Wednesday, December 28, 2016

முல்லைத்தீவில் 1990ம் ஆண்டிற்கு பின்னர் வெளிமாவட்டத் தமிழருக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.இது சட்ட விரோத செயற்பாடாகும்.

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம்கள் ஒத்­து­ழைக்­க­வேண்டும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு (எருவில் நிருபர்)




வடக்கு,கிழக்கு இணைப்­புக்கு முஸ் லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன் என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா கூறினார்.

Monday, October 3, 2016

முல்லைத்தீவு முஸ்லிம்களின் உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல் அமைதியானது.

முல்லைத்தீவு நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட  ஆசிரியரும், அரசியல் பிரமுகருமான அன்ரனி ஜெகநாதன்  அவர்கள் எதிர்பாராத (மாரடைப்பால் ஏற்பட்ட )விபத்துக் காரணமாக இயற்கை எய்தார். இறக்கும் போது வடமாகாணசபை உறுப்பினராகவும், அச்சபையின் பிரதி தவிசாளராகவும் பணியாற்றினார்.தனது பதவிக் காலத்தில் வடமாகாண முஸ்லிம்களுக்காகவும், குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பாகவும்.அவர்களின் உரிமைகளை சரியாக வழங்க வேண்டுமென   துணிச்சலாக விவாதங்களை மேற் கொண்டவர். முல்லைத்தீவு முஸ்லிம்

Friday, July 29, 2016

முல்லைத்தீவு முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள்

புலிகளின் ஆட்சிக் காலத்தில் முள்ளியவளையில் ஒரு கூட்டத்தைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்தார்களாம்,அதில் புலிகள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிகளை எவ்விலை கொடுத்தவாவது வாங்குமாறு ஆலோசனை வழங்கினார்களாம். உடனே அங்கிருந்த ஒரு அரச அதிகாரியும்,ஒரு அரசியல் வாதியும் (இப்போதைய வடமாகாண சபை உறுப்பினர்) அதனை எதிர்த்தனராம். அதன் காரணமாக கூட்டம் பிசுபிசுத்துப் போனதாம்.

Monday, May 9, 2016

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பரிவின் 2016ம் ஆண்டிற்கான காலாச்சார விழா

தகவல்  தேசபந்து,தேசகீர்த்தி,சாமஸ்ரீ முஹம்மது சுல்தான் பரீத்.ஜே.பி

Thursday, April 21, 2016

“தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்”



1968ம் ஆண்டு தண்ணீரூற்றில் “தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்” என்னும் பெயரில் சமூகசேவை தொடர்பான நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அப்போது எனது வயது பதினைந்தாகும்..இதன் தலைவராக மீராலெவ்வை முகைதீன் தமபி அவர்களும்,செயலாளராக உசனார் மரைக்கார் அப்துல் சுபைர் அவர்களும்,பொருளாளராக அப்துல்லா லெவ்வை முஹம்மது றஷீத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.