Wednesday, December 1, 2010

முல்லைத்தீவு மாவட்டமுஸ்லிம்கள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக அங்குள்ள ஏனைய சமூகத்தினர் அதிர்ப்தியடைந்துள்ளனர். பகுதி-2


மாடு அறுத்தலும்,கடத்துதலும்
மேற்காட்டிய தலைப்பில் ஏற்கனவே தமிழ் (ஹிந்துக்கள்,கிருஷ்தவர்கள்) முஸ் லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய காணிசார்பான விடயத்தை தந்திருந்தேன்.அதுபோன்ற செயற்பாடான மாடுசார்பான சில விடயங்களையும் முஸ்லிம் அகதி ஆராய விரும்புகிறது. முதலாவது அடுத்தவரின பொருட்களை அபகரிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதனை ஏற்கனவே ஒரு இடுகை யில்வலியுறுத்தியிருந்தேன்.அப்படிச்செய்வது“ஹறாம்”எனஇஸ்லாம்கூறுகிறது. அதாவது தடைசெய்யப்பட்டது. இரண்டாவது அல்லாஹ்வின் பெயலைச் சொல்லி அறுக்கப்படாத அல்லது தானாக இறந்த மிருகத்தின் மாமிசத்தை உண்ப துவும் முஸ்லிம் ஒருவருக்கு ஹறாமாகும். இதன்படி அடுத்தவருக்குச் சொந்த மான மிருகத்தை அல்லாஹவின் பெயரைச்சொல்லி அறுத்தோ,அல்லது அறுக்காம்ல சாப்பிடுவதும் ஹறாம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியான இறைச்சியென அறிந்து கொண்டும் அதைப்பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடுவதும் ஹறாம்தான்எனத்தெரிந்த முஸ்லிம்களுடன், உணவுச்சாலை உரிமையாளர்கள் உட்படஅனைவரும் விலைகுறைவு என்பதா லும், கறித் தேவையை நிறைவேற்றவும் இந்த மாமிசத்தை (கள்ளமாட்டு) வாங்கி திருடர் களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்குவதை காணக் கூடியதாவுள்ளது. கொலை செய்வதும்,கொலை செய்ய அல்லது அதை மறைக்க உடந்தையாக விருப்பதும் சமமானகுற்றமேஆகும்.அதுபோல் களவாகமாடு அறுப்பதும் அதன் இறைச்சி யைபணம் கொடுத்துவாங்குவதும் சமமானான குற்றச்செயலாகுமென் பதனை பாவனையாளர்மறந்து செயல்படுகின்றனர். இதன் காரணமாக கள்ளர்கூட்டம் பெருகமேலே குறிப்பிட்டவர்களும் காரணமா கின்றனர்.எனவே முதலில் இப்படியான இறைச்சியெனத் தெரிந்தும் விலை கொடுத்து வாங்கு வததை எச்சமூகத்தினராகவிருந்தாலும் தவிர்ந்து கொளளுதல் வேண்டும்.இதன் மூலம் மாடறுபபை 75 வீதம் கட்டுப்படுத்தலாம். அடுத்து அரசுசட்டப்படியான இறைச்சிக் கடைகளை உரிய காலத்தில் நடாத்த அனுமதிப்பதன் மூலமமும் 15 வீதமான மாடறுப்பைதடுக்கலாம். மிகுதிப்பத்து வீதத்தை சகல சமூகத்தவரும் கண்காணிப்பாகவிருந்து காவல் துறையிகருக்கு தகவல் கொடுப்தன் மூலம் இத்தொழில்செயபவரைஇல்லாமல்செய்யாமென“முஸ்லிம்அகதி” கருதுகின்றது.
