Wednesday, January 25, 2017

முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான விருது 2017 (மாகாண ரீதியாக முதலிடம்)


முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு வடமாகாண விவசாயிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான முதல்தர விருது வடமாகாண முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன்  அவர்களினால் அண்மையில் வழங்கப்பட்டது.
இது. வடமாகாண முஸ்லிம்களுக்கும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கும் முஹம்மது சிறாஜ் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார்
அப்துல் கபூர்,தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரான இவர் நீராவிப்பிட்டி கிழக்கில் பிறந்தவராவார்.இவரது பாட்டனார்களும்,தந்தையும் பாரம்பரிய முறையிலான விவசாயத்தை தொழிலாக் கொண்டிருந்தனர்.தந்தை பகுதி நேர தையற் கலைஞனாகவும்  தொழில் புரிந்தார்.

1990ம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வடமாகாணத்தை விட்டும் புலிகள்  வெளியேற்றும் போது தனது குடும்பத்தாருடன் தாய் மண்ணை விட்டும் வெளியேறினார். திசை மாறிச் செல்லும் வழியில் புத்தளத்து மக்களால் தஞ்சமளிக்கப்பட்டு அங்கு பல சமூக சேவையிலும் ஈடு பட்டதுடன் நவீன விவசாய விஞ்ஞானத்திலும் கவனம் செலுத்தினார். மேலும் அந்நிய மொழித் தேர்ச்சியும் பெற்றுக் கொண்டார்.இவருக்கு சர்வதேச நிறுவனங்களும் வழிகாட்டியன.

2009ம்  ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதும் தனது சொந்த மண்ணில் குடியேறினார்.குடியேறியவர் சமூகசேவை மற்றும் அரசியலிலும் ஈடுபாடு காட்டியதுடன்,தான் கற்றவற்றை தனது மண்ணில் செய்து பார்க்க உத்தேசித்தார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி, பிள்ளைகள், சகோதர்களும்,மற்றும்  உறவினரும் முன் வந்தனர். இவரது பண்ணையில் சாதி,மதம் பாராது தொழில் வாய்ப்புக்களும் வழங்கினார்.இங்கு அதிகமான திராவிடர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுத்தார்.

இவற்றை அவதானித்த முல்லைத்தீவு  மாவட்டத்தில் விவசாயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும்.பணியாளர்களும் இவருக்கு சிறந்த ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் வழங்கினார்கள் .மேலும் தெழில்நுட்பத் தளபாடங்களையும்,நவீனரக மரக்கன்றுகளையும் வழங்கி ஊக்கிவிப்பு வழங்கினார்கள்.

பல இடையூறுகளும் இவரை தொடர்ந்தன.அவற்றையெல்லாம் எல்லாம்வல்ல படைப்பாளன் அல்லாஹ்வின் அருள் கொண்டு பின்தள்ளி இன்று நாம் பெரும்மைப்பட்டுக் கூறும்  விவசாயியாக வளர்ந்துள்ளார். அவரை முஸ்லிம் அகதியும் வாழ்த்துகிறது.

ஆக அவர் கற்றவற்றிலிருந்து ஏனைய சகோதர்களுக்கும் கற்றுக் கொடுக்கவும்,வழிகாட்டியாகவும் செயற்படுவார் என நம்புகின்றோம்.


தேசபந்து,தேசகீர்த்தி,சாமசிறி முஹம்மது சுல்த்தான் பரீத் (அகில இலங்கை சமாதான நீதவான்) 2017.01.26

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.