Friday, December 3, 2010

முஸ்லிம் காங்கிறஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நுர்ர்தீன் மஸூர் அவர்கள் காலமானார்கள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நூர்தீன் மசூர் அவர்கள் 2010.12.02ம் திகதி அதிகாலை கொழும்பில் காலமானார்.அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை புத்தளம் நாகவில்லு ஜும்மா பள்ளிவாசல் மையவாடி யில் இடம்பெற்றது.

கொழும்பில் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப் பட்டபோதிலும், மன்னாரிலுள்ள மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாஸா நல்லடக்கம் புத்தளத்திற்கு மாற்றப்பட்டது.

அன்னாரின் பிறப்பிடமான மன்னார், எருக்கலம்பிட்டியில் வாழ்ந்த மக்கள் பலர் புத்தளம் நாகவில்லு பகுதியில் வசித்துவருகிறார்கள். இவர்களின் வேண்டு கோளுக்கமைய நூர்தீன் மசூரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 8.40 மணியளவில் புத்தளம் நாகவில்லுவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான பௌஸி, ரிஷாட் பதியுதீன் உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அஞ்சலி உரையில், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் எமது கட்சியின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்த ஒரு இளம் போராளி. அத்தகைய ஒரு இளம் உறுப்பினரை நாம் இன்று இழந்து தவிக்கின்றோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மர்ஹூம் நுர்ர்தீன் மஸூர் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவருக்கு சொர்க்கத்தை கொடுக்கவேண்டுமென அல்லாஹ்விடமே முஸ்லிம் அகதி வேண்டுகின்றான்.அந்நாரின் மனைவி,பிள்ளைகளின்,மற்றும் குடும்பத் தினர்களின் துக்கத்திலும் “முஸ்லிம் அகதி”யும் இணைந்து கொள்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.