Tuesday, July 7, 2009

டி.எம்.டி.யூ-ஆரம்ப நிகழ்வு 1993.07.26

<= இடம் பெயர்ந்த முஸ்லிம் அபிவிருத்தி அலகு [டி.எம்.டி.யு] அலுவலகத்தின் முன்னே;
அமைப்பாளர்
:- முகம்மது சுல்தான் பரீத்,
ஆலோசகர்
:- முகம்மது சரிப்டீன் முகம்மது பாருக் உதவி அமைப்பாளர்:- முகம்மது முஸ்தபா,மன்சூர்.
<=கூட்டத்தின் முடிவின் போது ; கூட்டத்துக்கு வத்தவர்களுக்கும், உதவிகள்செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றார். உதவி அமைப்பாளர் முகம்மது முஸ்தபா, மன்சூர் அவர்கள்.
<= இடம் பெயர்ந்த முஸ்லிம் அபிவிருத்தி அலகு நிறுவனத்தின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை இன் கௌரவ முஸ்லிம் சமய கலாச்சார இராஜாங்க அமைச்சரும் ,புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உர்ப்பினருமாகிய அல்-ஹாஜ் .எச்.எம். அஸ்வர் அவர்கள் ;இடம் பெயர்ந்து வந்தவர்கள் இணங்கி வாழ வேண்டும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்அருகில் தலைமை தாங்கி அமர்ந்திருப்பவர் நிறுவத்தின் ஆலோசகரும். அன்சாரியுமான அல்-ஹாஜ் முகம்மது சரிப்தீன், முகம்மது பாறூக் அவர்கள்.
<-நிறுவனத்தின் திறப்பு விழா வைபவத்தில் கலந்துகொண்ட இலங்கை செச்சிலுவைச் சங்கத்தின் புத்தளம் மாவட்டக்கிளையின் தலைவர் ரெக்சி பெர்னாண்டோ அவர்கள் சிங்கள மொழியில் உரையாற்ருவதை புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் மொழியில்வழங்குகின்றார்.அவரது உரையில் ஒரு கேள்வியைமுன் வைத்திருந்தார். அதாவது இப்பிரதேசத்தில் பெருமளவிலான இடம் பெயர்தோர் வாழும் நிலையில் இந்த சிறப்பான ஆரம்ப விழாவிற்கு சொற்ப அளவலான மக்கள் சமூகமளித்திருப்பது தமக்கு பெருமேமாற்றத்தை தந்திருபதாகக்குறிப்பிட்டு; அதற்கான காரணத்தை வினாவாகவும் முன் வைத்தார்.
இந்த நிறுவனம் இப்பிரதேசத்தில் உருவாக்கப்படுவதை சிலர் விருப்பவில்லை. குறிப்பாக இப்பகுதியில் அகதிகளுக்கான நிவாரணங்களை வழங்குவதில் ஈடு பட்டுள்ள அரச,அரச சார்பற்ற ,கூட்டுறவு, உத்யோகத்தர்கள் சிலரும் மற்றும் நிவாரணங்களில் மோசடிகளை மேற்கொள்ள உதவியாக இருந்த சிலஅகதிகளுமாகும். இவர்களின் தடை செய்யப்பட்ட அசசுறுத்தலையும் மீறி விழாவிற்கு வருகை தந்திருந்த அகதிச்சிறுவர்களையும் ,மற்றும் பெரியோர்களையும் இங்கு காண்கின்றீர்கள்.
நிறுவனத்தின் அங்குரார்ப்பண வைபவ நிகழ்வில் கலந்து கொள்ளவென வருகைதரும் முஸ்லீம் சமயஇராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன் உறுப்பினருமாகிய அல்-ஹாஜ் .எச்.எம். அஸ்வர் அவர்களையும், வடமேல் மகாண சபை புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியகட்சியின் பிரதிநி அல்-ஹாஜ் எம்..மிஸ்ருல்ஹாபி அவர்களையும் மேடையை நோக்கி அழைத்து வருபவர் நிறுவனத்தின் பிரதான அமைப்பாளர் எம்.எஸ்.பரீத் அவர்கள்,முன்நின்று வரவேற்பவர் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கொத்தாந்தீவு ஜனாப் அன்சார் அவர்கள்.
ஸ்ரீ லங்கா புத்தளம் மாவட்டத்திலுள்ள மதுரங்குளி தொடுவா பிரதான வீதியிலுள்ள கடயாமோட்டை என்னும் கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களால் 'இடம் பெயர்ந்த முஸ்லீம் அபிவிருத்தி அலகு' [டி.எம்.டி.யு] என்னும் பெயர் கொண்ட சமூகசேவை அமைப்பு 1993.07.26 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அங்கு வரவிருந்த கௌரவ அமைச்சரையும் ஏனைய பிரமுகர்களையும் வரவேற் காத்திருக்கும் மக்கள்.






















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.