும்,முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி விடயமாக முல்லைத்தீவு மாவட்ட இஜம்மியதுல் உலமா சபையினருடனும், பள்ளிவாசல் நிருவாக சபை பிரதிநிதிகளுடனும் கலந்துரையாட முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு சமூகம் தந்திருந்தார்.அப்போது வாக்குப்பதிவு சார்பாக பேசப்பட்ட பொழுது வாக்குப் பதிவு மீளாய்வு செய்யப்பட்ட அன்றைய தினம் ஒருவரிடம் நான் தவறான முறையில் பேசியதாக இங்கு கதை பரவியுள்ளது பற்றி பரீத் காக்கா என்னிடம் கேட்டார். அதற்கு நான் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை எனக் கூறியாகக் கூறி தனது கவலையை வெளியிட்டார்.அங்கிருந்தவர்கள் அப்படியான பொய் தகவலை பரப்பியது யாரென என்னிடம் வினவிய போதும் அதற்கு என்னால் ஆதார பூர்வமான பதில் தர முடியவில்லை.
கடந்த 2016.01.10ம் திகதி தண்ணீரூற்று முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டில் சேர்த்த மாணவ,மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.அந் நிகழ்வு சார்பான புகைப்படங்கள் பதிவேற்றப் பட்டிருந்தது. அப்புகைப் படங்களை அவதானித்த ஒருவர் குறித்த ஒரு நபரைக் சுட்டிக்காட்டி இவர்தான் மஸ்தான் எம்.பி யைப்பற்றி கதை கட்டியவர் எனச் சொன்னார். அவர் அமைச்சரின் முக்கியமான ஆதவாளர் என்பது தெரிய வந்ததுடன் இவர் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த வெற்றிலைச் சின்ன அதரவாளர்களுக்கு தொந்தரவுகளையும், இடையூறுகளையும் எற்படுத்தியவராகவும் அடையாளம் காணப் பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.