Sunday, November 22, 2015

முல்லைத்தீவு மாவட்ட இனவாத அரசியல் வாதிகளுக்கும்,பொது மக்களுக்குமான தெளிவைத் தரும் நோக்கில் சில நிமிடங்கள்.

 முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவன் நான் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்  பட்டுள்ளேன். எனது முப்பத் தேழாவது வயதில் எமது சமூகத்திற்கு இக் கொடுமை ஏற்பட்டதை எண்ணி மனம் வருந்தாத நாளில்லை எனலாம். சந்தோசமாக மனைவி, குழந்தைகளு டனும் ஏனைய உறவுகளுடனும் வாழ (இருக்க) வேண்டிய வயதென இக் காலத்தை குறிப்பிடலாம் ஆனால் என்னைவிட இளைமையாான இளைஞர், யுவதிகள் கூட தமது இணையைப் பிரிந்து வாழ வேண்டிய முகாமமைப்பு.காணப் பட்டது. நீங்கள் 2009ம் ஆண்டு வவுனியா
முகாம்களில் பட்ட இன்னல்களை விட குறைவாக இருந்த போதிலும் நீடித்த காலமாதலால் எமது இளமைக் காலம் அநியாயமாக தொலைக்கப்பட்டு விட்டதை எண்ணி என்னைப் போல் பலரும் வருந்துவதையும் நானறிவேன். இதன் காரணமாக பலர் மனநிலை பாதிக்கப் பட்னர்.இதனால் பக்கவாத நோய் ஏற்பட்டு பலரும்  அகதி முகாம் பகுதி மண்ணில் நல்லடக்கமாகி விட்டனர் இன்னும் பலர் மன உழைச்சல். பொருளாதாரப் பிரசிசினை காரணமாக இரத்த அழுத்த நோய்க்கும் ஆளாகியுள்ளனர்.பலர் இதனால் சலரோக (சீனி) நோயாளராக துன்பப்படுவதையும் அது முற்றி சிறு நீரகம் பாதிக்கப் பட்டும் இறந்துள்ளது துன்பமான செய்தியாகும்.2009ன் முள்ளிவாய்கால் யுத்தத்தில் சிக்கிவர்களுக்கு மட்டுமல்லாது,யுத்தத்தில் பாதிக்கப்படாத யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின்  உறவுகளுக்கும் உள நோய் ஏற்பட்டிருப்பதை நாமறிவோம்.இது எமது சமூகத்திலும் அகதி வாழ்வில்  நடந்த இழிவான அல்லது ஜீரணிக்க முடியாத சிலபல காரணங்களால் எமது சமூகத்தின ருக்கும்  உளவளம் சார்பான பயிற்சி தேவையென்பதை நனறிவேன்.
நாம் பட்ட நெருடல்கள் காரணமாக எம்மைத் துரத்தியவர்கள்,அதை வேடிக்கை பார்தவர்கள,பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவர்களை எண்ணி  உங்கள் மீது கொபமேற்பட்டாலு்ம்.உங்களிள் விரல் வி்டெண்ணக் கூடிய நண்பர்கள் எம் பிரிவினால் மனம் துவண்டு கண்ணீர் சிந்தியதை எண்ணி பொறுமை காத்தோம்.அதை விட மேலாக நாம் வழிபடும் கடவுள் (அள்ளாஹ்) ஏற்கனவே எமது நபிக்கூடாக புனித அல்கூர்ஆனில்
2:214   اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏ 
2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) 

ஓர் இறைவழிபாடு கொண்டுள்ள நாம் மேற் கூறிய இறை கூற்றினை மனதில் நிறுத்தி.அமைதியடைந்தோம். மேலும் மறறோரிடத்தில் படைப்பாளன் (அள்ளாஹ்) இப்படிக் கூறியுள்ளான்.
16:41   وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَـنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً‌  ؕ وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ‏ 
16:41. கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது;
இதனடிப்படையில் நம்பி அகதி வாழ்வை பல  இடர்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்த எமக்கு பல வருடங்களின் பின்னர் படைப்பாளன் தான் எமக்களித்த வாக்கினை நிறைவேற்றினான். இதனை நீங்கள் நேரடியாகப் பார்த்தீர்கள்..

முல்லைத்தீவிலிருந்து துரத்தப்பபட்ட நாம் சுமார் அறுபது மைல்கள் துாரத்தை மூன்று பகல் மூன்று  இரவுகளாகக் கடந்து தேவையான நேரத்தில் ஓய்வெடுத்தும்  செர்ந்தோம்.

