Sunday, November 15, 2015

COLOMBO MIRROR என்னும பெயரையுடைய வலைத்தளம்தில் வெளியான முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் சார்பான ஆய்வுக் கட்டுரைக்கு எனனால தரப்பட்ட மறுப்பறிக்கை அங்கிருந்து நீக்கப்பட்டதால் அதை மீள் பிரசுரம் செய்யப்படு்டது.தமிழ் தேசிய கூட்டமைபபின் மாகாணசபை முல்லைத்தீவு மாவட்டம் சார்பான பிரதிநிதி துரைராசா ரவிகரன் அவர்கள்

 என்னுடைய பெயர் எம்.எஸ்.பரீத்,எனது வயது அறுபத்தி இரண்டை. கடந்துள்ளது.(1953ம் ஆண்டு தண்ணீரூற்றில் பிறந்த) நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலை ஊழியராக 1984ல் சேர்த்துக் கொள்ளப்பட்டவன் கரைதுறைப்பற்று லநோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் 1979-1981 வரை பணிப்பாளர்சபை உபதலைவராக இருந்துள்ளேன்.விவசாயத்திலும் ஈடுபாடு கொணடவன்.மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின்  கிராமமான கள்ளப்பாட்டில் எமது நிர்வாக்காலத்தில் முதலாவது கூட்டுறவுச்சங்கக் கிளையினை தலைவர் சு.ஜெயம் மற்றும் நான் கேட்டுக் கொண்டதிற்கிணங்க  புலிகளால் சுட்டுக்கொவல்லப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு ஞானச்சந்திரன் அவர்களால் தொடங்கி திறந்து வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
 
 இங்கு முள்ளியவளை எனக் குறிப்ப்பிடப்படும் இடமானது மாறுபாடானது.வன்னியன் மேடு என்ற இடமானது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுலுள்ள கணுக்கேணி கிராம சேவையாளர் பிரிவினுள் முன்பு காணப்பட்டது. இப்போது குமாரபுரம் கிராம சேவையாளர் பகுதிக்கு உட்பட்டுள்ளது.இது தண்ணீரூற்று 4ம் கடடை சந்தியிலிருந்து குமுழமுனை செல்லும் பிரதான வீதியில் மூன்றாவது மைல் கல் தொடக்கம் ஐந்தாவது மைல் கல் வரை உள்ளிட்ட பகுதியாக கருதலாம்  இந்தப் பகுதயில் கிழக்குப்பக்கமாக அதிக அளவிலான தமிழ் சகோதரர்கள் வாழுகின்றனர். இவர்களுள் கனிசமான அளவு முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்தது  சிறப்பம்சம். இந்த எல்லைப்பிரதேசத்தலுள் கணுக்கேணிக்குளம்,கஞ்சாப்பிலவு,முறிப்பு, கொத்தியாகும்பம், வன்னியன்மேடு என்று சில கிராமங்கள் உண்டு.உண்டென் பதைவிட உருவாக்கப்பட்டது எனலாம்..1971ம் ஆண்டு அங்கு வாழ்ந்த சொற்ப தமிழ் சகோதரர்களே முஸ்லிம்களை அழைத்து வாங்க நீங்களும் காடுகளை வெட்டி தோட்டங்கள் செய்யுமாறு ஆலோசனையாளர்களாகவும்,வழி காட்டி களாகவும் இருந்தனர்.அதில் அண்ணர்களான வல்லிபுரம், துரையப்பா, சங்கரலிங்கம், கங்காணியார்,வைத்திலிங்கம்,காவடி பொன்னையா, ஸ்பீக்கர் பொன்னையா,ட்ராக்டர் சுந்தரம் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.இவர்களே தண்ணீரூற்று,நீராவிப்பிட்டி மற்றும் ஹிஜ்ராபுரம்  ஆகிய கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை அழைத்துச் சென்று காடுகளுக்கு லைன்வைத்து  (எல்லை) அதாவது அளந்து நான்கு ஏக்கர் வீதம் அரச காணிகளை வெட்டினோம்.(நல்ல வேளை அந்தக்காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபை உறுப்பினன் ரவிகரன் போன்றவர்கள் எமது பிதேசத்தில் இல்லை.என்பது இன்று மகிழ்சிகரமாகவுள்ளது) அதில் வாழை, நிலக்கடலை, மரவெள்ளி, ப்ப்பாசி,போன்ற சிறுதாளியங்களை உற்ப்பத்தி செய்து முன்னேறினோம். முன்னர் குறித்த கங்காணி மட்டும் இப்பவும் குறித்த பிரதேசத்தில் வாழுகின்றார்.