முல்லைத்தீவில் கள்ளமாடுகள் அறுப்பதும்,வாங்கி உண்பதுவும் முஸ்லிம் கள்மட்டுமென பேசப்படுவதை முஸ்லிம்அகதி கண்டிக்கிறது.இதை முல்லைத் தீவிலுள்ள ஏனைய சமூகத்தைச்சார்ந்த மனட்சாட்சியடையவர்களும் முஸ்லிம் அகதியிடம் கூறியுள்ளனர். முல்லைத்தீவு,தண்ணீரூற்று என்னுமிடத் தில் மாடு சார்பான தொழிலுடன் தொடர்புடைய முஸ்லிம் நபருடன் மற்றுமொரு நபர் பேசும்போது முஸ்லிம்அகதி அருகில் நின்றுள்ளார்.அவர்கள் பேசியவற்றிலி ருந்து இவர்கள் அந்தஇரவு மாடு அறுக்கப்போவதை உறுதிப்படுத்திக்கொண்ட “முஸ்லிம் அகதி” அரசஅதிகாரியைப்போல் உடையணிந்து காட்சியளித்த அந்த புதியநபரை அணுகி நீங்கள் இந்த ஊரா?யாருயை மகன் போன்ற கேள்வி யைக்கேட்டபோது அவர் முஸலிம்களிலுர்ருக்கு அடுத்தஊரொன்றைக்கூறி,ஒரு அருமையான பெயரையும் சொல்லி அவரது மருமகன் என்றார்.ஆஹா 1990க்கு முன்னர் மாமா முஸ்லிம்களுடன் சேர்ந்து செய்ததை இப்போது டிப்ரொப் ஆசாமி புதிய முஸ்லிம்களுடன் இணைந்து செய்கின்றார்.என்ன ஒற்றுமை “திருடராய்ப் பார்த்து திரு ந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” என்ற திரைப்பட பாடல் வரிகள் “முஸ்லிம் அகதியின்” காதில் ஒலிப்பதுபோன்ற பிரம்மையுடன் அவ்வடத்தை விட்டும் அகன்றார்.
இன்னுமொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முல்லைத் தீவில் கடற்றொழில் தற்போது குறைவானவர்கள் ஈடுபடுவதினால் மீனுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அதிக விலையாக கிலோ ஒன்று 300 ரூபாயும் விற்கப் படுவதையும்காணமுடிகிறது.எனவே கறித்தேவைக்காக மாடொன்றை விலை யாகவாங்கி அதை இறைச்சியாகப்பயன்படுத்தும்போது கிலோ 200 ரூபாவுக்கும் குறைவாகவே முடிகிறது்.வருமானம் தற்போது குறைவாக உள்ளதன் காரணமாக முஸ்லிம்கள் இப்படிச்செய்கின்றனர்.பௌத்தமதம் இதை விரோதமாகப் பார்ப்பதி னாலும், இதற்கு முல்லைத்தீவில் இப்போதுஅனுமதி இல்லை என்பதினாலும். இப்படியானவர்களும் காவல்தறையினரால் கைது செய்யப்படும் போது இவர்க ளையும் திருடர்களாகவே சமூகம் பார்க்கிறது. பேசுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும். எனையமாவட்டங்களைப்போலில்லாது முல்லைத் தீவில் உற்பத்தியாகும் மாட்டிறைச்சி தரம் கூடியதாகவுள்ளதுடன் மாட்டின் விலையும் அரைவாசியாகவும் காணப்படுகின்றது.இதன் காரணமாக இத்தொழி லுடன் தொடர்புடையவர்களும்,வேறு செல்வாக்குடைய வர்களும் இணைந்து அரசஅனுமதி பெற்று மாடுகளை அடுத்த மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பதன்மூலம் அதிக இலாபமடைவதனையும் காணமுடிகிறது.இதே செல்வாக்குகளுடன் மாடுதிருடுபவர்களும் பயன்பெற வாய்ப்புள்ளது. மேலும் முல்லைத்தீவில் பெறுமதியுடைய ஆயிரக்கணக்கான மாடுகள் உரிமை யாளரில்லாமல் அலைந்துதிரிகிறது. மாலையானதும் தமது பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களக்கருகில் முகாமிடுவதையும் காணும்போது புதுமையாக வுள்ளது.இப்படியான மாடுகளை முல்லைத்தீவிலுள்ள ஏனைய சமூகத்தினரும் முஸ்லிம்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதனையும் அறியமுடிகிறது. ஆகஇவ்வாறான செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு முஸ்லிம்களை மட்டும் குறைகூறமுடியாது.காரணம் இச்செயற் பாடுகளுக்கு ஏனைய முல்லைத்தீவு சமூகத்தவர்களின் பங்களிப்பும்,வெளி மாவட்ட முஸ்லிம்களின் பங்களிப்பும் உண்டென்பதை “முஸ்லிம் அகதி”சுட்டிக் காட்ட விரும்பகிறது.