ஆனால் யுத்தம் முடிந்து நமது கிராமங்களுக்கு வரும் போது நுாற்றுக் கணக்கான வாகனங்களில் நமது சகோதரர்கள் வந்ததைப் பார்த்து  உங்களில் பலர் பொறாமைப் பட்டதையும் அறிந்தோம்.

3:19   اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏ 
3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித் தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்
ஆக முன் 4ட்டியே  எமக்கு உங்களைப்பற்றி நாம் வணங்கும் இறைவன் கூறியதினால் உங்கள் பொறமையைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
முஸ்லிகளின் உடமைகளைப் பறித்துக் கொண்டு துரத்தினால் அவர்களின் ஆத்திர மேம்பாட்டினால் வடக்கிற்கு வெளியில் வாழும் தமிழர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டு அவர்களை வடக்கை நோக்கி துரத்துவார்கள் அதனால் இலேசாக தமிழீழம் கிடைக்குமென்று எண்ணியிருப்பார்கள் புலிகள்  அப்படியான துரோகிகள் இல்லை யென்பதனை நாம்  புலிகளுக்கும், இனவாதிகளான உங்களுக்கும் நிரூபித்தோம்.
2002ம் ஆண்டு புலிகளுக்கும்,அரசிற்கு்ம்  இடையே ஏற்படுத்தப்பட்ட சமாதான காலத்தில் எமது மண்ணை பார்க்க வந்த போது எம்முடன் அன்னியொன்னி யமாக வாழ்ந்து பழகிய முல்லைத்தீவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சகோதரர்கள் எம்மைக் கட்டியணைத்து வரவேற்று, விருந்தோம்பி,இரவு, பகல் தங்குவதறதற்கான சகல வசதி வாய்ப்புக்களையும் செய்த அன்புள்ளங்க ளையும் மறக்க முடியாது.

நானு்ம் அங்கு வந்து நண்பர்களைப் பார்த்து விட்டு வாகனத்தில் முன் இருக்கையிலிருந்து வற்றாப்பளைப் பகுதிய பார்கச் சென்றேன்.எதிர் பாராமர் என்னுடன் பணியாற்றிய குடும்ப சுகாதாரப் பணியாளர் ஒருவரின் கணவரான திரு தங்கத்துரை என்னைக் கண்டுவிட்டார.நா்ன் எதிர் பாராவண்ணம் ஓடி வந்து வாகனத்திலிருந்த என்னை கழுத்தைக் கட்டி கன்னத்தில் முகர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.நான் அவர்மீது கொண்ட அன்பை விட அதிக அன்பை அவர் என்மீது கொண்டிருந்ததை எண்ணி வியந்து போனேன். அவர் இப்போது உயிருடன் இல்லை்  யுத்தம் முடிவுற்று மீளக்குடியமர்விற்குப் பின் இறந்து விட்டார்.அவரை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். இத்தனைக்கும மத்தியில் அவர் உங்களால் இழிசாதியெனப் பரிந்துரைக் கப்பட்டவர்
முஸ்லிம்களுக்கு இடையில் சாதி, இல்லையென்பதை நீங்களும் அறிவீர்கள். ஆனால் சுத்தமானவர்களை நாம் நேசிப்போம்.அரவணைப்போம். இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் இறை நம்பிக்கையும், பாதியளவு சுத்தமுமாகும். உடல, உள்ளம்,உடை,உறையுள்,உணவு என சுத்தத்தை பிரித்துக் குறிப்பிடலாம்.

நீங்கள் எம்மை துரத்தினாலும் நா்ம் அதை மறந்து உங்கள் உரிமைக்காக  அல்லது  எங்கள் உரிமைகளுக்காக அகதி முகாம் வாழ்க்கையில் இருநவாறு பல கூட்டங்களில் குரல் கொடத்துள்ளோம்.இப்போதைக்கு அதற்கான சிறு ஆதாரத்தையும் நான் உங்கள் முன் வைக்கின்றேன்.புரிந்து கொண்டால் சரி,புரிந்தும் புரியாமலிருப்பவனை ஒன்றும் செய்ய முடியாது.            முடிந்தால் மீண்டும் தொடரலாம். (இன்ஷா அள்ளாஹ் ( கடவுள் நாடினால்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.