எமது இவ்வமைவிடம் உப்புமாவெளிக்கும் வன்னியன் மேட்டிற்க்கும் மத்தியில் அமைந்துள்ளது. 1981ம் ஆண்டு முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் திரு வி.சிங்காரவேலு அவர்களினால் சட்ட பூர்வமான காணிக் கச்சேரி வைத்து தகுதியானவர்களுக்கு இரண்டு எக்கரும்,சிலருக்கு மூன்று ஏக்கரும் வழங்கப்பட்டது.இதேவேளை முன்னமே பல முஸ்லிம்களுக்கு குளத்தின் கரையோரமாக 3ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டது.அதே வேளை வன்னியன் மேட்டில் குடியிருப்பக்காணிகள் அரை ஏக்கர் வீதம் வழங்கப்பட்டு அதில் அவர்கள் குடியேறி வாழ்ந்து வந்தார்கள்.பின் அங்குள் நீர்ப்பிரச்சினை காரணமாகவும்,ஆயுத்தாரிகளின் நடமாட்டம் மற்றும் தொந்தரவு காரணமாகவும் 1984ம் ஆணடு இலங்கை இராணுவ அறிவித்தல் பிரகாரமும் அவ்விடத்தை விட்டும் இடம் பெயர்ந்து வாழ்ந்தனர். எமது காணியில் உள்ள மா,பலா பழங்களுக்கு புகழ் பெற்றது.சுல்தான் காக்கா காணியென்றால் அவ்வளவு மதிப்பு எமது காணியில் உள்ள மாமரம் இப்போது  சுமார்10, அடி சுற்றளவு கொண்டது. இரண்டு மூன்று பேர்சரஸ் பரப்பளவைக் கொண்டது சுமார் 22முழம் ஆழமுடைய கிணறும் வெட்டி கட்டப்பட்டுள்ளதை காணலாம். நான் 1971ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரை (இந்திய இராணுவம் கெடிபிடி காரணமாக புத்தளம் இடம் பெயரும்வரை) கொத்தியகும்பத்தில் கூட்டுக் குடும்பங்களாக எனது பெற்றோர்,சகோதரர், சகோதரிகளுடன் (குடும்பம்) வாழ்ந்தவன். இப்பிர தேசத்தில் எமது வீட்டில்தான சிறிய கடை இருந்தது. எங்களது வீட்டில் மட்டும்தான தொலைக்காட்சி இருந்த்து.சுற்றுவட்டாரத் திலிருந்த தமிழ், முஸ்லிம்கள் எமது தோட்டத்தை நோக்கியே தமது தேவைக்காக வருவார்கள். (சுமார் ஒரு மைல் சுற்று வட்டமாகும்.) முக்கிய தேவைகளை மூன்று மைல் கடந்துதான் தண்ணீரூற்றில் பூர்த்தி செய்ய வேண்டும்.நாம் 1990ம் ஆண்டு புலிகளால் துரத்தப்பட்ட பின்பு புலிகளின் தளபதி பால்ராஜ் என்பவரின் குடும்பமெனக் கூறிய கொக்குத்தொடுவாய் சு.சுந்தரம் பிள்ளை (மாவீர்ர் குடும்பம்) அங்கு வாழ்ந்தது.இவர்கள் இங்கு வடியன் காய்ச்சி வியாபாரம் செய்த்துடன் எமது மா,பலா மரங்களின் வருடாந்தம் சுமார் 1 20.000.00 ரூபா பெறுமதியான வருமானத்தைப் பெற்றிருக்கலாம்.எமது காணியை அவர்களும் எல்லைகள் போட்டு தமது பிள்ளைகளுக்கு சீதனமாக்க் கொடுத்த்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.நாம் காணி முழுமையாக துப்பரவு செய்ய 2011ம் ஆண்டு வந்த பொது அவர்கள் விரும்பமிண்மை காரணமாகவே வெறியேற்றினோம்.2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் விவசாயம் செய்து நட்டம ஏற்பட்டதால் தொழிலை கை விட்டு புத்தளம் திரும்பினோம்.இப்போது இப்பிரதேசத்தில் இந்திய வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்ள்ளது இதுகூட இந்த அடாவடிகத்தன கும்பலுக்கு கண்ணுக்குத் தெரியாதது புதுமையாகும்.1973ம் ஆண்டளவில் வன்னியன் மேட்டிற்கு அருகாமையில் மீண்டும்  நான்கு ஏக்கர்   காடுவெட்டி சுத்தப்படுத்தி விவசாயம் செய்தோம்.அப்போது தடை ஏதுமில்லை. அப்போதைய தமிழர் நல்லுள்ளம் கோண்டவர்கள்.காட்டிக் கொடுக்கவும் மாட்டார்கள்.
