வீரகேசரி இணையம் 8/22/2011 6:42:07 PM | 7Share |
![]() |
இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும்.
'மெம்டோ பிரிண்டிங்' என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன.
ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது.
மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதனால் இவ்வுபகரமானது பாரிய பங்களிப்புச் செய்யுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சந்தைப்படுத்துவதற்காக லிதுவேனிய நாட்டு நிறுவனமொன்றுடன் இச்சாதனத்தினை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். ___ E-mail to a friend

நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.