Saturday, July 11, 2009

டி.எம்.டி.யு வின் ஆடு வளர்ப்புத்திட்டம்

முந்தல் பிரதேச மிருக பரிபாலன அதிகாரி பஸநாயக்க அவர்கள் ஆடு வளர்ப்பின் மூலம் பெறக்கூடிய நன்மைகள் பற்றி சிங்களத்தில் பேசுவதையும் ,கெயார் புத்தளம் வலயப்பணிப்பாளர் முசாபிர் அவர்கள் தமிழில் கூறுவதையும் காண்கிறீர்கள்.
முந்தல் பிரதிச் செயலாளர் மாலிக் அவர்கள் சமதானத்தின் முக்கியத்துவம் பற்றியும் இத்திட்டத்தின் மூலம் அதனை ஓரளவு செய்யமுடியும் என்பதையும் உரைத்தார்.
திட்ட விளக்கவுரையை டி.எம்.டி.யு. செயலாளர் எம்.எஸ்.மஹ்ருப் வழங்குகின்றார்.
திட்ட ஆரம்ப விழாவிற்கு வருகை தந்த டி.எம்.டி.யு தலைவர் எம்.எஸ்.பரீத். பிரமுகர்கள்:- முந்தல் பிரதேச செயலாளர் மாலிக், கெயாதிட்ட புத்தளம் வலயப் பணிப்பாளர் முசாபிர், முந்தல் பிரதிச் மிருக் பரிபாலன அதிகாரி பஸ்நயக்க ,மற்றும் உதவி அதிகாரி ஆகியோர் .
கெயார் சர்வதேச நிறுவனத்தின் ரெபிட் 2 இன் [2001] திட்டத்துக்கமைவாக டி.எம்.டி.யு நிறுவனம் ஸ்ரீலங்கா ,புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொத்தாந்தீவு , கட்டைக்காடு, ரஹ்மத்புரம் ஆகிய கிரமங்களை உள்ளடக்கியதான இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர், முஸ்லிம்கள் ,தமிழர்கள், சிங்களவர்கள் உள்ளிட்ட முப்பத்தேழு குடும்பங்கள் இத்திட்டத்தி்ல் உள்வாங்கப்பட்டனர். இத்திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கெயார் சர்வதேச நிருவனத்தினூடாக 484888,00 வழங்கியது. இது ஒரு சமாதானத்திட்டமாகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.