1990ல் புலிகள் துரத்தும் போது சுமார் 1080 முஸ்லிம் குடும்பங்கள் முல்லைத்தீவிலிருந்து வெளியேறினர்.இடம் பெயர்ந்த இந்த இருபத்தி இரண்டு வருட காலத்தில் வண்முறையால் இறப்பு,வெளிநாடுகளுக்கு தப்பி ஓடாமை,ஆயுதமேந்தி சாகாமை,இடம் பெயந்த இடத்தில் மணமகன், மணமகள் எடுத்த்தன் விளைவாகவும் முஸ்லிம் குடும்பங்கள்  பண்மடங் காகியதில் அதிசயமில்லை.மற்றும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர் போன்று 30-40 வயதில் திருமணம் செய்வதுமில்லை.குழந்தைகளை 1,2 உடன் நிறுத்துவதுமில்லை.முஸ்லிம்கள் 16-23வயதிற்குள் மணமுடிப்பார்கள். 1,தொடக்கம் 9 வரை குழந்தைகளைப் பெறுவார்கள். சில வேளை 16 யும் தாண்டியுள்ளது.காரணம் எமக்கும்,குழந்தைகளுக்கும் உணவளிக்கும் பொறுப்பை நாம் வணங்கும் கடவுள்(அள்ளாஹ்) ஏற்றுள்ளான். இவற்றைப் பார்த்து யாரும் (மற்ற மதத்தினர்) பொறாமை கொள்ளத் தேவையில்லை. மேலும் முஸ்லிம் ஆண் ஒருவர் சமகாலத்தில நான்கு பெண்களைத் திருமணம் முடித்து குடும்பம் நடத்தலாம். இவை யெல்லாம் முஸ்லிம் களுக்கு ப்ளஸ் பொயிண்ட்.
காணி ஆணையாளர் நாயத்தினால் 2013-1ம் இலக்க சுற்று நிரூபமொன்று வடக்கு,கிழக்கு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்ப்ப்பட்டது. அதற்கமைவாகவே கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரும் காணிக் கச்சேரிக்கான விண்ணப்பங்களைக் கோரி ஒன்றிற்கு மேற்பட்ட காணிக் கச்சேரிகளை நடாத்தி இருந்தார் அவர் யாருக்கும் யெஸ் சேர் போட வில்லை.மனிதாபிமான அவரது பணியை செய்தார்.புத்தளத்தற்கு போகும் போது ஒரு,சில ஓட்டை வாகனங்களுடன துரத்தப்பட்ட முஸ்லிம்கள் நாற்றுக்கணக்கான வாகனங்களில் (பேருந்துகள்,ஹையஸ்வேன்கள், டாடாபடிகள், முச்சக்கர வண்டிகள்,ஊந்துருளிகள்,பஜீறோ போன்ற வாகனங்களில் வந்திறங்கிய முஸ்லிம்களைப் பார்த்த்தும் பொறாமை தலைக்கேறியது.(இங்கு ஒன்றைக் சுருக்கமாக் கூறவேண்டும்.இப்போது முல்லைத்தீவில் 1990க்கு முன்னர்  எம்முடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் சகோதர்ர்கள் இல்லை.(குறைவு) மாறாக்க யாழ்பாணம்,மட்டக்களப்பு. திருகோணமலை ,மலையகம் போன்ற பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் அதிகம்.பிரச்சினை முற்றும் போது இராணுவம் மற்றும் பொலீசாரின் கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் குடும்பமாக இடம் பெயர்ந்து முல்லைத்தீவில் வாழுகின்றார்கள் அப்போதே அவர்களுக்கு காணிப் பங்கீடுகளுக்காக பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் இனறு பெருமளவிலான வியாபாரம்,மீன்பிடி போன்ற தொழில்கள் அதிகாரம் இவர்களிடமே காணப்படுகிறது.இவர்களுக்கு வரலாறு தெரியாது.