Tuesday, August 23, 2011

புத்தளத்தில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தின் துக்கத்தில் “வடமாகாண முஸ்லிம் அகதிகள்”

வயம்ப அபிவிருத்தி வங்கியின் முன்னால் இது காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
புத்தளம் நகரசபை முன்னிலையில் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

புத்ததளம் பதிய பஸ் நிலையத்தின் முன்பு இது காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
புத்தளத்தில் நடந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தின் துக்கத்தில் வடமாகாண முஸ்லிம் அகதிகளும் பங்கு கொள்கின்றனர்.நிராயுதபாணியான அப்பாவி அரச உத்தியோகத்தரை கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு  பிரதி உபகாரமாக எதுவும் இருக்கப் போவதில்லை. முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மட்டுமே அடுத்த சமூதாயத்தினரின் மனதில் நிலைத்து நிற்கப்போகிறது.நாம் முஸ்லிம்களென தற்புகளுடன் பீத்திக் கொண்டால் மட்டும் போதாது.மாறாக நாம் உண்மை முஸ்லிம்களாக வாழ வேண்டும்.

எந்தக் குழந்தையும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும் போது அது ஏகத்துவக் கொள்கையை ஏற்றவனாகவோ.அல்லது ஏற்றவளாகவோதான் வருகிறது.பின் அக்குழந்தை பெற்றோரின் குறைபாடு காரணமாகவோ,சூழல் காரணமாகவோ ,சமூகத்தில் வெறுக்கப்பட்டவனாக குடிகாரனாக, கொலைகாரனாக.திருடனாக, மோசடி காரனாக மாற்றமடைகின்றான்.
 நமது சமூகத்தை பொறுத்த வரையில் சூழலென்பது குழந்தையின் நண்பர்கள்,பாடம் சொல்லித்தரும் போதகர்கள்,பள்ளிவாசல் நிர்வாகிகள், அரசியல் வாதிகள்,சமூகத்தலைவர்கள்,உலமாக்கள் என்று கூறிக்கொண்டு போகலாம். இவர்களெல்லாம் சூழலிலுள்ளவர்கள்தான்.இவர்கள் தமது சூழலிலுள்ள குழந்தைகளின் செயற்பாடுகளை கவனித்து நேர்வழியில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்புக்களை உடையவரென எண்ணி செயற்படவேண்டும்.என்னுடைய பிள்ளை மட்டும் நல்ல வனாக,கற்றவனாக, செல்வந்தனாக வந்தால் போதுமென்று  எண்ணி இருந்து விடமுடியாது.அப்படி இருந்தாலோ.அல்லது நமது சுயநலனுக்காக தவறான வழியில் அவர்களை பயன்படுத்தினாலோ  அவர்கள் கட்டுப்பாடற்று இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அது முழுமையாக முஸ்லிம் சமூக்தையே  பாதிக்கும் என்பதை   மறந்து விடலாகாது.இப்படுகொலையை சிலரின் அல்லது தனிநபரின் செயலெனக் கூறி இச்சமூகம் தப்பித்துவிட முடியாது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.