1990ம் ஆண்டு முஸ்லிம்களனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளால் முல் லைத்தீவை விட்டும் வெளியேற்றப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். அக்காலகட்டத்தில் அதிக மாடுவளர்பாளர்கள் அங்குகாணப்பட்டனர். வெளி யேறும் போது முஸ்லிம்களில் அதிகமானவர்கள் மாடுகளை அப்படியே விட்டு விட்டு வந்தனர். சிலர் வவனியாமாவட்ட எல்லைவரை கொண்டு சென்று அப்பால் முடியாது விட்டுசென்றவர்களுமுண்டு.சில்ர் ஏனைய சமூக நண்பர் களிடம் கொடுத்து விட்டுவந்தவர்களுமுண்டு.
1990ம் ஆண்டில் பத்துமாடுகளை ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் அதில் ஆறு பசுக்களாவது இருந்திருக்கும். இப்படியான ஒருசிறிய பட்டிமாடுகளை முல்லைத் தீவில்விட்டு சென்றிருந்தால் இருபது வருடங்களின் பின்னர் அந்தப்பட்டியில் குறைந்தது 1000 மாடுகளாகவாவது பெருக்கமடைய வாய்ப் புள்ளது.ஆக 1990 ல் முஸ்லிம்களுக்கு சொந்தமாவிருந்த மாடுகளின் எண்ணிக்கை 3000இற்கும் அதிகமாகும் அப்படியாயின் அதன் பெருக்கம் இன்று எவ்வளவு என்பதனை நீங்களே கண்கிட்டுக்கொள்ளுங்கள். முஸ்லிம்கள் தாம்பிறசமூக நண்பர்களிம் ஒப்படைத்து விட்டுவந்த மாடுகளை தற்போது சென்று கேட்ட பொழுது அவர்கள் கூறியபதில் நீங்கள் போனது்ம் அம்மாடுகளை யெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுச்சென்றுவிட்டார்கள்.அதுஉண்மை யாகவும் இருக்கலாம். அதை பொய்யென எண்ணிய முஸ்லிம்கள் சிலர் நண்பர் களின் மாடுகளை தமதென உரிமைகொண்டாடபுறப்பட்டுமுறண்பாடுகளை வளர்த்தக்கொண்டனர். உண்மை யென எடுத்துக்கொண்டால் இன்று முல்லைத்தீவு முஸ்லிம் பிரதேசங்களிள் காணப்படும் உரிமைகோரப்படாத ஆயிரக்கணக்கான மாடுகளில் முஸ்லிம்க ளுக்கும் உரித்துடைய மாடுகளும் காணப்படலாமல்லவா? எதுஎப்படியிருப் பினும் எதையும் உரியவழிகளின் மூலமே பெற்றுக்கொள்ள முடியுமெனவும், இதற்கு அரசியல் வாதிகள்?,புத்திஜீவிகள், மதகுருமார்கள்,அரச அதிகாரிகள் பாதகாப்பு சார்பான அதிகாரகளின் ஒற்றுழைப்பும்,ஆதரவும், ஆலோசனையும் நிச்சயம் தேவையென “முஸ்லிம் அகதி” கருதுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.