முன்பு தோட்டக்காட்டான் என்று சம்பளமில்லாமல் வேலை வாங்கப்பட்டவர்கள் இப்போது மலையகத் தமிழ்ர் எனச் செல்லமாக அழைக்கின்றனர்அன்று பசிக்காக தோட்டத்தில் வாழைக்காய பறித்து அவித்து திண்ற குற்றத்திற்காக இரும்புக்கோல் மூலம் குறி சுடப்பட்வர்களின் வாரிசுகள் இன்று பாராளுமன்றத் தேர்தலில் போடியிட வெற்றிலை வைத்து அழைத்து  நிறுத்தும் நிலைமை காணப்படுகிறது.உரிமை கேட்டது யாரோ ,உரிமை கிடைத்த்து யாருக்கோ. (நல்ல விடயம்) மீண்டும் விட்ட இடத்திலிருந்து இப்பொறாமை காரணமான காணிக்கச்சேரிக்கு மதிப்பிலிலாமல் போனது.ஒரு சாணிக்கச்சேரி நடாத்தப்படும் போது பிரதேச செயலகத்தை நோக்கி மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஊடக்கவியலாளருடன் சென்று தமது சமூகத்திற்கும் காணி கோரியதையறிந்து அவரது வீட்டில் நான் அவரிடம் நியாயம் கேட்டபோடு அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளருக்கு மட்டும் காணி வழங்கப்புடுவதாகவும்,முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர் புறக்கணிக்கப் படுவதாகவும் தனக்கு அறியக்கிடைத்த்தால்தான் தான் அங்கு போனதாகவும் கூறினார்.அப்படியென்றால் இதுவரை இவரால் அனைவருக்கும் (றிசாத்,ஹக்கீம் ஆதரவாளர்) காணி வழங்க முடியாமல் போனது ஏன்.?இந்த இடைப்பட்ட்ட காலத்தில் தன்னினத்திற்கு இரகசிமாக காணிகள் வழங்கப் பட்டுள்ளது என்ற செய்தி பொய்யா?சொத்துக்களை பறித்து துரத்தப்பட்டவர் களின் சகல பதிவுகளும் புத்தளம்,குருனாகல்,கொழும்பு மாவட்டத்திலேயே உள்ளது. எனது பிள்ளையின் பிறப்புச்சான்றிதழில் புத்தளம் பிறந்தது என்றுதான குறிப்பிடப் பட்டுள்ளது.அப்படியாயின் எனது பிள்ளைகள் புத்தளமா? அப்படியாயின் நாடுகடந்த தமிழீழம்தெரிவு சரியானதா? மேலும் மேல் நாட்டிலுள்ளவ்களுக்கு முல்லைத்தீவில் வாக்களிக்கும் உரிமைவழங்கப் பட்டுள்ளது. முல்லைத்தீவில் வசிக்காத முல்லைத்தீவு முஸ்விம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதுவாஜனநாயகம் எங்களுக்கு உள்ளது றிசாத்தும்,மஸ்தானும் உங்களுக்குள்ள அனைத்து அதிகாரிகளையும், அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு சிறுபாண்மை முஸலிம்களை விரட்டுவதன் நோக்கம்தான் என்னமீள் குடியேற்றமென்பது அச்சம் காரணமாக, உயிர் அச்சுறுத்தல காரணமாகஒருவர் எங்கிருந்து புறப்பட்டாரோ அந்த இடத்தில் மீள்குடியமரக் கூடிய சூழல் இருந்தால் அவர்கள் அங்குதான் மீளக் குடியமர்த்த வேண்டும்.அப்படியானால் 1990க்கு எங்கிருந்து முல்லைத்தீவுக்கு வந்தார்களோ அவர்களை அங்கு அனுப்ப இநத மாகாசபை உறுப்பினர்தயாரா? இவர்களின் காணி வழங்கள் சார்பான விடயம் இப்படி இருக்க முறிப்புப்பிரதேசத்திலுள்ள காணிச் சொந்தக் காரர்கள் தமது காணிகளை குறித்த திகதிக்குள் வெட்டித்துப்பரவு செய்யாவிட்டால் உரியவர் களின் காணி உத்தரவுப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் என் பிரதேச செயலாளர் அறிவித்த்தின பின்னர்தான் முஸ்லிம்கள் காடு வெட்டத் தொடங் கினார்கள்.