Saturday, November 21, 2015

1999ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த ”முஸ்லிம்” வாக்காளர் தொகை.

1990ம் ஆண்டு வடமாகாண முஸ்லி்கள் புலிகளினால் பலவந்தமாக வெளி யேற்றிய  பின்னர் வடமாகாண முஸ்லிம் தாம் வாழ்ந்த அகதிகள் முகாம் பிரதேசத்திலுள்ள பிரதான இடங்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைத்து வாக்களிக்கும் வசதி செய்து தரப்பட்டது.1994ம் ஆண்டு பாராளுமன்றத் பொதத்  தேர்தல் தொடக்கம் இவ்வசதி ஏற்படுத்தித் தரப் பட்டது. எமது வாக்காளர் பதிவுகள் ஒவ்வொரு வருடமும் எமது சொந்தப் பிரதேசங்களுக்கு எம்மால் பூர்த்தி செய்யப்பட்ட வடிவங்கள் உரிய அரச அதிகாரிகளினால் அனுப்பப் பட்டு எமது வாக்குகள் வருடாவருடம் புதுப்பிக் கப்பட்டு வந்தது.
எமது வயது வந்த பிள்ளைக ளை புதிதாககச் சேர்த்துக் கொள்வதற்கான படிவங்கள் பூர்த்தி செய்து எமது பிர தேசங்களுக்கு அனுப்பி வைக்கின்ற போதிலும் அவை நிராகரிக்கப்படுவது வழக் கமாகும். .இதே போன்று  நாளடைவில் ஏற்கனவே உள்ள பலரது பெயர் களும்  எமது வாக்கா ளர் இடாப்பிலிருந்து படிப் படி யாக அகற்றப் பட்டு வந்துள்ளது..ஆயினும் அப்பிரதேசங்களுக்குபோய்வருவதில் இருந்த தடைகள காரணமாக  எமது பெயர்களை குறித்த வாக்காளர் இடாப்பிலிருந்து  நீக்கப் படுவதைத் தடுக்கவோ அல்லது புதிய பெயர்களை சேர்க்கவோ முடியாமல் போனது. .அங்கிருந்து வரும் வாக்காளர் இடாப்பில் பெயருள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்களை வழங்கி தமது வாக்குகளை போடுவது வழக்கமாகும்.1999 ம் ஆணடு வாக்காளர் இடாப்பில் இக் குறைபாடுகள் முழுமையாகக் காணப்பட்டது. உதாரணத்திற்காக எனது குடும்ப வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டால் நீராவிப்பிட்டி கிழக்கு 11/இ/47/13ம் பக்கத்தினில் வீட்டிலக்கம்  130 ல் முஹம்மது சுல்தான் பரீத்-625ம், பரீத் வானுான் 626 ம் ஆக  இ ரண்டு வாக்குகள் மட்டும் வந்தது. எனது மகன் 1978ம் ஆண்டு பிறந்தவராகும். 1999ம் ஆண்டு அவரது வயது 21 ஆகும் ஆனால் அவரது பெயர் சேர்க்க விட வில்லை.இதே போன்று ஆயிரக்கணக்கானவர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள் ளனர்.( அநியாயம் இழைக்கப்பட்டது)
எமது வாக்குகள் 2013ம் ஆண்டு வரை பதியப்பட்டே வந்தது.2013ம் முல்லைத் தீவில் குடியில்லாதவரகளது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.அதற்கான மீள் முறையீடு செயதவர்களுககு கடந்த 2015.10.05ம் திகதி குறித்த நபர்களை முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டது.ஆயினும் அது எமக்கு சாதகமான முடிவாக இல்லை.அங்கு நாம் வாழும் பிரதேசத்தில் பதிவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

குறிப்பாக புத்தளத்தில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டது.இதில் எமக்கு சில அதிகார்களது நடவடிக்கைகள்  சந்தேகத்தை ஏற்படுத்தியது்.எனவே இது சார்பாக நேரடியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கும், ஏனைய அரச அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமாக தெரிவிக்கப் பட்டுள்ளது.தேர்தல் சட்டம் தெரியாமல் நாமில்லை.எமக்கு தேர்தல் சட்டம் படிப்பிக்க வேண்டிய தேவையுமில்லை.
 பொறுப்பான முறையில் மீள் குடியமர்வுக்காக வீடு.வசதிகளுடன் காணியற்ற வர்களுக்கான காணி,வீடு என்பன வழங்கி முறையான மீள் குடியமர்வு செய்தி ருந்தால் எமது வாக்குப் பலம் சுமார் எட்டாயிரத்தை கடந்திருக்கும்.இத் தோகையை   சிலர்தமக்கு  சாதகமாகவும் அமைக்க முயலுகின்றனர். சில்ர். தமக்குப் பாதகமாக ஆகிவிடும் எனப் பயம் கொள்கின்றனர்.அணமையில்  கரைதுறைப்பற்று பிரதேச சபை சார்பான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அதிலும் சுயநலமாக அத் தரப்பு செயற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

எனவே அரசாங்கம் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு ஏற்கனவே காணிக் கந்சேரி வைத்து தெரிவு செய்யப்பட்ட காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்கி,வீடும்,ஏனைய அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தி முஸ்லிம் களை முறையாக மீளக்குடியமர்த்தும் வரை வட்டார எல்லை  பிரிப்பை நடைமறைப்படுத்தக் கூடாதெனவும், அதே போல் முல்லைத்தீவு தழிழர்களை  வெடிபொருட்களைக் காரணம் காட்டி கடந்த இரண்டு முறைகள்  கரைதுறைப் பற்று  பிரதேச சபை பிரதேச சபை தேர்தல் நிறுத்தப்பட்டது. அதுபோல் முல்லைத்தீவு  முஸ்லிம்கள் பூரணமாக மீள் குடியமர்ந்த பின்னர் கரைதுறைப் பற்று பிரதேச சபை பிரதேச சபைக்கான தேர்தலை நடாத்த ஏற்பாடு செய்யுமாறு கௌரவ தேர்தல் ஆணையாளரை முல்லைத்தீவு முஸ்லிம்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.-முல்லைத்தீவு சுல்தாப் பரீத்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.