இதுவும் இவருக்கு தெரியாமல் போனது எப்படி?காடு என்பது முதல்த்தரக்காடாக நாம்பார்ப்பது.அங்கு பெருமரங்கள் அதாவது பெறுமதியான பாலை,முதிரை,யாவரணை போன்ற மரங்களும் அதன் கீழ் சிறு,சிறு மரங்களும் காணப்படும்.அதை அழிப்பதாயின் முதலில் கீழ்காடு என்னும் சிறு மரங்களையும்,செடிகளையும் வெட்ட வேண்டும் பின் பெரிய மரங்க்களை தறித்து அதன் கிளைகளை வெட்டி அமுக்கி ஒரு மாதமளவில் காய்ந்த பின்னர்தான் தீயிடவேண்டும். இப்பொது வெட்டப்பட்டதோ சுமார் 25 வருடங்கள் மக்கள் வசிக்காமல் வளர்ந்து மந்து என்று கூறும் பற்றைக் காடுகள்தான். கூகூள் மூலம் எக்காடுகளைபார்த்தாலும் பெருங்காடாகத்தான் தெரியும்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் எப்போதும் கூட்டாகத்தான் வாழ்பவர்கள். அதற்காகத்தான் அமைச்சர் றிசாத் அவர்களின் ஆதரவுடன் ஒருகிராமத்தை உருவாக்க முயன்றார்கள்.அதற்கும் தமிழ் தேசிய கூட்டமைபு அரசியல் வாதிகளே தடைக்கல்லையும் போட்டார்கள்.எனவேதான் முஸ்லிம்கள் வன்னியன் மேட்டை முஸ்லிம் தனவந்தர்களின் உதவியோடு அபிவிருத்தி செய்ய சில சமூக ஆர்வலர்கள் முன் வந்து அதை செயற் படத்தினார்கள். அதிலும் இவர்களுக்கு பொறாமை தாங்க முடியவில்லை.இது எல்லாம் நடக்குமென எமது புனித திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்து.
நான் இதை சவாலாக விடுகின்றேன். நீங்கள் தமிழர்தான் என்றால் 1990ம்  ஆண்டிற்கு முன்னர்  முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளராகவுள்ள குடும்பத்தலைவர்களின் வாரிசுகள் தவிர்ந்தவர்களை முல்லைத்தீவில் மீளகுடியமரமுடியாமல் செய்வீர்களா? நாம் தயார். அப்படியாயின் ஒரே மேசையில்  ஒன்றிணைந்து பேசுவோம்.தமிழர்களினதும்,முஸ்லிம்களினதும் திருட்டு மீள் குடியேற்றத்தையும்,ஊழலையும் தடுப்போம். மாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களே தயாரா.
நீங்களே வர்ணிக்கும் காட்பொட மாகாணசனையில்  இருக்கும் போதே எமக்கு இவ்வளவு தொல்லைகளையும்,மன உழைச்சலையும், இடையூறு களையும்  தருகிறீர்களென்றால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரமும் இருந்தால் எம்பாடு எப்படியிருக்கும். கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடமாவுள்ளது. (1990க்கு முன்னரான காலம் போல் இனவாத மின்றி இணைந்து வாழ வந்த எம்மை நீங்கள் பிரித்து வைத்தப் பார்பதினால் இதிலும் நாம யோசிக்க வேண்டும்.)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.